லெனோவாவுக்கு சொந்தமான மோட்டோரோலா நிறுவனம் தனது புதிய மோட்டோ இ20 ஸ்மார்ட்போனை ஐரோப்பாவில் அறிமுகம் செய்துள்ளது. அதாவது பட்ஜெட் விலையில் தனித்துவமான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன். குறிப்பாக இந்தியாவில் மோட்டோ இ20 ஸ்மார்ட்போன் அறிமுகம் பற்றி தகவல் வெளிவரவில்லை, இருந்தபோதிலும் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரி வசதி கொண்ட மோட்டோ இ20 ஸ்மார்ட்போனின் விலை (இந்திய மதிப்பில்) ரூ.8,700-ஆக உள்ளது. மேலும் கோஸ்டல் ப்ளூ மற்றும் கிராஃபைட் கிரே நிறங்களில் இந்த புதிய ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. அதேபோல் வரும் அக்டோபர் முதல் மோட்டோ இ20 நெதர்லாந்தில் வாங்குவதற்கு கிடைக்கும் எனத் தகவல் வெளிவந்துள்ளது.
மோட்டோரோலா மோட்டோ இ20 ஸ்மார்ட்போன் ஆனது 6.5-இன்ச் மேக்ஸ்விஷன் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 720x1,600 பிக்சல் தீர்மானம், 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 20: 9 ஸ்க்ரீன் ரேஷியோ மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு இந்த அசத்தலான சாதனம் வெளிவந்துள்ளது. எனவே பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.
மோட்டோரோலா மோட்டோ இ20 ஸ்மார்ட்போனில் ஆக்டா கோர் யுனிசாக் டி 606 எஸ்ஓசி சிப்செட் வசதி உள்ளது. மேலும் இந்த சாதனம் ஆண்ட்ராய்டு 11 (கோ எடிஷன்) இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக 2ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இவற்றுள் அடக்கம். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டு இந்தஅசத்தலான சாதனம் வெளிவந்துள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் வழங்கப்பட்டுள்ளது.
மோட்டோரோலா மோட்டோ இ20 சாதனத்தில் 4000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. மேலும் 10 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு,கைரேகை சென்சார் வசதி, கூகுள் அசிஸ்டென்ட்டை செயல்படுத்த ஒரு பிரத்யேக பட்டன், தூசி மற்றும் நீர் எதிர்ப்புக்கான ஐபி 52 சான்றிதழ் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல்.
மோட்டோரோலா மோட்டோ இ20 ஸ்மார்ட்போனின் பின்புறம் 13எம்பி பிரைமரி சென்சார் + 2எம்பி டெப்த் சென்சார் என மொத்தம் இரண்டு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 5எம்பி செல்பீ கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல். அதேபோல் 4ஜி, வைஃபை, ப்ளூடூத், ஜிபிஎஸ்/ ஏ-ஜிபிஎஸ், மைக்ரோ-யூஎஸ்பி, 3.5 மிமீ ஹெட்ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல்.
அதேபோல் மோட்டோரோலா நிறுவனம் விரைவில் தனது மோட்டோ இ40 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. அதாவது மேலும் இந்த சாதனத்தின் ஒரு சில அம்சங்கள் ஆன்லைனில் கசிந்துள்ளது. அதைப் பற்றி இப்போது சுருக்கமாக பார்ப்போம்.
மோட்டோ இ40 ஸ்மார்ட்போன் ஆனது ஆண்ட்ராய்டு 11 இயங்குதளம், 4ஜிபி ரேம், ஆக்டா கோர் யுனிசாக் எஸ்ஓசி உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது. மேலும் தனித்துவமான வடிவமைப்புடன் இந்த மோட்டோ இ40 ஸ்மார்ட்போன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.அதேபோல் 64ஜிபி மெமரி வசதி, 5000 எம்ஏஎச் பேட்டரி, 10 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு உள்ளிட்ட அம்சங்களையும் கொண்ள்ளது இந்த மோட்டோ இ40 ஸ்மார்ட்போன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக