Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

வெள்ளி, 16 ஏப்ரல், 2021

சிரிக்க வைக்கும் குட்டிக்கதை.. இது எப்படி இருக்கு? - ரிலாக்ஸ் ப்ளீஸ்...!!

------------------------------------

சிதறடிக்கும் ஜோக்ஸ்...!!

------------------------------------

 

பாபு : அந்த அணை ஒரு நாளிலேயே ஆறு அடி உயர்ந்துருச்சின்னு கட்டுக்கதை விடுறாங்க பேப்பர்ல...!

கோபு : எப்படி சொல்ற?

பாபு : நான் தினமும் அணையை பார்க்கிறேன். கொத்தனார் அணை எப்படி கட்டினாரோ, அப்படி தான் இருக்கு.

கோபு : 😛😛

------------------------------------

 

சந்தோஷ் : உங்க படைப்புகளில் எனக்கு மிகவும் பிடித்தது எது தெரியுமா?

கதாசிரியர் : எதுங்க?

சந்தோஷ் : உங்க நாலாவது பெண் மேனகா தான்.

கதாசிரியர் : 😠😠

------------------------------------

ஒரு குட்டிக்கதை...

------------------------------------

குமாரும், அவரது நண்பர் சுகுமாரும் சினிமா பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

 

உயரமான கட்டடத்தின் உச்சிக்குச் சென்ற ஒரு ஆள் அங்கிருந்து குதிக்கப் பார்ப்பதாக ஒரு காட்சி. பரபரப்பான இந்தக் கட்டத்தில் இடைவேளை விடப்பட, வெளியே வந்த இருவரும் இந்த காட்சி பற்றியே விவாதித்தார்கள்.

 

பேச்சுவாக்கில் 'அந்த ஆள் கீழே குதிக்கப் போகிறான் கால் எலும்பு முறியப் போகுது" என்று பந்தயமே கட்டினார் சுகுமார்.

 

குமாரும் விடவில்லை. 'பந்தயத்துக்கு நானும் தயார். அவன் கண்டிப்பாக கீழே குதிக்கமாட்டான்" என்றார் நம்பிக்கையோடு.

 

பந்தயத்தில் தோற்பவர், வெல்பவருக்கு விருந்து தரவேண்டும் என்று முடிவு செய்து கொண்டு இருவரும் தியேட்டருக்குள் போனார்கள்.

 

குமாருதான் பாவம்... அந்த ஆள் உச்சியிலிருந்து கீழே குதித்துவிட்டான்.

 

பந்தயத்தின்படி, வென்ற சுகுமாருக்கு விருந்து வைத்தார் குமார்.

 

அப்போது சுகுமார்,

 

'உங்களை நான் ஏமாத்திட்டதா என்னோட மனசாட்சி உறுத்துது. அந்த ஆள் கீழே குதிக்கப்போறது எனக்கு முன்னாடியே தெரியும். படத்தை நான் ஏற்கனவே பார்த்துட்டேன்" என்றார்.

 

அதற்கு குமார் வருத்தத்தோடு சொன்னார்,

 

'நானும்தான் படத்தைப் பார்த்திருந்தேன். ஆனால் அந்த முட்டாள் மறுபடியும் இப்படிக் கீழே குதிப்பான்னு துளிகூட நான் எதிர்பார்க்கலை".

இது எப்படி இருக்கு?

தாகம் ஏற்பட்டால், வாய் ஒட்டுவது ஏன்?

.

.

.

.

.

தாகம் என்பதில் கம் இருப்பதால்...


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!