மோட்டோரோலா நிறுவனம் மிக விரைவில் மோட்டோ ஜி 100 என்ற புதிய ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகப்படுத்தவுள்ளது. மோட்டோரோலா நிறுவனம் தனது இடைப்பட்ட ஸ்மார்ட்போனை ஜெர்மனியில் அறிமுகம் செய்வதாக டீஸ் செய்துள்ளது. கசிந்த தகவல்களின்படி, ஸ்மார்ட்போன் மார்ச் 25 ஆம் தேதி உலகளவில் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்போனின் அறிமுகத்திற்கு முன்னதாக, சாதனத்தின் சில முக்கிய விபரங்கள் இணையத்தில் கசிந்துள்ளது.
புதிய மோட்டோ ஜி 100 ஸ்மார்ட்போனின் போஸ்டர்
சமீபத்திய அறிமுகத்திற்கு தயாராகி வரும் இந்த புதிய மோட்டோ ஜி 100 ஸ்மார்ட்போனின் அதிகாரப்பூர்வ போஸ்டர் புகைப்படங்கள் தற்பொழுது வெளியாகியுள்ளது. இதில் மோட்டோ ஜி 100 போனின் முழுமையான வடிவமைப்பு மற்றும் டிசைன் விபரங்கள் நமக்கு துல்லியமாகத் தெரிகிறது. டிப்ஸ்டர் இவான் பிளாஸ் வரவிருக்கும் மோட்டோரோலா ஸ்மார்ட்போனின் முழுமையான விவரக்குறிப்பை வெளியிட்டுள்ளார். கசிந்த தகவலின் படி, மோட்டோரோலா ஜி 100 என்பது சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்ட மறுபெயரிடப்பட்ட மோட்டோ எட்ஜ் எஸ் ஆகும்.
மோட்டோ ஜி 100 சிறப்பம்சம், விவரக்குறிப்பு
இந்த சாதனம் குவால்காம் ஸ்னாப்டிராகன் 870 SoC உடன் வருகிறது. மோட்டோ ஜி 100 சிறப்பம்சம், விவரக்குறிப்பு மற்றும் பிற விவரங்களை இப்போது பார்க்கலாம். மோட்டோ ஜி 100 ஸ்மார்ட்போன் மாடல் 6.7-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்புடன் வெளிவந்துள்ளது. இது 2520×1080 பிக்சல் தீர்மானம் கொண்ட 90Hz டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இது எச்டிஆர் 10 ஆதரவு, சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாகக் கொண்ட கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு அம்சத்துடன் வெளியாகிறது
ஸ்டோரேஜ் மற்றும் கேமரா
இந்த மோட்டோரோலா ஜி 100 ஸ்மார்ட்போனில் 6ஜிபி / 8ஜிபி ரேம் அல்லது 12 ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி / 256ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் இடம்பெற்றும் என்று கூறப்படுகிறது. கூடுதல் ஸ்டோரேஜ் விருப்பத்திற்காக இதில் எஸ்.டி கார்டு அம்சத்துடன் ஸ்டோரேஜ் நீட்டிப்பு ஆதரவும் வழங்கப்பட்டுள்ளது. இது ஆண்ட்ராய்டு 11 சார்ந்த Motorola MyUI இயங்குதளத்தைக் கொண்டுள்ளது. கேமராவை பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் 64எம்பி பிரைமரி சென்சார், 16எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ், 2எம்பி டெப்த் சென்சார், ToF stereoscopic டெப்த் லென்ஸ் என மொத்தம் நான்கு கேமராக்களுடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
5000 எம்ஏஎச் பேட்டரி
முன்பக்கத்தில் 16எம்பி மற்றும் 8எம்பி கொண்ட டூயல் செல்பீ கேமரா வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மோட்டோரோலா எட்ஜ் எஸ் ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரியுடன் வெளிவர வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது 20 வாட் டர்போ சார்ஜிங் ஆதரவுடன் வெளிவர கூடும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 5 ஜி, டூயல் 4 ஜி, வோல்டிஇ, VoWi-Fi, வைஃபை 6, புளூடூத் 5.2, ஜிபிஎஸ் மற்றும் ஒரு யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளுடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விலை விபரம் என்ன ஆச்சு?
மோட்டோரோலாவின் இந்த புதிய மோட்டோ ஜி 100 ஸ்மார்ட்போன் பற்றிய முக்கிய அம்சங்கள் மற்றும் விபரங்கள் இப்போது இணையத்தில் வெளியாகியுள்ளதை நாம் பார்த்தோம், ஆனால், இன்னும் இதுவரை இந்த ஸ்மார்ட்போனை நாம் இந்தியாவில் என்ன விலையில் எதிர்பார்க்கலாம் என்பதற்கான உறுதியான தகவல் எதுவும் கிடைக்கவில்லை. வரும் 25 ஆம் தேதி இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம் ஆகிறது என்பதனால் இதன் விலை பற்றிய தகவல்கள் நாளை அல்லது மறுதினம் வெளியிடப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக