----------------------------------------------------------------
சிரிக்கலாம் வாங்க...!!
----------------------------------------------------------------
அருண் : அந்த எழுத்தாளர், கதை எழுதலைன்னா கூட பத்திரிக்கைகாரங்க பணம் அனுப்பி வெச்சிடுவாங்க.
குமார் : எப்படி?
அருண் : இந்த வாரம் கதை அனுப்பாததற்கு நன்றி தெரிவிச்சுதான்...!
குமார் : 😄😄
----------------------------------------------------------------
பாபு : இதுவரை நான் எழுதின கதைகள் எழுவுமே திரும்பி வந்ததே இல்லை..
கோபு : அப்படியா...! வெரிகுட். எப்படி?
பாபு : என் அட்ரஸை எழுதினாத்தானே...!
கோபு : 😖😖
----------------------------------------------------------------
நோயாளி : டாக்டர் வெய்யக்காலம்... ரொம்ப புழுக்கமா இருக்குது... எப்பவும் ஐஸ் கட்டியிலேயே இருக்கணும் போல இருக்கு..
டாக்டர் : அவசரப்படாதீங்க... அதெல்லாம் ஆபரேஷனுக்கு அப்பறம்... ஐஸ் கட்டி என்ன... ஐஸ் பெட்டியிலேயே வெச்சுரலாம்..
நோயாளி : 😳😳
----------------------------------------------------------------
அட அப்படியா?
----------------------------------------------------------------
உடலில் வேகமாக குணமடையும் பகுதி நாக்கு.
ஒரு வாழைப்பழத்தில் 75மூ தண்ணீர் உள்ளது.
ஆந்தைகளுக்கு கருவிழிகள் இல்லை.
ஸ்காட்லாந்தில் 'பனி" என்ற வார்த்தைக்கு இணையாக 421 வார்த்தைகள் உள்ளன.
----------------------------------------------------------------
குறளும்... பொருளும்...!!
----------------------------------------------------------------
அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
பிறவாழி நீந்தல் அரிது.
பொருள் :
அறக்கடலாக விளங்கும் கடவுளின் திருவடிகளைப் பொருந்தி நினைக்கின்றவர் அல்லாமல், மற்றவர் பொருளும் இன்பமுமாகிய மற்ற கடல்களைக் கடக்க முடியாது.
ரிலாக்ஸ் ப்ளீஸ்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக