Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

செவ்வாய், 22 ஜூன், 2021

சீனாவை விட்டு இந்தியா ஓடிவந்த சாம்சங் தொழிற்சாலை ரெடி..!

எலக்ட்ரானிக்ஸ் தயாரிப்பில் முன்னோடியான சாம்சங் நிறுவனம், சீனா - அமெரிக்கா இடையிலான வர்த்தகப் பிரச்சனை நிலவிய போது தனது டிஸ்பிளே தொழிற்சாலையைச் சீனாவில் இருந்து அவசர அவசரமாக இந்தியாவிற்கு மாற்றியது.

இந்நிலையில் பல மாதங்கள் தொடர்ந்து பணியாற்றியதன் மூலம் சாம்சாங் தனது டிஸ்பிளே தொழிற்சாலை கட்டுமான பணிகளை உத்தரப் பிரதேச மாநிலத்தின் நொய்டா-வில் முழுமையாக முடித்துள்ளது.,

இந்நிலையில் இத்தொழிற்சாலையைப் பார்வையிடுவதற்காகச் சாம்சாங் நிறுவனத்தின் தென்வடக்கு ஆசியப் பிரிவின் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியுமான கென் கேங்க் மற்றும் உத்தரப் பிரதேச மாநிலத்தின் முதல்வரான யோகி ஆதித்யநாத் ஆகியோர் சந்தித்தனர்.

சிறப்பான தொழிற்துறை சூழ்நிலை, முதலீட்டாளர்களுக்கு ஏற்ற கொள்கை ஆகியவற்றின் மூலம் சாம்சங், சீனாவில் இருந்த டிஸ்பிளே தொழிற்சாலையை இந்தியாவில் மாற்றப்பட்டு உள்ளது. மேலும் இந்தத் தொழிற்சாலையின் கட்டுமான பணிகளைத் தற்போது முழுமையாக முடிந்துள்ளது என அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவித்துள்ளது சாம்சங்.

உத்தரப் பிரதேச மாநிலத்தை உற்பத்தி ஹப் ஆக மாற்ற வேண்டும் என்னும் அரசின் திட்டம் மற்றும் ஆர்வத்திற்குச் சாம்சங் தொழிற்சாலையின் கட்டுமானத்தின் வேகமே சான்று எனச் சாம்சங் நிறுவனமும், உத்தரப் பிரதேச மாநிலத்தின் முதல்வர் யோகி ஆதித்யநாத் மேக் இன் இந்தியா திட்டத்திற்குச் சரியான உதாரணம் எனக் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக