இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் ஆன்லைன் உணவு டெலிவரி மற்றும் உணவு விற்பனை வர்த்தகத்தை ஆரம்பத்தில் இருந்தே கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்பதற்காகவும், ஈகாமர்ஸ் துறை போல் மிகப்பெரிய அளவில் வளர்ச்சி அடைந்த பின்பு அதோடு போராட விரும்பாத மத்திய அரசு புதிதாக 5 சதவீத வரி விதிக்கத் திட்டமிட்டு வருகிறது.
செப்டம்பர் 17ஆம் தேதி வெள்ளிக்கிழமை ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் லக்னோவில் நடக்க உள்ள நிலையில், இக்கூட்டத்தில் பெட்ரோல், டீசல் மீதான ஜிஎஸ்டி வரி விதிப்பு முதல் 45க்கும் அதிகமான திட்டம் மற்றும் விஷயங்கள் குறித்து ஆய்வு செய்யத் திட்டமிட்டுள்ள நிலையில், உணவு டெலிவரி நிறுவனங்கள் மீது புதிதாக ஜிஎஸ்டி வரி விதிக்கத் திட்டமிட்டுப்பட்டு அதற்காக ஆலோசனை செய்யப்பட உள்ளது.
தற்போது ஜிஎஸ்டி கவுன்சில் திட்டமிட்டு உள்ள படி சோமேட்டோ மற்றும் ஸ்விக்கி போன்ற உணவு டெலிவரி செயலிகளை ரெஸ்டாரண்ட் அதாவது உணவகங்களாகக் கருதி, இந்நிறுவனம் செய்யும் ஒவ்வொரு டெலிவரிக்கும் (சப்ளை) 5 சதவீத ஜிஎஸ்டி வரி விதிக்கத் திட்டமிடப்பட்டு உள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த வரி ரெஸ்டாரண்ட் சேவைகள் பிரிவில் சோமேட்டோ மற்றும் ஸ்விக்கி போன்ற செயலிகள் செய்யும் உணவு டெலிவரிக்கு வரி விதிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளதாகவும், இந்தத் திட்டம் ஒப்புதல் பெற்றால் உணவு டெலிவரி செயலிகள் நிறுவனங்களுக்குத் தங்கள் செயலியில் வரி விதிப்புக்கான மாற்றங்களைச் செய்யக் கால அவசாகம் கொடுக்கப்படும்.
5 சதவீத ஜிஎஸ்டி வரி விதிப்புத் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தால் சோமேட்டோ மற்றும் ஸ்விக்கி போன்ற நிறுவனங்கள் ரெஸ்டாரண்ட் இடத்தில் இருந்து டெலிவரிக்கான ஜிஎஸ்டி வரியை வசூல் செய்து அரசுக்கு செலுத்த வேண்டிய பணிகளைச் செய்ய வேண்டும். இதனால் என்ட் கஸ்டமர் அதாவது உணவு ஆர்டர் செய்யும் மக்களுக்கு எவ்விதான வரி சுமையும் இருக்காது.
சோமேட்டோ மற்றும் ஸ்விக்கி போன்ற நிறுவனங்கள் தங்கள் தளத்தில் இருக்கும் உணவகங்கள் முறையாகப் பதிவு செய்யப்பட்டு உள்ளதா என்று சரிபார்க்க அவசியம் இல்லை.
இதனால் பல பதிவு செய்யப்படாத ஹோட்டல் மற்றும் சிற்றுண்டிகள் இந்தத் தளத்தில் வர்த்தகம் செய்து வருகிறது. இவர்களை முறைப்படுத்தவும், அனைத்து விற்பனையகங்களையும் ஜிஎஸ்டிக்குள் கொண்டு வர வேண்டும் என இந்தத் திட்டம் கொண்டு வரப்பட்டு உள்ளது.
தற்போது விதிக்கப்பட்டு உள்ள 5 சதவீதம் வரி என்பது மிகவும் குறைவாக இருந்தாலும், உணவு டெலிவரி செய்யப்படும் எண்ணிக்கை மிகவும் அதிகம். இதனால் வரி ஏய்ப்பைத் தடுக்க இந்த 5 சதவீத வரி விதிக்கப்பட்டு உள்ளது. இந்த வரி விதிப்பு மூலம் கடந்த இரண்டு வருடத்தில் சுமார் 2000 கோடி ரூபாய் அளவிலான நஷ்டம் ஏற்பட்டு உள்ளது எனவும் கணிக்கப்பட்டு உள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக