
பிரபல ஆன்லைன் வர்த்தக தளமான அமேசான் வாகன ஓட்டிகளுக்கு பயன்படக்கூடிய கேமிரா ஒன்றை உற்பத்தி செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த கருவிகுறித்த கூடுதல் தகவலைக் கீழே காணலாம்.
பிரபல ஆன்லைன் வர்த்தக அமேசான் வாகனங்களுக்கான கேமிரா உற்பத்தி செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. இந்நிறுவனம் கையகப்படுத்தியிருக்கும் நிறுவனங்களில் ரிங்-ம் ஒன்று. இது மின்சாதன தயாரிப்பு நிறுவனம் ஆகும்.
இந்த நிறுவனமே ரைடர்களுக்கு பயன்படக் கூடிய கேமிராவை தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது. இது டேஷ் கேமிராவாகும். அதாவது, கார்களுக்குள் பொருத்தப்படக் கூடிய சிறிய ரக கேமிராவாகும். இந்த கேமிராவில் சிறப்பு வசதியாக அமேசானின் விர்சுவல் அசிஸ்டண்ட் அலெக்ஸா தொழில்நுட்பம் சேர்க்கப்பட்டிருக்கின்றது.
ஆகையால், அலெக்ஸாவைப் போல் இந்த கேமிராவையும் குரல் கட்டளையின் வாயிலாக கட்டுப்படுத்த முடியும் என்பது தெரிய வந்திருக்கின்றது. அதாவது, குரல் கட்டளை வாயிலாக காட்சி பதிவு மற்றும் காட்சி பதிவு ரத்து ஆகியவற்றை உடனடியாக மேற்கொள்ள முடியும்.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு அமேசான் நிறுவனம் விரைவில் கார்களுக்கான கேமிராவை அறிமுகம் செய்ய இருப்பதாக அறிவித்திருந்தது. இதனை செப்டம்பர் மாதம் விற்பனைக்குக் கொண்டு வர இருப்பதாக அறிவித்திருந்தது. அக்கேமிரா காருக்கு உள்ளும், வெளியேவும் ரெக்கார்டு செய்யும் வசதிக் கொண்டது என்ற தகவலையும் அது கூறியிருந்தது.
மேலும், 199 அமெரிக்க டாலர்கள் மதிப்பில் அந்த கேமிரா விற்பனைக்கு வரும் என பல்வேறு தகவல்களை அப்போது அமேசான் வெளியிட்டிருந்தது. இந்த நிலையிலேயே டேஷ் கேமிராவை நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த கேமிராவை விண்ட் ஷீல்டில் பொருத்திக் கொள்ளும் வகையில் அமேசானின் ரிங் வடிவமைத்துள்ளது.
இந்த கேமிராவில் அமேசான் அலெக்சா மட்டுமின்றி இன்னும் சில தொழில்நுட்ப வசதிகள் இடம் பெற இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஆனால், அதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் இதுவரை நிறுவனம் தரப்பில் இருந்து வெளியிடப்படவில்லை.
அதேசமயம், இந்த கேமிராவை ரிங் செல்போன் செயலி வாயிலாக கட்டுப்படுத்த முடியும் என்றும் வைஃபை வாயிலாக இணைக்கும்பட்சத்தில் அனைத்து வீடியோக்களையும் செல்போன் வாயிலாக காண முடியும் என்றும் ரிங் நிறுவனம் தெரிவித்திருக்கின்றது.
வீடியோக்களை உள்ளுக்குள்ளேயே சேமித்து வைத்துக் கொள்ளும் இந்த கேமிராவில் கொடுக்கப்பட்டுள்ளது. ஆகையால், தனியாக மெமரி கார்டு பொருத்த வேண்டும் என்ற அவசியம் இருக்காது என கூறப்படுகின்றது. அதேசமயம், கூடுதல் மெமரிக்காக மெமரி கார்டை சேர்க்கும் வசதி இதில் வழங்கப்படலாம்.
இந்த கேமிராவை பொருத்துவதன் வாயிலாக தேவையற்ற நடவடிக்கைகளில் இருந்து நம்மை நம்மால் பாதுகாத்துக் கொள்ள முடியும். அதாவது, நாம் தவறே செய்யாமல் பெறக் கூடிய அபராத செல்லாண் மற்றும் காவல்துறையின் நடவடிக்கையில் இருந்து தப்பிக்க இந்த கேமிரா மிகுந்த உதவியாக இருக்கும்.
இதுமட்டுமின்றி வாகன திருட்டு மற்றும் பிற கசப்பான அனுபவத்தில் இருந்தும் தப்பித்துக் கொள்ள நிச்சயம் இந்த கேமிரா உதவியாக இருக்கும். தொடர்ந்து, விபத்து போன்ற அசம்பாவித நேரங்களில் தானாகவே அவசர அழைப்பை மேற்கொள்ளும் வசதி இந்த கேமிராவில் எதிர்பார்க்கப்படுகின்றது.
இத்தகைய சிறப்பு வாய்ந்த கேமிராவையே அமேசானின் ரிங் நிறுவனம் தயாரித்திருக்கின்றது. விரைவில் உலகம் முழுவதிலும் இதனை விற்பனைக்கு வழங்க நிறுவனம் தயாராகி வருகின்றது. அதன் ஆன்லைன் தளம் வாயிலாகவே இக்கேமிராவை பெற முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக