Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 4 மே, 2021

மாடி வீட்டு மக்களே ஏசி இன்னும் வாங்கலையா? அப்ப இனிமேல் வாங்க வேண்டாம்.! வந்துவிட்டது புதிய கண்டுபிடிப்பு.!

10 கிலோவாட் குளிரூட்டும் சக்தி

யுனைடெட் ஸ்டேட்ஸில் உள்ள இந்தியானா மாநிலத்தில் உள்ள பர்டூ பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஏசிக்கு மாற்றான புதிய கண்டுபிடிப்பாக அல்ட்ரா கூலிங் வழங்கும் ஒரு புதிய அல்ட்ரா வைட் வண்ண பெயிண்டை உருவாக்கியுள்ளனர். இது மிகவும் வெள்ளை நிறமானது என்பதை இதன் பெயரே விளக்கியுள்ளது. இது ஏர் கண்டிஷனர் தேவையை நீக்கிவிடும் என்றும், வரும் காலத்தில் ஏற்படும் காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராட உதவும் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

10 கிலோவாட் குளிரூட்டும் சக்தி

சுமார் 1,000 சதுர அடி பரப்பளவு கொண்ட இடத்தை இந்த அல்ட்ரா வைட் வண்ண பெயிண்ட் மூலம் பூசி நீங்கள் பயன்படுத்தினால், உங்களுக்கு 10 கிலோவாட் குளிரூட்டும் சக்தியைப் பெற முடியும் என்று விஞ்ஞானிகள் மதிப்பிட்டுள்ளனர். இந்த கணக்கு முற்றிலும் உண்மையானது தான் என்று மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பர்டூ பேராசிரியர் சியுலின் ருவான் கூறியுள்ளார். பெரும்பாலான வீடுகள் பயன்படுத்தும் சென்டர் ஏர் கண்டிஷனர்களை விட இது மிகவும் சக்தி வாய்ந்தது என்றும் அவர் குறிப்பிட்டுக் கூறியுள்ளார்.

வரும் காலத்தில் ஏசி தேவையில்லையா?

இந்த அட்டகாசமான புதிய கண்டுபிடிப்பு நிச்சயமாக வரும் காலத்தில் ஏசி தேவையைக் கட்டுப்படுத்தும் என்று கூறப்பட்டுள்ளது. இப்போது சந்தையில் கிடைக்கும் வழக்கமான வெள்ளை நிற கூலிங் பெயிண்ட்கள் குளிராக இருப்பதை விட வெப்பமடைகிறது என்று கூறப்படுகிறது. அதை கருத்தில் கொண்டு விஞ்ஞானிகள் இந்த புதிய பெயிண்டை தயாரித்துள்ளனர். இது பூசப்பட்ட மேற்பரப்பில் இருந்து அகச்சிவப்பு வெப்பத்தை விரட்டுகிறது மற்றும் சூரிய ஒளியில் 98.1% வரை பிரதிபலிக்கிறது என்று கூறப்பட்டுள்ளது.

அல்ட்ரா வைட் பெயிண்ட் உண்மையில் என்ன செய்யும் தெரியுமா?

இது ஒப்பிடக்கூடிய தயாரிப்புகளில் 80% முதல் 90 சதவீதத்தை விட அதிகமாக வெப்பத்தைப் புறக்கணிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஆராய்ச்சியாளர்களின் அல்ட்ரா வைட் வண்ணப்பூச்சினால் சூரிய ஒளி 95.5% வரை பிரதிபலிக்கப்படுகிறது. இந்த பெயிண்ட் மிகவும் பிரதிபலிக்கும் தன்மை கொண்டது என்று கூறப்பட்டுள்ளது. இது முக்கியமாகப் பேரியம் சல்பேட் எனப்படும் வேதியியல் கலவையின் கீழ் உருவாக்கப்பட்டுள்ளது. இது புகைப்பட காகிதத்தை வெண்மையாக்கப் பயன்படுகிறது.

19 ° பாரன்ஹீட் (10.5 C) வரை வெப்பத்தை குறைகிறதா? நிரூபிக்கப்பட்ட உண்மை இது தானா?

வெளிப்புற சுவர்கள் மற்றும் எந்தவொரு மேற்பரப்பில் இந்த அல்ட்ரா வைட் வண்ண நிறப்பூச்சை நீங்கள் பயன்படுத்தினாலும், இது 19 ° பாரன்ஹீட் (10.5 சி) வரை இரவில் சுற்றுப்புறச் சூழல் குளிரை விடக் குறைவாக வைத்திருக்கொள்கிறது என்று குழு காட்டியுள்ளது. இது மதிய நேரங்களில் வலுவான சூரிய ஒளியின் கீழ் 8 ° பாரன்ஹீட் (4.4 செல்சியஸ்) வரை வெப்பத்தைத் தவிர்த்து மேற்பரப்புகளைக் குளிர வைக்கிறது என்று விஞ்ஞானிகள் நிரூபித்துள்ளனர் என்று சமீபத்திய அறிக்கை தகவல் தெரிவித்துள்ளது.

ஆறு வருட ஆராய்ச்சியின் விளைவு

வெப்பத்தைத் திசைதிருப்பச் சுவர்கள் மற்றும் கூரைகளை வெள்ளை வண்ணம் தீட்டுதல் பல நூற்றாண்டுகளாகச் செய்யப்பட்டு வருகிறது. சுமார் 1970-களில் இருந்து, இந்த பாரம்பரியம் பின்பற்றப்பட்டு வருகிறது. ஏர் கண்டிஷனர்களுக்கு மாற்றத்தக்க வகையில் சக்திவாய்ந்த கூலிங் பெயிண்ட்களை உருவாக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது, ஆறு வருட ஆராய்ச்சியின் விளைவாக தற்பொழுது இந்த புதிய அல்ட்ரா வைட் கூலிங் பெயிண்ட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

2050 ஆம் ஆண்டில் மூன்று மடங்கு அதிகரிக்கும் ஏசி பயனர்களின் எண்ணிக்கை

உலகளாவிய வெப்பநிலை அதிகரித்து வருவதால், அதிகமான மக்கள் பாதுகாப்பாக இருக்கவும் வசதியாக இருக்கவும் ஏசி போன்ற குளிரூட்டல் சாதனங்களை நம்பியுள்ளனர். 2050 ஆம் ஆண்டில் ஏர் கண்டிஷனர்களுக்கான எரிசக்தி தேவை மூன்று மடங்காக அதிகரிக்கும் என்று சர்வதேச எரிசக்தி நிறுவனம் கணக்கிட்டுள்ளது.

ஒவ்வொரு நொடியும் சுமார் 10 புதிய ஏர் கண்டிஷனர்கள்

இது அடுத்த 30 ஆண்டுகளுக்கு ஒவ்வொரு நொடியும் சுமார் 10 புதிய ஏர் கண்டிஷனர்களை மக்கள் புதிதாக இன்ஸ்டால் செய்வார்கள் என்ற கணக்கு வரை கணிக்கப்பட்டுள்ளது. இப்படியான சூழ்நிலையைக் கட்டுக்குள் கொண்டுவர விஞ்ஞானிகளின் இந்த அல்ட்ரா வைட் பெயிண்ட் கண்டுபிடிப்பு நிச்சயம் கைகொடுக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

,

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக