Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

வெள்ளி, 16 ஏப்ரல், 2021

வேலையோ, உடற்பயிற்சியோ செய்யக்கூடாது... ஆனால் எடையும் கூடக்கூடாது எப்படி? - ரிலாக்ஸ் ப்ளீஸ்...!!

------------------------------------------------------

கலக்கலான ஜோக்ஸ்...!!

------------------------------------------------------

 

நோயாளி : டாக்டர் இப்போதெல்லாம் என்னால் சிந்திக்கவே முடிவதில்லை, என்ன செய்வது?

டாக்டர்: எவ்வளவு காலமாய் இப்படி இருக்கிறது?

நோயாளி : சரியாகச் சொல்ல வேண்டுமானால் நான் கல்யாணம் செய்து கொண்டது முதல்.

டாக்டர்: இல்லை. உங்களின் கணிப்பு தவறானது. இது நீங்கள் கல்யாணம் செய்து கொள்வதற்கு முன்பே நிகழ்ந்திருக்கிறது. ஆனால், நீங்கள் இப்போது தான் உணர ஆரம்பித்திருக்கிறீர்கள். முன்னமே நீங்கள் சிந்திதிருந்தால் உங்களின் கல்யாணமே நிகழ்ந்திருக்காது.

நோயாளி : 😄😄

------------------------------------------------------

இது எப்படி இருக்கு?

------------------------------------------------------

 

கணவன் தனது மனைவிக்கு ஒரு எஸ்எம்எஸ் அனுப்பினான்.. 

 

டார்லிங், இன்று இரவு நான் லேட்டாக வருவேன். அதற்குள் எனது அழுக்குத் துணிகளை துவைத்து விடு. எனக்குப் பிடிச்சதை சமைத்து வை...

 

மனைவியிடமிருந்து பதில் மெசேஜ் வரவில்லை.

 

சிறிது நேரம் கழித்து மீண்டும் ஒரு மெசேஜ் அனுப்பினான் கணவன்.. டார்லிங் மறந்துட்டேன். எனக்கு சம்பள உயர்வு கிடைத்துள்ளது. உனக்குப் புது கார் வாங்கித் தருகிறேன்...

 

இப்போது மனைவியிடமிருந்து உடனே பதில் வந்தது.. ஓமைகாட், அப்படியா டியர், உண்மையாகவா...

 

கணவன் இப்போது ரிப்ளை கொடுத்தான்... அதெல்லாம் இல்லை. முதல் மெசேஜில் நான் சொன்னதை நீ செய்யனும்ல, அதான் 2வது மெசேஜ் அப்படி தட்டி விட்டேன்...😜😜

 

------------------------------------------------------

அச்சமின்மை...!!

------------------------------------------------------

 

அக்பரிடம் ஓர் அறிவாளி சவால் விட்டார்.

 

'என் வேலைக்காரன் பெருந்தீனிக்காரன்! அவனை ஒரு மாதம் வைத்திருந்து ஊட்டச்சத்துமிக்க உணவுகளைக் கொடுங்கள்

 

அவன் வேலையோ, உடற்பயிற்சியோ செய்யக்கூடாது.

 

ஆனால் ஒரு கிலோகூட எடை கூடக்கூடாது!" பீர்பால் அரசர் சார்பாக அந்த சவாலை ஏற்றார்.

 

மூன்று வேளைகளும் மகத்தான விருந்து படைக்கப்பட்டது.

 

மாதக்கடைசியில் எடையும் அப்படியே இருந்தது

 

அக்பருக்கு ஆச்சரியம். இது எப்படி சாத்தியம்? என்று கேட்டார்.

 

அதற்கு பீர்பால் சொன்னார்,

 

'அவனுடைய இரவுப்படுக்கையை சிங்கக்கூண்டுக்கு அருகே அமைத்தேன்.

 

கூண்டின் பூட்டு சரியாக இல்லை என்று சொன்னேன்.

 

அச்சம் காரணமாய் ஊட்டச்சத்து உடலில் ஒட்டவில்லை."

 

அச்சமின்மையே ஆரோக்கியம்!✌✌

 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!