Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

வெள்ளி, 16 ஏப்ரல், 2021

இது கம்பளி மூட்டை இல்ல.. கரடிக் குட்டி!.. ஆற்றின் நடுவே நடந்த சுவாரஸ்யம் - ரிலாக்ஸ் ப்ளீஸ்..!!

--------------------------------------------------------------------

வாங்க சிரிக்கலாம்...!!

--------------------------------------------------------------------

ஆற்றின் நடுவே கம்பளி மூட்டை ஒன்று மிதந்து சென்றது. உள்ளே ஏதாவது பொருள் இருக்கும் என்கிற ஆசையில் ஒருவன் நீந்தி சென்று அதைப் பற்றுகிறான்

நீண்ட நேரம் ஆகியும் கரை திரும்பவில்லை. நடு ஆற்றில் போராடிக் கொண்டிருக்கிறான்.

கரையில் நின்று கொண்டிருக்கிற நண்பர்கள் கத்துகிறார்கள்...

நண்பா... கம்பளி மூட்டையை இழுத்துக் கொண்டு உன்னால் வர முடியவில்லை என்றால் பரவாயில்லை... அதை விட்டுவிடு!

ஆற்றின் நடுவே இருந்து அவன் அலறுகிறான்... நான் அதை எப்பவோ விட்டுட்டேன்... இப்ப இதுதான் என்னை விடமாட்டேங்குது

ஏன்னா, இது கம்பளி மூட்டை இல்ல. கரடிக் குட்டி!...😳😱

--------------------------------------------------------------------

இன்றைய கடி...!!

--------------------------------------------------------------------

எழுத பயன்படாத மை எது?

.

.

.

.

.

எருமை.

--------------------------------------------------------------------

சிரிக்க... சிந்திக்க...

--------------------------------------------------------------------

நர்சரி பள்ளி ஒன்றின் உணவறையில் ஒரு கூடை நிறைய ஆப்பிள்கள் வைக்கப்பட்டிருந்தன. அந்தக் கூடையின் மேல்,

'ஒன்றுக்கு மேல் எடுக்காதீர்கள், கடவுள் பார்த்துக்கொண்டிருக்கிறார்" என எழுதி இருந்தது.

சற்று தொலைவில் ஒரு பெட்டி நிறைய சாக்லேட்டுகள் வைக்கப்பட்டிருந்தன. அந்தச் சாக்லேட் பெட்டியின் மீது ஒரு குழந்தை பின்வருமாறு எழுதியது:

'எவ்வளவு வேண்டுமோ எடுத்துக்கொள்ளுங்கள்... கடவுள், ஆப்பிளைப் பார்த்துக்கொண்டிருக்கிறார்!"

--------------------------------------------------------------------

பிறமொழிச் சொற்கள் - தமிழ் சொற்கள்

--------------------------------------------------------------------

1. அதிபர் - தலைவர்

2. உற்சாகம் - ஊக்கம்

3. அந்நியர் - அயலார்

4. கவனம் - கருத்து

5. மன்னித்துக்கொள் - பொறுத்துக்கொள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!