Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 17 செப்டம்பர், 2021

பள்ளி சிறுவர்கள் வங்கி கணக்கில் தெரியாமல் டெபாசிட் செய்யப்பட்ட ரூ.960 கோடி.. இறுதியில் என்ன நடந்தது தெரியுமா?

பள்ளி சிறுவர்களின் வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்யப்பட்ட தொகை எவ்வளவு தெரியுமா?

பீகாரில் இரண்டு குழந்தைகளின் வங்கிக் கணக்கில் யாரும் எதிர்பார்த்திடாத மிகப் பெரிய பெரும் தொகை டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. இந்த திடீர் சம்பவம் அப்பகுதி மக்கள் மற்றும் முழு கிராமத்தையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. உண்மையில் இந்த இரண்டு சிறுவர்களில் வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்யப்பட்ட தொகையைக் கேட்டால் நீங்கள் அதிர்ச்சியாகிவிடுவீர்கள். இந்த பெரும் தொகை எப்படி சிறுவர்களின் வங்கிக் கணக்கிற்கு வந்தடைந்தது? இதை அந்த சிறுவர்கள் அனுபவிக்க முடியுமா என்ற விபரத்தைப் பார்க்கலாம்.

பள்ளி சிறுவர்களின் வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்யப்பட்ட தொகை எவ்வளவு தெரியுமா?

வெளியான சமீபத்திய தகவலின் படி, குருசந்திர விஸ்வாஸ் மற்றும் அசித் குமார் ஆகியோரின் கணக்குகளில் எதிர்பாராத அளவிற்கு பெரும் தொகை நேரடியாக வங்கியால் வரவு வைக்கப்பட்டுள்ளது. இந்த சிறுவர்கள் இருவரும் கதிஹார் மாவட்டத்தில் உள்ள பாகுரா பஞ்சாயத்தில் உள்ள பஸ்தியா கிராமத்தில் வசிக்கின்றனர். இருவரின் வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்யப்பட்ட தொகை எவ்வளவு தெரியுமா?

960 கோடி ரூபாய் இருப்பதை சிறுவர்கள் எப்படி அறிந்தார்கள் தெரியுமா?

இவர்களின் வங்கிக் கணக்கிற்கு திடீரென்று சுமார் ரூ. 960 கோடிக்கும் அதிகமான தொகை டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. இதை அந்த சிறுவர்களின் பெற்றோர்கள் முதலில் நம்பவில்லை என்று கூறப்படுகிறது. இவர்களின் வங்கி கணக்கில் 960 கோடி ரூபாய் இருப்பதை அவர்கள் தெரிந்துகொண்ட விதமே சற்று வேடிக்கையாக அமைந்துள்ளது. விஷயம் தெரிந்தவுடன், அவர்களின் வாழ்நாளில் கண்டிடாத ஆச்சரியத்தை அவர்கள் அனுபவித்ததாகக் கூறப்படுகிறது.

அரசுப் பள்ளி சீருடைக்காக அரசு வழங்கிய உதவி தொகையா இந்த 960 கோடி?

சிறுவர்களின் அரசுப் பள்ளி சீருடைக்காக மாநில அரசு வழங்கும் உதவித் தொகை கிடைத்ததா என்பதை அறிந்துகொள்ள ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவின் (SBI) உள்ளூர் மையப்படுத்தப்பட்ட செயலாக்க மையத்திற்கு (CPC) சென்ற போது, இவர்கள் கோடீஸ்வரர்கள் ஆனா விஷயம் தெரியவந்துள்ளது. சிறுவர்களின் பெற்றோர்கள் உடனடியாக அதிர்ச்சி அடைந்துள்ளனர். சிறுவர்களின் கணக்கில் ரூ. 960 கோடி பணம் இருப்பது உறுதியான செய்தி முழு கிராமத்திற்கு வேகமாகப் பரவியது.

வங்கி இவர்களின் கணக்கில் இருந்த பணத்தை என்ன செய்தது?

இருவரும் உத்தர பீகார் கிராமின் வங்கியில் கணக்கு வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. குருசந்திர விஸ்வாஸின் கணக்கில் சுமார் ரூ. 60 கோடி டெபாசிட் செய்யப்பட்டு இருந்த நிலையில், அசித் குமாரின் கணக்கில் திடீரென ரூ. 900 கோடி இருந்தது என்று அந்த அறிக்கை தகவல் கூறியுள்ளது. இந்த தகவலைச் சிறுவர்களின் வங்கி கிளை மேலாளர் மனோஜ் குப்தாவிற்குத் தெரியப்படுத்தப்பட்டது. அவர் விஷயத்தை ஆராய்ந்து பணம் எடுப்பதை முற்றிலுமாக தடுத்து நிறுத்தியுள்ளார்.

பீகாரை சேர்ந்த மற்றொரு நபர் வங்கி கணக்கில் டெபாசிட் செய்யப்பட்ட 5.5 லட்சம்

முன்னதாக, இதே போல் பீகாரை சேர்ந்த ஒருவரின் வங்கி கணக்கில் ரூ .5.5 லட்சம் தவறாக வரவு வைக்கப்பட்ட சம்பவமும் சமீபத்தில் பெரும் பேச்சை உருவாக்கியது. சிறுவர்களின் வங்கிக் கணக்கு எப்படிப் பணம் எடுக்க முடக்கம் செய்யப்பட்டதோ, அது போன்று இவரின் வங்கி கணக்கு முடக்கம் செய்யப்படாமல் இருந்ததினால், அவரின் வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்யப்பட்ட 5.5 லட்ச ரூபாயைத் தாராளமாக எடுத்து செலவு செய்துள்ளார் இந்த நபர்.

வங்கி பணத்தை திரும்பி கேட்டதற்கு 'மோடி' பெயரை சொன்ன இளைஞர்

வங்கி அவரை கண்டுபிடித்து பணத்தைத் திரும்பக் கேட்டபோது அவர் கூறிய பதில் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. கணக்கில் தவறுதலாகப் போடப்பட்ட பணத்தை திரும்ப தருமாறு வங்கி ஊழியர்கள் அந்த நபரை கேட்டபோது, தனது வங்கி கணக்கில் இருந்த பணம் பிரதமர் நரேந்திர மோடியால் அனுப்பப்பட்டது என்று கூறி பணத்தைத் திருப்பி தர மறுத்துவிட்டார். மான்சி காவல் நிலையத்திற்கு உட்பட்ட பக்தியார்பூர் கிராமத்தைச் சேர்ந்த ரஞ்சித் தாஸுக்கு தவறுதலாகக் கிராமின் வங்கி பணத்தை அனுப்பியது என்பது குறிப்பிடத்தக்கது.

மொத்த பணத்தையும் ஒட்டுமொத்தமாக செலவு செய்துவிட்டேன்

இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் பணம் பெற்றபோது நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். பிரதமர் நரேந்திர மோடி அனைவரின் வங்கிக் கணக்கில் 15 லட்சம் டெபாசிட் செய்வதாக உறுதியளித்ததால், அது முதல் தவணையாக இருக்கலாம் என்று நினைத்து மொத்த பணத்தையும் நான் செலவிழித்துவிட்டேன் என்று அந்த நபர் கூறிவிட்டார். இப்போது, ​​எனது வங்கிக் கணக்கில் சுத்தமாகப் பணம் இல்லை, என்று அவர் கூறிவிட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக