இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலானவர்கள் எதிர்கால வாழ்வை நிம்மதியாகக் கழிக்க விரும்புகிறார்கள். அதற்காக இன்றைய தினத்தில் சிறிது சிரமப்பட்டாலும், ஓய்வூதிய காலத்தில் எந்தப் பொருளாதாரப் பிரச்சனையும் இல்லாமல் இருக்க வேண்டும் என நினைக்கிறார்கள். ஆனால், இதற்காக சரியான திட்டமிடல் மற்றும் முதலீடு அவசியம்.
எந்த முதலீடு நம்மை எதிர்காலத்தில் பாதுகாக்கும்? எந்த திட்டம் நமக்குப் பயனளிக்கலாம்? குறிப்பாக, சாதாரண வருமானம் கொண்டவர்கள் எந்த திட்டத்தில் முதலீடு செய்யலாம்? இதைப் பற்றி விரிவாக அறியலாம்.
பிரதான் மந்திரி ஷ்ரம் யோகி மந்தன் யோஜனா (PM-SYM)
இந்த அரசு திட்டம் சிறிய தொழில்கள் செய்பவர்கள், குறைந்த வருமானம் பெறுபவர்கள், தினக்கூலி தொழிலாளர்கள் போன்றோருக்காக உருவாக்கப்பட்டுள்ளது. மாதம் குறைந்தபட்சம் ₹55 முதலீடு செய்தாலே, வருடத்திற்கு ₹36,000 பென்சனாக பெறலாம்.
இது யாருக்கெல்லாம் பயனளிக்கிறது?
தினசரி கூலி வேலை செய்பவர்கள்
சுயதொழில் செய்பவர்கள்
தெருவோர வியாபாரிகள்
ஓட்டுநர்கள், ரிக்ஷா இழுப்பவர்கள்
செருப்பு தைக்கும் தொழிலாளர்கள்
சிறிய அளவில் தொழில் செய்பவர்கள்
60 வயதுக்குப் பிறகு மாதம் ₹3,000 ஓய்வூதியம்
இந்த திட்டத்தில் 18 முதல் 40 வயது வரை உள்ளவர்கள் சேரலாம். 60 வயதிற்கு பிறகு மாதம் ₹3,000 ஓய்வூதியமாக வழங்கப்படும். கணவன்-மனைவி இருவரும் இந்த திட்டத்தில் சேரின், ஒட்டுமொத்தமாக வருடத்திற்கு ₹72,000 வரை பெறலாம்.
எப்படி இணையலாம்?
இந்த திட்டத்தில் இணைய, அருகிலுள்ள பொது சேவை மையத்திற்குச் சென்று பதிவு செய்யலாம். தேவையான ஆவணங்கள்:
ஆதார் கார்டு
வங்கி பாஸ்புக்
பதிவு முடிந்தவுடன், விண்ணப்பதாரர் ஷ்ரம் யோகி அட்டை பெற்றுக் கொள்ளலாம்.
முதலீடு எவ்வளவு?
வயதுக்கு ஏற்ப மாத முதலீடு குறைந்தது ₹55 முதல் அதிகபட்சம் ₹200 வரை இருக்கும்:
18 வயது – ₹55/மாதம்
30 வயது – ₹100/மாதம்
40 வயது – ₹200/மாதம்
18 வயதில் முதலீடு செய்ய ஆரம்பித்தால், 42 ஆண்டுகள் வரை முதலீடு செய்ய வேண்டும். 60 வயதிற்கு பிறகு ஓய்வூதியம் பெறத் தொடங்கலாம்.
தகவல் தொழில்நுட்பத்தின் உதவியுடன் பாதுகாப்பான ஓய்வூதிய திட்டம்!
பிரதான் மந்திரி ஷ்ரம் யோகி மந்தன் யோஜனா சாதாரண வருமானம் கொண்டவர்களுக்குப் பயனளிக்கும் சிறந்த திட்டம் ஆகும். சிறிய முதலீட்டில் பெரிய பயன் பெறலாம். நீங்களும் இன்று முதலீடு செய்து பாதுகாப்பான எதிர்காலத்திற்குத் திட்டமிடுங்கள்!
தெரிந்து கொள்வோம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக