----------------------------------------
கடி ஜோக்ஸ்...!!
----------------------------------------
வகுப்பில் ஆசிரியரின் கேள்விக்கு மாணவனின் பதில்...
ஆசிரியர் : எந்த போரில் திப்பு சுல்தான் உயிரிழந்தார்?
மாணவன் : அவரது கடைசி போரில்.
ஆசிரியர் : இந்திய சுதந்திரத்திற்கான பிரமாண பத்திரம் எங்கே கையெழுத்திடப்பட்டது?
மாணவன் : காகிதத்தின் அடிப்பகுதியில்.
ஆசிரியர் : சுபநிகழ்ச்சிகளில் வாழைமரம் எதற்காக கட்டப்படுகிறது?
மாணவன் : கீழே விழாமல் இருப்பதற்கு.
ஆசிரியர் : விவாகரத்திற்கான முக்கிய காரணம் என்ன?
மாணவன் : திருமணம் தான்.
ஆசிரியர் : மகாத்மா காந்தி எப்போது பிறந்தார்?
மாணவன் : அவரது பிறந்தநாளன்று.
ஆசிரியர் : தாஜ்மஹால் யாருக்காக... யார் கட்டினார்?
மாணவன் : சுற்றுலா பயணிகளுக்காக... கொத்தனாரால் கட்டப்பட்டது.
ஆசிரியர் : 8 மாம்பழங்களை 6 பேருக்கு எப்படி பிரித்துக்கொடுப்பது?
மாணவன் : ஜுஸ்போட்டு 6 டம்ளர்களில் சரியான அளவாக கொடுக்கலாம்.
----------------------------------------
சொற்களை கண்டுபிடியுங்கள்...!!
----------------------------------------
1. பு தி லி த மா த் சா த் ன ன
2. அ இ ரா ங் டி க ம லி ள் க
3. க டு டி க ப ட து ண் பி க் ப் ட்
4. வு டி மு ன யா தி று இ
5. அ ன் டை தோ வி ல் ந் தே
விடை :
1. புத்திசாலித்தனமான
2. இராமலிங்க அடிகள்
3. கண்டுபிடிக்கப்பட்டது
4. இறுதியான முடிவு
5. தோல்வி அடைந்தேன்
----------------------------------------
விடுகதைகள்...!!
----------------------------------------
1. கல்லுக்கும் முள்ளுக்கும் அஞ்சாதவன், பள்ளநீரைக் கண்டு பதைபதைக்கிறான். அது என்ன?
2. தாழ்ப்பாள் இல்லாத கதவு, தானாக மூடி திறக்கும் கதவு. அது என்ன?
3. காலடியில் சுருண்டிருப்பாள், கணீர் என்று குரலிசைப்பாள். அவள் யார்?
4. வித்தில்லாமல் விளையும், வெட்டாமல் சாயும். அது என்ன?
5. அடர்ந்த காட்டின் நடுவே ஒரு பாதை. அது என்ன?
விடை :
1. நெருப்பு
2. கண் இமை
3. மெட்டி
4. வாழை
5. தலை வகிடு
ரிலாக்ஸ் ப்ளீஸ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக