Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

செவ்வாய், 22 ஜூன், 2021

எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் இனி இதற்காக அலைய வேண்டாம்.. ஆன்லைனில் எப்படி இந்த சேவையை பெறுவது..!

 வீட்டுக் கடன் வட்டி குறைப்பு.. மூத்த குடிமக்கள் டெபாசிட்களுக்கு வட்டி  அதிகரிப்பு.. எஸ்பிஐ அசத்தல் | SBI cuts MCLR and increased senior citizen  interest rates - Tamil ...
இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (State bank of india), அவ்வப்போது வாடிக்கையாளர்களின் நலனை காக்கும் விதமாக பல அதிரடியான அறிவிப்புகளை கொடுத்து வருவது வழக்கம்.

பல தனியார் வங்கிகளுக்கும் சவால் விடும் வகையில் செயல்பட்டு வரும் இந்த வங்கி, வாடிக்கையாளர்களின் வசதிக்காக பல்வேறு புதிய அம்சங்களையும் அறிவித்து வருகின்றது.


அதோடு பல்வேறு சேவைகளை மக்கள் தற்போது ஆன்லைனிலேயே பெறும் வசதியினையும் வழங்கி வருகின்றது. இதன் மூலம் கொரோனா காலத்தில் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வராமல், பல்வேறு வகையான சேவைகளை ஆன்லைனிலேயே பெற்றுக் கொள்ள முடியும்.

எப்படி
செக் பேமெண்டினை எப்படி நிறுத்துவது?

அந்த வகையில் நாம் இன்று பார்க்கவிருப்பது, எஸ்பிஐ (SBI) வாடிக்கையாளர்கள் எப்படி தங்களது செக் பேமெண்டினை ஆன்லைனில் நிறுத்தி வைப்பது என்பதை தான். இதற்காக எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் வங்கிக்கு சென்று அலைய வேண்டிய அவசியமில்லை. இருந்த இடத்தில் இருந்தபடியே இதனை செய்ய முடியும் என்கிறது எஸ்பிஐ.

எப்படி எல்லாம் அப்டேட் செய்யலாம்?

இதனை ஆன்லைன் மூலமாகவும் நீங்கள் செய்து கொள்ள முடியும். அதோடு எஸ்பிஐயின் பிரபல சேவையான எஸ்பிஐ யோனோ ஆப் மூலமாகவும், எஸ்பிஐ யோனோ லைட் ஆப் மூலமாகவும் பெற்றுக் கொள்ள முடியும் என அறிவித்துள்ளது. இதற்காக உங்களது வங்கிக் கணக்குடன் இணைக்கப்பட்ட மொபைல் நம்பர் வேண்டும்.

என்ன காரணம்

நீங்கள் செக் பேமெண்டினை நிறுத்த பல்வேறு வகையான காரணங்கள் உண்டு. உதாரணத்திற்கு நீங்கள் தவறான தொகையை மதிப்பிட்டு இருக்கலாம். இதனால் அதனை ரத்து செய்ய நினைக்கலாம். நீங்கள் அதிக தொகைக்கு செக்கினை கொடுத்திருக்கலாம். ஆனால் வங்கிக் கணக்கில் தொகை குறைவாக இருக்கும் பட்சத்தில் நீங்கள் ஸ்டாப் பேமெண்ட் ஆப்சனை பயன்படுத்த வேண்டியிருக்கும்.

ஆன்லைனில் எப்படி?

இதற்காக நீங்கள் எஸ்பிஐ அதிகாரப்பூர்வ தளத்திற்கு சென்று உங்களது இணைய வங்கியினை லாகின் செய்து கொள்ளுங்கள்.

அதில் e-services என்ற ஆப்சனுக்கு கீழாக உள்ள Stop cheque payment என்ற ஆபசனை கிளிக் செய்யவும்.

அதோடு எந்த கணக்கு என்ற விவரங்கள் உள்ளிட்டவற்றை பதிவிட்டு பிறகு, நிபந்தனைகளைகள் மற்றும் விதிமுறைகள் என்பதை கிளிக் செய்து சப்மிட் செய்ய வேண்டும்.

யோனோவில் எப்படி?

உங்களது கணக்கினை எஸ்பிஐ யோனோ ஆப் மூலாமாக லாகின் செய்து கொள்ளுங்கள்.

அதன் பிறகு request என்பதை கிளிக் செய்து, அதில் செக் புக் என்ற ஆப்சனில் உள்ள Stop cheque என்பதை கிளிக் செய்யவும்.

அதில் செக்கின் தேவையான விவரங்களை பதிவிட்டு, ஸ்டாப் என்ற ஆப்சனை தேர்தெடுக்கவும்.

அதன் பிறகு விவரங்கள் சரி பார்க்கப்பட்டு, சப்மிட் கொடுக்கவும். உங்களது மொபைல் எண்ணுக்கு ஓடிபி வரும்..

வங்கிக் கிளைக்கு நேரடியான சென்றும் நிறுத்தலாம்

வங்கி கிளைக்கு நேரடியாக சென்றும் உங்களது செக் பேமெண்டினை நிறுத்தம் செய்யலாம். இதற்காக ஒரு கடிதம் கொடுக்க வேண்டியிருக்கும். இதனை கொடுத்த பிறகு உங்களது பேமெண்ட் நிறுத்தம் செய்யப்படும். எப்படியிருப்பினும் ரிசர்வ் வங்கியின் பாசிட்டிவ் பே சிஸ்டம் மூலம் 50,000 ரூபாய்க்கு மேலாக பரிவர்த்தனை செய்யப்படும் பட்சத்தில், உங்களிடம் மீண்டும் விவரங்கள் சரிபார்க்கப்பட்ட பின்னரே செயல்படுத்தப்படும். எஸ்பிஐயில் இந்த திட்டம் ஜனவரி 1, 2021ல் இருந்து அமலுக்கு வந்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக