Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

புதன், 30 ஜூன், 2021

அடி., காற்றில் இருக்கும்: இனி வானத்திலேயே தடுத்து அழிப்போம்- டிஆர்டிஓ கண்டுபிடித்த அட்டகாச தொழில்நுட்பம்!

ட்ரோன் எனப்படும் ஆளில்லா விமானம்

ஜம்மு விமான நிலைய வளாகத்தில் உள்ள உயர்பாதுகாப்பு விமானப்படை நிலைய தொழில்நுட்ப பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை குண்டு வெடிப்பு நேர்ந்தது. வெடித்த குண்டு சக்தி குறைந்ததாக இருந்ததால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை. இது ஐஇடி வகையை சார்ந்தது.

ட்ரோன் எனப்படும் ஆளில்லா விமானம்

நேர்ந்த குண்டு வெடிப்பானது ட்ரோன் எனப்படும் ஆளில்லா விமானங்கள் மூலம் நடத்தப்பட்டது. மேலும் ஜம்மு விமானநிலையத்தில் இருந்து 3 கிமீ தொலைவில் 5 கிலோ வெடிமருந்துடன் தீவிரவாதி ஒருவர் கைது செய்யப்பட்டார். இந்த வகை வெடிபொருட்கள் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத அமைப்பினர் பயன்படுத்துவது தெரியவந்திருக்கிறது.

ட்ரோன் மூலம் தாக்குதல்

ஜம்மு காஷ்மீரில் ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டதன் எதிரொலியாக பிரதமர் மோடி பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்சிங் உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோர் ஆலோசனை மேற்கொண்டனர். இந்த ஆலோசனையில் ஜம்மு தாக்குதல் குறித்தும், இதன்பின் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கை குறித்தும் விரிவாக விளக்கினர். ராணுவத்தின் எதிர்கால சவால்கள், நவீன தொழில்நுட்பங்கள் பயன்படுத்துவது உட்பட பல திட்டங்கள் குறித்து விவாதித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ட்ரோன் எதிர்ப்பு தொழில்நுட்பம்

டிஆர்டிஓ-வின் ட்ரோன் எதிர்ப்பு தொழில்நுட்பம் வான்வழி அச்சுறுத்தல்களை கண்டறுகிறது. ட்ரோன் எதிர்ப்பு அமைப்பு யூஏவி-களை கண்டறிந்து தடுத்து அழிக்கக்கூடும். இதன் ரேடார் அமைப்பு 360 டிகிரி கவரேஜ் வழங்க முடியும். பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ)-வின் எதிர்-ட்ரோன் அம்சமானது எதிரி ட்ரோன்களை கண்டுபிடிப்பது, தடுத்து நிறுத்துவது, அழிப்பது குறித்து ஆயுதப்படைகளுக்கு ஏற்பாடு செய்கிறது.

முக்கிய பாதுகாப்பு நிகழ்வில் பங்கேற்ற ட்ரோன் எதிர்ப்பு தொழில்நுட்பம்

டிஆர்டிஓ-வின் ட்ரோன் எதிர்ப்பு அமைப்பானது லேசர் அடிப்படையில் காற்றில் ட்ரோன்களை கண்டறிந்து அழிக்க அனுமதிக்கிறது. இதில் குறிப்பிடத்தகுந்த விஷயம் என்னவென்றால் டிஆர்டிஓ உருவாக்கிய இந்த ட்ரோன் எதிர்ப்பு அமைப்பு முன்னதாக விவிஐபி பாதுகாப்புக்காக பயன்படுத்தப்பட்டது. 2020 சுதந்திர தினம், அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்திய வருகை, குடியரசு தின 2021 ஆகிய முக்கிய நிகழ்வில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

மைக்ரோ ட்ரோன்களையும் கண்றிந்து அழிக்கும்

இந்த அமைப்பு மூலம் 3 கிலோமீட்டர் வரை மைக்ரோ ட்ரோன்களை கண்றிந்து தடுத்து நிறுத்த முடியும். அதேபோல் 1 - 2.5 கிலோமீட்டர் வரை இலக்கை லேசர் சிக்னல் மூலம் குறிவைத்து சுடமுடிகிறது. டிஆர்டிஓ-வின் தலைவர் சதீஷ் ரெட்டி, ட்ரோன்களை கண்டுபிடித்து வீழ்த்தக்கூடிய புதிய தொழில்நுட்பம் குறித்து அறிவித்தார். நாட்டிற்கு பாதுகாப்பு அச்சுறுத்தலாக விளங்கும் சிறிய ட்ரோன்கள் கண்டறிந்து அழிக்க முடியும் என குறிப்பிட்டார்.

வான் வழியாக ஏற்படும் அச்சுறுதல்

வான் வழியாக ஏற்படும் அச்சுறுதலை எதிர்கொள்ள ராணுவத்திற்கு ஆற்றலை வழங்குகிறது. இதில் பொருத்தப்பட்டிருக்கும் ரேடார் அமைப்பு 360 டிகிரி கோண கண்காணிப்பை வழங்குகிறது. இந்த அமைப்பு மிகச்சிறிய ட்ரோன்களைகூட கண்டறியமுடியும் என கூறப்படுகிறது. இதில் சென்சார் கருவிகள், ரேடியோ அலைவரிசைகள் போன்ற பல்வேறு தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக