Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

செவ்வாய், 16 மார்ச், 2021

குற்றம் குற்றமே: வெஜ் பீட்சாவுக்கு பதில் இது டெலிவரி- ரூ.1 கோடி இழப்பீடு கேட்டு பெண் வழக்கு!

வெஜ் பீட்சா ஆர்டர் செய்த பெண்

ஆன்லைன் ஆர்டர் பழக்கம் மக்களிடையே அதிகரித்துக் கொண்டே வருகிறது. மளிகை பொருட்களில் தொடங்கி, மருந்து, உணவு, உடை, கேட்ஜெட் பொருட்கள் உட்பட அனைத்தும் ஆன்லைனில் கிடைக்கிறது. குறிப்பாக இந்த கொரோனா காலத்தில் ஆன்லைன் ஆர்டர் தேவை அதிகரிதுள்ளது என்றே கூறலாம்.

ஆன்லைன் ஷாப்பிங் முறை

கொரோனா காலத்தில் ஆன்லைன் ஷாப்பிங் முறை என்பது சற்று கூடுதலாகவே அதிகரித்துள்ளது. கொரோனா தொற்று பரவல் அச்சுறுத்தல் காரணமாக மக்கள் நேரில் சென்று ஷாப்பிங் செய்ய தயங்கி வருகின்றனர். இதையடுத்து ஆன்லைன் ஷாப்பிங் வழியாக பொருட்களை வாங்கவே ஆர்வம் காண்பித்து வருகின்றனர்.

அதிகரிக்கும் ஆன்லைன் ஆர்டர் பழக்கம்

குறிப்பாக ஆன்லைன் டெலிவரிகளில் முக்கியமான ஒன்று உணவு வகைகள். பல்வேறு ஆன்லைன் டெலிவரி உணவு நிறுவனங்கள் போட்டிப் போட்டுக் கொண்டு சலுகைகளோடு உணவுகளை டெலிவரி செய்து வருகின்றன. கொரோனா பரவல் காரணமாக நேரில் சென்று பொருட்களை வாங்க மக்கள் அச்சம் கொண்டு ஆன்லைனில் ஆர்டர் செய்யத் தொடங்கினர். இதன்மூலமாக ஏராளமானோரிடம் ஆன்லைன் ஆர்டர் பழக்கம் தொற்றிக் கொண்டது என்றே கூறலாம்.

வெஜ் பீட்சா ஆர்டர் செய்த பெண்

இந்தநிலையில், தீபாலி தியாகி என்ற பெண் ஆன்லைன் மூலம் வெஜ் பீட்சா ஒன்றை ஆர்டர் செய்துள்ளார். அவர் ஆர்டர் செய்த வெஜ் பீட்சாவிற்கு பதிலாக அசைவ பீட்சா டெலிவரி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அந்த பெண் வழக்கு தொடர்ந்துள்ளார். ஆன்லைன் விற்பனை நிலையம் மூலம் சைவ பீட்சா ஆர்டர் செய்ததாகவும் ஆனால் அதற்கு பதிலாக அசைவ பீட்சா டெலிவரி செய்யப்பட்டதாகவும், இதையடுத்து ரூ.1 கோடி இழப்பீடு கோரி சைவ பெண் ஒருவர் நுகர்வோர் நீதிமன்றத்தை அணுகியுள்ளார்.

தீபாலி தியாகி என்ற பெண் தனது மனுவில், மத நம்பிக்கைகள், போதனைகள், குடும்ப மரபுகள், சொந்த மனசாட்சி ஆகியவையின் கீழ் தான் ஒரு தூய சைவ உணவு உண்பவர் என குறிப்பிட்டுள்ளார். உத்தரபிரதேசம் காசியாபாத் பகுதியை சேர்ந்தவர் தீபாலி தியாகி, இவர் தனது குடும்பத்தாருடன் பண்டிகையை கொண்டாடிவிட்டு ஆன்லைனில் அரைமணிநேர பீட்சா டெலிவரி என்று காண்பிக்கப்பட்ட ஆன்லைன் தளத்தில் ஆர்டர் செய்துள்ளார்.

சைவ பீட்சா ஆர்டர் செய்து 30 நிமிட டெலிவரி நேரத்திற்கு தாமதமாக வழங்கப்பட்டதாக அந்த பெண் குறிப்பிட்டுள்ளார். பீட்சாவை பெற்றுக் கொண்டு அதை பிரித்து உண்ணத் தொடங்கியுள்ளார். அதில் காளானுக்கு பதிலாக இறைச்சி இருந்ததாக கூறப்படுகிறது. இதை உணர்ந்த அந்த பெண் கடுப்பாகி புகார் அளித்துள்ளார். இதுகுறித்து அவரது வழக்கறிஞர் ஃபர்ஹத் வார்சி நுகர்வோர் நீதிமன்றத்தை அணுகியுள்ளார். அதில் தியாகி வாடிக்கையாளர் சேவை மையத்தை அழைத்து அவர்களின் அலட்சிம் மற்றும் தூய்மையான சைவ உணவு உண்பவர்களுக்கு அசைவ பீட்சா டெலிவரி செய்தது குறித்து புகார் அளித்துள்ளார்.

இதையடுத்து பீட்சா கடையின் மாவட்ட மேலாளர் என்று குறிப்பிட்டு ஒருவர் அழைப்பு விடுத்ததாகவும் அதில் புகார்தாரர்களின் முழு குடும்பத்திற்கும் பீட்சா இலவசமாக வழங்குவதாகவும் தெரிவித்தார் என குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து இது எளிய வழக்கு அல்ல எனவும் புகார்தாரர் மத நடைமுறைகளை கெடுத்துவிட்ட செயல் எனவும் அவர்கள் நிரந்தரமான மன வேதனையில் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். வெஜ் பீட்சாவுக்கு பதிலாக அசைவ பீட்சா டெலிவரி ஆனதால் தீபாலி தியாகி ஒரு கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக