Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

செவ்வாய், 22 ஜூன், 2021

எல்லாம் கொஞ்ச காலம்தான்- தனது ஒரேஒரு வீட்டையும் விற்கும் "எலான் மஸ்க்"- காரணம் இதோ!

எலான் மஸ்க் தனது கடைசி வீட்டை விற்க இருக்கிறார், அவரது பே ஏரியா எஸ்டேட் இந்த வாரம் 37.5 மில்லியன் டாலர்களுக்கு சந்தைக்கு வந்தது. 16,000 சதுர அடி கொண்ட இந்த மாளிகை 47 ஏக்கரில் அமைந்துள்ளது.டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் எலான் மஸ்க் தனக்கு சொந்தமான ஒரே ஒரு வீட்டை விற்க உள்ளதாக அறிவித்துள்ளார். சமீபத்தில் எலான் மஸ்க் டுவிட்டரில், தான் எளிமையான வாழ்க்கை வாழ்வதற்கு தன்னிடம் இருக்கும் அனைத்து வீடுகள் உள்ளிட்ட அதிகப்படியான சொத்துகளை விற்றுவிட்டதாக அறிவித்திருந்தார்.

ஒரே ஒரு வீட்டையும் விற்கும் மஸ்க்

இதற்கிடையில் தனக்கு சொந்தமான ஒரே ஒரு வீட்டையும் விற்க இருப்பதாக தெரிவித்தார். இந்த வீடு சான் பிரான்சிஸ்கோவில் 47 ஏக்கர் 16 ஆயிரம் சதுர அடியில் அமைந்துள்ளது. இது 100 ஆண்டுகளுக்கு மேல் பழமையான வீடாகும். இந்த வீட்டை எலான் மஸ்க் 2017 ஆம் ஆண்டில் இந்திய விலை மதிப்பில் சுமார் 168 கோடி ரூபாய்க்கு வாங்கினார். இதே வீட்டை தற்போது 274 கோடி ரூபாய்க்கு விற்க திட்டமிட்டுள்ளார்.

பல மில்லியன் டாலர் சொத்து

ஒரு குளம், ஹைக்கிங் பாதைகள் மற்றும் 11கார்களுக்கான பார்க்கிங் இடத்தை கொண்டுள்ளது. டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் கடந்த ஆண்டைவிட பல மில்லியன் டாலர் சொத்துகளை சிதறடித்து வருகிறார். தற்போது அவர் கடைசியாக மீதமுள்ள வீட்டை விற்க இருக்கிறார். எலான் மஸ்க் டுவிட்டில் பே ஏரியா சொத்தை சிறப்பு இடம் என அழைக்கிறார்.

செவ்வாய் கிரகத்துக்கு மனிதர்களை அனுப்பும் திட்டம்

எலான் மஸ்க்கின் கனவுத் திட்டமாக கூறப்படுவது செவ்வாய் கிரகத்துக்கு மனிதர்களை அனுப்பும் திட்டமாகும். சமீபத்தில் இதற்கான முன்மாதிரி விண்கலம் வடிவமைக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டது. அப்போது விண்கலம் வெடித்து சிதறியது. இந்த நிகழ்வு பல்வேறு விவாதங்களுக்கு உட்பட தொடங்கிய நிலையில் எலான் மக்ஸ் கூலாக இது வெற்றிகரமான தோல்வி, தோல்வி அடைய கூடாது என்பதற்கான அனைத்து தரவுகளும் வெற்றிகரமாக சேகரிக்கப்பட்டது என கூறினார்.

மின்சார கார் ரூ.72 லட்சம் விலையில் அறிமுகம்

டெஸ்லாவின் முதல் மின்சார கார் ரூ.72 லட்சம் விலையில் அறிமுகம் செய்யப்பட்டது. இது ஸ்போர்ட்ஸ் காராக அறிமுகம் செய்யப்பட்டது. இந்த கார் சந்தையில் நல்ல வரவேற்பை பெறவில்லை. ஆனால் இந்த உலகம் நல்ல மின்சார காரை வரவேற்க காத்திருக்கிறது என்ற நம்பிக்கை எலான் மஸ்க்கிடம் இருந்தது. தொடர்ந்து மாடல் எஸ் என்ற காரை அறிமுகப்படுத்தி எலான் மஸ்க் வெற்றி அடைந்தார்.

துவண்டுவிடா முயற்சி

ஒவ்வொரு தோல்வியிலும் தானும் துவண்டுவிடாமல் தனது ஊழியர்களை துவண்டுபோக விடாமல் ஊக்க வார்த்தைகளை அளித்து எலான் மஸ்க் தனது நிறுவனத்தை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றார். ஆரம்பக் கட்டத்தில் பல்வேறு மோசான முடிவுகளின் காரணமாக டெஸ்லாவை விற்க முடிவு செய்த எலான் மஸ்க், அதே நிறுவனத்தை முன்னேற்றி காண்பித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக