
ரியல்மி சி 15 மற்றும் ரியல்மி சி 12 பயனர்களுக்காக ஆண்ட்ராய்டு 11 ரியல்மி யுஐ 2.0-ல் இருந்து நிலையான புதுப்பிப்பு பதிப்பு வெளியீட்டை தொடங்கியுள்ளது. ஆண்ட்ராய்டு 10 அடிப்படையிலான ரியல்மி யுஐ அவுட் ஆஃப் பாக்ஸ் உடன் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்த சாதனம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டன. ஆண்ட்ராய்டு 11 அடிப்படையாகக் கொண்ட ரியல்மி யுஐ 2.0 தனிப்பயனாக்கப்பட்ட விருப்பங்களோடு கொண்டு வருகிறது. ஆண்ட்ராய்டு 11-ஐ அடிப்படையாகக் கொண்ட ரியல்மி யுஐ 2.0 புதுப்பிப்பில் புதிய அம்சங்களை முதன்முறையாக அனுபவிக்க ரசிகர்களை அழைப்பதாக நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரியல்மே சி15 சாதனத்துக்கு RMX2180_11.C.05 மற்றும் ரியல்ம் சி12 சாதனத்துக்கு RMX2189_11.C.05 என பட்டியலிடப்பட்டுள்ளது. புதுப்பிப்பு தற்போது குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பயனர்களுக்கு வெளியிடப்படும் என கூறப்பட்டது. இந்த புதுப்பிப்பில் முக்கிய பிழைகள் இல்லை என உறுதி செய்யப்பட்ட பிறகு அடுத்த சில நாட்களில் அனைத்து பயனர்களுக்கும் கிடைக்கும் என கூறப்படுகிறது.
அமைப்பு மெனுவுக்குள் சென்று தங்கள் சாதனத்தில் ரியல்மி யுஐ புதுப்பிப்பு கிடைக்கும் தன்மை குறித்து சரிபார்க்கலாம். சிக்கலான பிழைகள் எதுவும் காணப்படவில்லை. எதிர்வரும் நாட்களில் முழு வெளியீடு கிடைக்கும் என ரியல்மி தரப்பில் கூறப்படுகிறது.
ஆண்ட்ராய்டு 11 அடிப்படையிலான ரியல்மி யுஐ 2.0 புதிய அம்சங்களின் மேம்பாடு குறித்து பார்க்கையில், இதில் நைட் மோட், புது செயலி டிராயர், சிஸ்டம் க்ளோனர், ஐகான் சப்போர்ட் உள்ளிட்ட பல்வேறு பயன்முறைகளை புதுப்பிக்கிறது.
ஸ்க்ரீன் முகப்பு திரையில் பயன்பாடுகளுக்கான மூன்றாம் தரப்பு சின்னங்கள் தற்போது ஆதரிக்கப்படுகின்றன. டார்க் மோட் பயன்முறையில் பல்வேறு கூடுதல் அம்சங்கள் இணைக்கப்பட்டுள்ளன. அதேபோல் தங்களுக்கு சுவாரஸ்யமான அனுபவத்தை வழங்க வானிலை அனிமேஷன்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் இதில் குறைந்த பேட்டரி அதாவது 15%-க்கும் குறைவான பேட்டரி இருக்கும் போது, குறிப்பிட்ட நபர்களுடன் தங்கள் இருப்பிடம் குறித்த தகவலை விரைவாக அனுப்ப அனுமதிக்கிறது. உங்கள் சாதனம் லாக் செய்யப்பட்டிருக்கும் நேரத்திலும் அவசர தகவலை காண்பிக்க அனுமதிக்கிறது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக