
வட கொரியாவில் (North Korea) கொரோனா தொற்று, இயற்கை பேரழிவு, பொருளாதார பாதிப்பு என பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அந்நாட்டு மக்கள் பசி பட்டினியுடன் போராடும் நிலை ஏற்பட்டுள்ளது
இந்நிலையில், வட கொரிய சர்வாதிகாரி கிம் ஜாங் உன், நாட்டின் பொருளாதார சீரழிவிற்கு உயர் அதிகாரிகள் தான் காரணம் எனக் கூறி, உயர்மட்டக் கூட்டத்திற்குப் பிறகு, உயர் அதிகாரிகளை பதவி நீக்கம் செய்தார். அதிகாரம் அனைத்தையும் கையில் வைத்துக் கொண்டு, சர்வாதிகாரம் செய்யும் கிம் ஜாங் உன் , பிரச்சனை என்று வந்ததும் அமைச்சரவை மற்றும் உயர் அதிகாரிகளை குற்றம் சாட்டுகிறார்.
சீனாவிலிருந்து பரவிய கொரோனா வைரஸ் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக உலகம் முழுவதும் பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. இருப்பினும், வைரஸ் பரவாமல் தடுக்க கடந்த ஆண்டு ஜனவரியில் வடகொரியா கடுமையான கட்டுப்பாடுகளை விதித்தது.
இருப்பினும், கொரோனா தொற்றுநோய் அங்கு பெரும் பேரழிவை ஏற்படுத்தியது. ஆனால், சில நாட்களுக்கு கூட கிம் ஜாங் உன் எங்கள் நாட்டில் கொரோனா இல்லவே இல்லை என அடித்து கூறினார். மக்கள் உணவுக்கே போராடும் நிலை ஏற்பட்டுள்ளதால், கோபமடைந்த வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் பல உயர் அதிகாரிகளை பதவியிலிருந்து நீக்கியுள்ளார். இந்த தகவல் புதன்கிழமை ஊடக அறிக்கைகள் மூலம் வெளியானது.
கொரோனா தொற்றுநோய் பரவியதில் இருந்து, இதுவரை வட கொரியா தனது நாட்டில் எவ்வலவு பேர் பாதிக்கப்பட்டனர் உறுதிப்படுத்தவில்லை. அது குறித்த புள்ளிவிவரங்களை உலக சுகாதார அமைப்புக்கு (WHO) தெரிவிக்கவில்லை. ஆனால் ஆய்வாளர்கள், "அணுசக்தி திட்டத்தின் காரணமாக பொருளாதாரத் தடைகளை எதிர்கொள்ளும் வட கொரியாவில் தொற்று அதிக அளவில் பரவியுள்ளது என்தை சமீபத்திய நிலைமைகள் தெளிவாகக் காட்டுகின்றன" என்று கூறினர்.
நாட்டின் மோசமான பொருளாதார நிலைக்கு கிம் ஜாங் அமைச்சரவை மற்றும் உயர் அதிகாரிகளை குற்றம் சாட்டும் நிலையில், கோவிட் -19 தொற்றுநோயால் எல்லையை மூடுவது என்ற அதிபரின் முடிவே மோசமான பொருளாதார அபாதிப்பிற்கு முக்கிய காரணம். மேலும், இயற்கை பேரிடர் காரணமாக பயிர்கள் நாசமடைந்தது மற்றும் மோசமான இராஜீய நடவடிக்கைகள் ஆகியவை காரணமாக பொருளாதாரம் முடங்கியுள்ளது.
வட கொரியாவில் பல அதிகாரிகள் பணிநீக்கம் செய்யப்பட்டனர், மேலும் பலர் இடமாற்றம் செய்யப்பட்டனர். இப்போது வட கொரியாவுக்கு சர்வதேச உதவி தேவைப்படுகிறது என்பதற்கான தெளிவான அறிகுறி இது என அரசியல் நிபுணர்கள் கூறுகின்றனர். இந்த மாத தொடக்கத்தில் பியோங்யாங் தனது நாடு கடுமையான நெருக்கடியை சந்திக்கிறது ஒப்புக் கொண்டது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக