Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

செவ்வாய், 22 ஜூன், 2021

இந்தியர்கள் தகவல் சீனாவுக்கு பார்சல்- தடை செய்யப்படுமா பேட்டில்கிரவுண்ட் மொபைல் இந்தியா: அதிர்ச்சி தகவல்!

கிராப்டன் சமீபத்தில் பேட்டில்கிரவுண்ட் மொபைல் இந்தியா என்ற பப்ஜி மொபைல் ஆரம்பகால அணுகலை வழங்கியது. இந்த விளையாட்டு விரைவில் நாட்டில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் பப்ஜி தடை செய்வதற்கான அதே காரணத்தின் அடிப்படையில் பேட்டில்கிரவுண்ட் மொபைல் இந்தியா தடை செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

பெய்ஜிங்கில் அமைந்து சீனா மொபைல் கம்யூனிகேஷன்

IGN இந்தியா அறிக்கைப்படி, பேட்டில்கிரவுண்ட் மொபைல் இந்தியா பெய்ஜிங்கில் அமைந்து சீனா மொபைல் கம்யூனிகேஷன்ஸ் சேவையகங்களில் இருந்து தரவை அனுப்புகிறது மற்றும் பெறுகிறது. இது பெய்ஜிங்கில் அமைந்துள்ள டென்சென்ட் சேவையகத்திற்கும் பிங் செய்கிறது. அதேபோல் அமெரிக்கா, மும்பை மற்றும் மாஸ்கோவில் அமைந்துள்ள சேவையகங்களுக்கு பிஜிஎம்ஐ ஆண்ட்ராய்டு சாதனங்களில் இருந்து தரவை அனுப்புகிறது.

ஆரம்ப கட்ட பீட்டா அணுகல்

வெளிவராத ஆதாரம் இதை முதலில் சுட்டிக்காட்டியது, மேலும் ஐஜிஎன் இந்தியாவும் ஒரு டேட்டா பாக்கெட் ஸ்னிப்பர் பயன்பாட்டு உதவியோடு இதை மீண்டும் உறுதிப்படுத்தியது. சீன அரசுக்கு சொந்தமான சீனா மொபைல் கம்யூனிகேஷன் கார்ப்பரேஷன் சேவையகத்திற்கு இந்த விளையாட்டு தரவை அனுப்பியதாக அறிக்கை தெரிவிக்கிறது. ஆரம்ப கட்ட பீட்டா அணுகல் ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு மட்டுமே கிடைத்து என்பதையும் ஐபோன்கள் அல்லது ஐபாட்களில் அணுகல் கிடைக்கவில்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

பச்சை இரத்தத்துடன் பேட்டில்கிரவுண்ட் மொபைல் இந்தியா

பேட்டில்கிரவுண்ட் மொபைல் இந்தியாவுக்கும், பப்ஜி மொபைலுக்கும் உள்ள வித்தியாசம் இரத்த நிறம்தான். பேட்டில் கிரவுண்ட் மொபைல் இந்தியா பச்சை ரத்த நிறத்தோடு வருகிறது. சீன சேவையகத்தில் பயனர் தரவை பகிர்ந்து கொண்டு சேமித்து வைத்ததன் காரணமாக மற்ற சீன பயன்பாடுகளுக்கிடையில் பப்ஜி இந்தியா தடை செய்யப்பட்டது. இதையடுத்து பலநாள் எதிர்பார்ப்புக்கு பிறகு பேட்டில்கிரவுண்ட் மொபைல் இந்தியா என்ற பெயரில் வெளியாக இருந்தது. மேலும் பேட்டில்கிரவுண்ட் மொபைல் இந்தியாவுக்கு டென்செண்டுடன் எந்த தொடர்பும் இல்லை என்றும் கூறப்பட்டது. இது ஒரு சீன நிறுவனமாகும். ஆனால் பேட்டில்கிரவுண்ட் விளையாட்டு தென் கொரிய ஹோல்டிங் நிறுவனமான கிராப்டனால் நேரடியாக தொடங்கப்பட்டது.

பேட்டில் கிரவுண்ட் மொபைல் இந்தியா

பேட்டில் கிரவுண்ட் மொபைல் இந்தியா தற்போது தேர்ந்தெடுக்கப்பட்ட குறிப்பிட்ட பயனர்களுக்கு ஆரம்ப அணுகல் பீட்டாக கிடைக்கிறது. தங்கள் ஸ்மார்ட்போனில் இதை எவ்வாறு பதிவிறக்கம் செய்வதும் என்பது குறித்து பார்க்கலாம். முன்னதாக குறிப்பிட்டது போல், பேட்டில் கிரவுண்ட் மொபைல் இ்நதியா தற்போது ஆரம்ப அணுகல் மூலமாக கிடைக்கிறது.
குறிப்பிட்ட பயனர்கள் மட்டுமே அனுமதி
குறிப்பிட்ட பயனர்கள் மட்டுமே அனுமதி

தற்போதுவரை பேட்டில் கிரவுண்ட் மொபைல் இந்தியா, அனைவருக்கும் கிடைக்கவில்லை. தேர்ந்தெடுக்கப்பட்ட குறிப்பிட்ட பயனர்கள் மட்டுமே கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து பதிவிறக்கம் செய்ய முடியும். பீட்டா ஏபிகே தற்போது மூன்றாம் தரப்பு மூலங்கள் வழியாக கிடைக்கிறது. இது மிகவும் இணக்கமான ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் பதிவிறக்கம் செய்து நிறுவலாம்.

மூன்றாம் தரப்பு தளங்களில் இருந்து பதிவிறக்கம்

குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் மூன்றாம் தரப்பு தளங்களில் இருந்து பதிவிறக்கம் செய்யும்போது கவனமாக இருக்கவும். நிலையான பதிப்பு திறக்கும் வரை காத்திருக்கவும் அப்படி இல்லாதபட்சத்தில் மூன்றாம் தரப்பு வலைதளத்தில் மூலமாக மேற்கொள்ளலாம் ஆனால் இதில் கவனம் தேவை. இது பாதுகாப்பான முறையல்ல என்ற காரணத்தால் தாங்கள் இதுகுறித்து எந்த தகவலையும் பகிர இயலாது. இந்த விளையாட்டு கோப்பு சுமார் 800 எம்பி என கூறப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக