Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

புதன், 17 மார்ச், 2021

சீமானின் ஒரு ஆண்டு வருமானம் ஆயிரம் தானா..? புதிய பிராமண பத்திரம் தாக்கல்…!

 சீமான் பேச்சை அவர் தொண்டர்கள் நம்ப காரணம் என்ன ? | கேள்வி – பதில் ! | வினவு

திருவொற்றியூரில், தேர்தல் அலுவலரை நேரில் சந்தித்து, சீமான் சார்பில் அக்கட்சியின் நிர்வாகிகள் புதிய பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்யவுள்ளனர். 

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிடுகிறார். இவர், நேற்று முன்தினம் வேட்புமனு தாக்கல் செய்தார். சொத்து விவரங்கள் அடங்கிய பிரமாண பத்திரத்தையும் அவர் அளித்திருந்தார். அதில் 2019-2020-ல் சீமானின் ஆண்டு வருமான வெறும் ரூ.1,000 என குறிப்பிடப்பட்டிருந்தது.

ஆண்டு வருமானம் ரூ.1,000 என்றால், அவரது ஒருநாள் வருமானம், ரூ.2.77 பைசா தானா என்று பலரும் விமர்சித்து வந்தனர். இதனையடுத்து, தேர்தல் அலுவலகத்தில்  தாக்கல் செய்யப்பட்டிருந்த பிரமாண பத்திரத்தில் எழுத்து பிழை இருப்பதாகவும், திருத்தப்பட்ட புதிய பிரமாண பாத்திரம் தாக்கல் செய்யப்பட உள்ளதாகவும் நாம் தமிழர் கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருவொற்றியூரில், தேர்தல் அலுவலரை நேரில் சந்தித்து, சீமான் சார்பில் அக்கட்சியின் நிர்வாகிகள் புதிய பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்யவுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக