
ஓலா பயண சேவை எண் என்று நம்பி மும்பையைச் சேர்ந்த பெண் ஒருவர் 52,260 இழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது. மும்பையில் உள்ள டார்டியோ (Tardeo) பகுதியைச் சேர்ந்த 42 வயதான பெண் ஒருவர் அண்மையில் ஆன்லைன் மூலமான டாக்சி கேப் புக்கிங் செய்துள்ளார். புக்கிங் செய்த பயண சேவையில் எதிர்பாராத விதமாக சிக்கல்களை சந்தித்துள்ளார்.
ஜஸ்ட் டயலில் கிடைத்த போலி எண்
சிக்கலைச் சரி செய்ய, அந்த பெண்மணி உடனே கஸ்டமர் கேர் எண்ணை ஆன்லைனில் தேடி உள்ளார். 'ஜஸ்ட் டயலில்' இருந்து தனக்கு கிடைத்த பயனர் சேவை எண்ணிற்கு அந்த பெண் அழைப்பு மேற்கொண்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஓலா கேப் வாடிக்கையாளர் பராமரிப்பு எண் என்று ஜஸ்ட் டயல் இல் குறிப்பிட்டிருந்ததனால் நம்பி அழைப்பை மேற்கொண்டதாக அவர் கூறியுள்ளார்.
பாதிக்கப்பட்ட பெண் கூறியது என்ன தெரியுமா?
பாதிக்கப்பட்ட பெண் கூறியதாவது, " ஓலாவின் பயனர் சேவை எண் என்று ஆன்லைனில் தேடிக் கிடைத்த எண்ணிற்கு அழைப்பு விடுத்தேன், எதிர் முனையில் பயனர் சேவை அதிகரிப்போம் பேசிய நபர் என்னிடம் 'குயிக் சப்போர்ட்' ஆப்ஸை பதிவிறக்கம் செய்யுமாறு வலியுறுத்தியுள்ளார். அதன் படி அந்த பெண் செய்த பின்னர் அவரின் வங்கி விவரங்களை மோசடிகாரகள் எடுத்து, சட்டவிரோதமாக ரூ. 53,260திருடப்பட்டுள்ளது.'' என்று அப்பெண் தெரிவித்துள்ளார்.
போலீசார் தீவிர விசாரணை
அந்த பெண் பயன்படுத்திய வங்கி, கோட்டக் மஹிந்திரா வங்கி என்பது குறிப்பிடத்தக்கது. மும்பை, தானேவில் ஜிபி சாலையில் உள்ள பயந்தர்படாபகுதியில் உள்ள அவரின் உறவினர் வீட்டில் இருந்து தனது வீடு திரும்ப அந்தப் பெண் ஓலா கேப் புக்கிங் செய்யும் போது இந்த சம்பவம் நடந்தது என்று அவர் கூறியுள்ளார். இந்த ஆன்லைன் மோசடி குறித்து அப்பெண் போலீஸில் புகார் அளித்து, எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை போலீசார் விசாரித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிகரிக்கும் ஆன்லைன் மோசடி வழக்குகள்
இந்தியாவில் சமீபத்தில் இது போன்ற ஆன்லைன் மோசடி வழக்குகள் அதிகரித்துள்ளது. குறிப்பாக இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் இதேபோன்ற ஒரு சம்பவம் நடந்தேறியது, அந்த நேரத்தில் ஆன்லைன் மூலம் ஒரு நபரிடமிருந்து மோசடி காரர்கள் சுமார் 22,000 ரூபாயை அபேஸ் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. முன்பின் தெரியாத நபர்களிடம் உங்களின் தனிப்பட்ட தகவல் மற்றும் வங்கி தொடர்பான எந்தவொரு விஷயத்தையும் பகிர்ந்துகொள்ளாதீர்கள்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக