அபெக்ஸ் லெஜண்ட்ஸ் மொபைல் கேம் நீண்ட காலமாக உருவாக்கப்பட்டு வருகிறது. ஒருவழியாக இப்போது இந்த புதிய மிரட்டலான கேம் கூகிள் பிளே ஸ்டோரில் முன் பதிவிற்குக் கிடைக்கிறது. EA நிறுவனத்தின் அறிவிப்புப் படி இதன் வெளியீடு இப்போது மிகவும் அருகில் வந்துள்ளது. இந்த பேட்டில் ராயல் தலைப்பு iOS க்கும் வருவதற்கு இன்னும் சில காலம் எடுத்துக்கொள்ளும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நேரத்தில், இந்தியா மற்றும் பிலிப்பைன்ஸை தளமாகக் கொண்ட வீரர்கள் மட்டுமே முன் பதிவு செய்யத் தகுதியுடையவர்கள் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த இரண்டு முக்கிய, அடர்த்தியான மக்கள்தொகை கொண்ட பகுதிகளில் அபெக்ஸ் லெஜண்ட்ஸ் மொபைல் கேம் வெளியிடப்படுகிறது. இங்கு கிடைக்கும் வரவேற்பைப் பொறுத்து மற்ற பகுதிகளைச் சேர்ந்த வீரர்களும் இந்த கேமை விளையாட EA அனுமதிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
கணினி மற்றும் கன்சோல்களில் அபெக்ஸ் லெஜெண்ட்ஸின் வெற்றியின் அடிப்படையில், அதன் மொபைல் பதிப்பு தற்பொழுது இந்தியாவில் புதிய ஹைப்பை உருவாக்கியுள்ளது என்று தான் கூற வேண்டும். அபெக்ஸ் லெஜண்ட்ஸ் மொபைல் கேம் இந்தியாவில் இலவசமாக பதிவிறக்கம் செய்ய கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், கேமின் டெஸ்க்டாப் / கன்சோல் பதிப்பைப் போலவே, ஸ்கின்கள், பேட்டில் பாஸ்கள் போன்ற சில தனித்துவமான அம்சங்களுக்கு வழக்கம் போல் பயனர்கள் சில மைக்ரோ டிரான்ஸாக்ஷன்களை செய்ய வேண்டியதிருக்கும்.
இது தொடுதிரை அம்சம் கொண்ட டச் சாதனங்களுக்காக அப்பெக்ஸ் லெஜண்ட்ஸ் மொபைல் குறிப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளதால், தளங்களில் கிராஸ் பிளே அக்ராஸ் முடக்கப்பட்டுள்ளது. மூன்றாம் தரப்பு கட்டுப்படுத்திகளுக்கான ஆதரவு இந்த கட்டத்தில் அனுமதிக்கப்படுமா என்பது இன்னும் சரியாக தெரியவில்லை, ஆனால், கேமின் அறிமுகம் மிக நெருக்கமாக இருப்பதனால், இதைப் பற்றிய தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கேமிங் தளத்தைப் பொருத்தவரை, அவற்றில் பெரும்பாலானவை அப்பெக்ஸ் லெஜண்ட்ஸ் அசல் வெர்ஷனுக்கும் புதிய மொபைல் வெர்ஷனுக்கும் சில வேறுபாடுகள் இறுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், அதன் முழு பதிப்பும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும். இது ஒரு மொபைல் பாதிப்பு என்பதனால் சில விளையாட்டு இயக்கவியல் மொபைல் பதிப்பில் மாற்றப்பட வேண்டும். ஒப்பீட்டளவில் குறைந்த சக்தி கொண்ட வன்பொருள் மொபைல் சாதனங்கள் இயங்குவதற்கு ஈடுசெய்ய, கிராஃபிக் நம்பகத்தன்மையில் சில மாற்றங்கள் இருக்கும் என்று கூறப்படுகிறது.
கேஜெட்டுகளும் - தொழில்நுட்பங்களும்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக