Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 17 செப்டம்பர், 2021

நச்சுனு கேமரா பட்ஜெட் விலை- ரூ.10,000 விலைப் பிரிவில் கிடைக்கும் சிறந்த குவாட் கேமரா ஸ்மார்ட்போன்!

போக்கோ எம்2 விலை: ஸ்மார்ட்போன் வாங்கும் போது பெரும்பாலானோர் கவனிக்கக் கூடிய முக்கிய விஷயங்களில் கேமாரவும் ஒன்று. தற்போது மலிவு விலை ஸ்மார்ட்போன்களில் கூட மூன்று அல்லது நான்கு கேமராக்கள் இருக்கிறது. இருப்பினும் குவாட் கேமரா அனுபவம் சிறந்தவையாகும். குவாட் கேமரா அமைப்புடன் பல்வேறு சாதனங்களும் ரூ.10,000-த்துக்கு கீழ் கிடைக்கிறது.

ரூ.10,000 விலைப்பிரிவில் ஸ்மார்ட்போன்

சிறந்த குவாட்-கேமரா சாதனத்தை வாங்க திட்டமிட்டிருந்தால் அதற்கு கீழே வழங்கப்பட்டுள்ள சாதனங்கள் சிறந்த தீர்வாகும். குவாட் கேமரா அமைப்புடன் ரூ.10,000 விலைப்பிரிவில் கிடைக்கும் சிறந்த ஸ்மார்ட்போன்களின் பட்டியல் குறித்து பார்க்கலாம்.

போக்கோ எம்2 

விலை: ரூ.12,999

6.53 இன்ச் (2340 × 1080 பிக்சல்கள்) முழு எச்டி ப்ளஸ் எல்சிடி டிஸ்ப்ளேவுடன் வருகிறது. இது டிஸ்ப்ளே 400 நிட்ஸ் பிரகாச அனுபவத்துடன் வருகிறது. கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு அம்சமும் இதில் இருக்கிறது.

ஆக்டோ கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி80 12 என்எம் செயலி 950 மெகாஹெர்ட்ஸ் ஏஆர்எம் மாலி-ஜி 52 2 இஎம்சி 2 ஜிபியூ மூலம் இணைக்கப்படுகிறது.

இது 6 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள்சேமிப்பு, 128 ஜிபி உள்சேமிப்பு என்ற இரண்டு வேரியண்ட் உடன் வருகிறது.

மைக்ரோ எஸ்டி கார்ட் மூலம் 512 ஜிபி வரை மெமரி விரிவாக்க வசதி இருக்கிறது.

இரட்டை சிம் (நானோ + நானோ + மைக்ரோ எஸ்டி கார்ட் ஸ்லாட் இருக்கிறது)

எம்ஐயூஐ 11 உடன் ஆண்ட்ராய்டு 10 ஆதரவும் எம்ஐயூஐ 12 மேம்பாட்டு வசதியுடன் இருக்கிறது.

13 மெகாபிக்சல், 8 எம்பி இரண்டாம் நிலை, 2 எம்பி மற்றும் 5 எம்பி பின்புற கேமராக்கள் இருக்கின்றன.

முன்புறத்தில் 8 எம்பி செல்பி கேமரா

5000 எம்ஏஎச் பேட்டரி வசதியோடு இருக்கிறது.

சாம்சங் கேலக்ஸி எஃப்12

சாம்சங் கேலக்ஸி எஃப்12 சாதனத்தின் விலை ரூ.10,999 ஆக இருக்கிறது.

6.5 இன்ச் (720 × 1600 பிக்சல்கள்) எச்டி ப்ளஸ் இன்பினிட்டி-வி டிஸ்ப்ளே வசதியோடு வருகிறது. இது 90 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்துடன் கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு வசதியோடு வருகிறது.

எக்ஸினோஸ் 850 ஆக்டோ கோர் 2 ஜிகாஹெர்ட்ஸ் குவாட் ப்ளஸ் 2 ஜிகாஹெர்ட்ஸ் குவாட் உடன் இணைக்கப்பட்டுள்ளது.

4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள்சேமிப்பு, 128 ஜிபி உள்சேமிப்பு என இரண்டு வேரியண்ட் வகைகள் இருக்கிறது.

1 டிபி வரை மெமரி விரிவாக்கக்கூடிய மைக்ரோ எஸ்டி கார்ட் ஸ்லாட் இருக்கிறது.

இரட்டை சிம் (நானோ + நானோ + மைக்ரோ எஸ்.டி)

ஒன்யூஐ 3.1 உடன் ஆண்ட்ராய்டு 11 ஆதரவோடு வருகிறது.

48 மெகாபிக்சல் கேமரா, 5 மெகாபிக்சல் இரண்டாம் நிலை கேமரா, 2 எம்பி, 2 எம்பி என நான்கு பின்புற கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

முன்புறத்தில் 8 எம்பி செல்பி கேமரா பொருத்தப்பட்டிருக்கிறது.

4ஜி வோல்ட்இ

6000 எம்ஏஎச் பேட்டரி உடன் வருகிறது.

இன்பினிக்ஸ் ஹாட் 10

விலை: ரூ.9,499

6.78 இன்ச் (1640 x 720 பிக்சல்கள்) டிஸ்ப்ளே வசதியோடு எச்டி ப்ளஸ் ஆதரவை கொண்டுள்ளது.

ஏஆர்எம் மாலி ஜி52 ஆக்டோ கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி70 12 என்எம் செயலியுடன் வருகிறது.

4 ஜிபி ரேம், 64 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு வருகிறது. அதேபோல் 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு வருகிறது. மைக்ரோ எஸ்டி கார்ட் மூலம் மெமரி விரிவாக்க வசதியும் இருக்கிறது.

இரட்டை சிம் (நானோ + நானோ + மைக்ரோ எஸ்டி) ஆதரவு இருக்கிறது.

ஆண்ட்ராய்டு 10 அடிப்படையிலான எக்ஸ்ஓஎஸ் 7 ஆதரவோடு வருகிறது.

16 எம்பி பிரதான கேமரா, 2 எம்பி, 2 எம்பி கேமரா, எஃப்/1.8 குறைந்த ஒளி ஆதரவு இருக்கிறது.

முன்புறத்தில் 8 மெகாபிக்சல் செல்பி கேமரா இருக்கிறது.

இரட்டை 4ஜி வோல்ட்இ

5200 எம்ஏஎச் பேட்டரி ஆதரவோடு வருகிறது.

டெக்னோ ஸ்பார்க் பவர் 2 ஏர்

விலை: ரூ.8,499

7 இன்ச் (1640 x 720) பிக்சல்கள்) எச்டி ப்ளஸ் விகிதத்துடன் வருகிறது. 2.5டி வளைந்த கண்ணாடி காட்சி அனுபவத்தோடு வருகிறது. 480 நிட்ஸ் பிரகாச உச்சவரம்பு நிலையை கொண்டிருக்கிறது.

2 ஜிகாஹெர்ட்ஸ் குவாட் கோர் மீடியாடெக் ஹீலியோ ஏ22 12 என்எம் செயலி ஜிபியூ வசதியுடன் வருகிறது.

3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு வருகிறது.

மைக்ரோ எஸ்டி கார்ட் மூலம் 1 டிபி வரை மெமரி விரிவாக்கம் செய்யலாம்.

ஆண்ட்ராய்டு 10 அடிப்படையிலான HiOS 6.1 வசதியோடு வருகிறது.

இரட்டை சிம் கார்ட் ஆதரவோடு வருகிறது.

13 மெகாபிக்சல், 2 எம்பி, 2 எம்பி பின்புற கேமரா அமைப்புகள் உள்ளது.

முன்புறத்தில் 8 மெகாபிக்சல் செல்பி கேமரா வசதி இருக்கிறது.

6000 எம்ஏஎச் பேட்டரி வசதியோடு வருகிறது.

ரியல்மி சி15

விலை: ரூ.8,999

6.52 இன்ச் (1600 x 720 பிக்சல்கள்) HD+ ஆதரவோடு வருகிறது. மினி டிராப் டிஸ்ப்ளே கார்னிங் கொரில்லா கிளாஸ் 3+ பாதுகாப்பு வசதியுடன் வருகிறது. 2.3 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ கோர் மீடியாடெக் ஹீலியோ 12 என்எம் செயலி மூலம் இயக்கப்படுகிறது.

4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு வருகிறது.

அதேபோல் மைக்ரோ எஸ்டி கார்ட் மூலமாக 256 ஜிபி வரை மெமரி விரிவாக்க வசதி இருக்கிறது.

இரட்டை சிம் (நானோ + நானோ + மைக்ரோ எஸ்டி கார்ட் ஸ்லாட் இருக்கிறது)

ஆண்ட்ராய்டு 10 அடிப்படையிலான ரியல்மி யூஐ ஆதரவோடு வருகிறது.

13 மெகாபிக்சல் பின்புற கேமரா, 8 எம்பி, 2 மெகாபிக்சல், 2 மெகாபிக்சல் கேமரா இடம்பெற்றுள்ளது.

முன்புறத்தில் 8 மெகாபிக்சல் செல்பி கேமரா இருக்கிறது.

இரட்டை 4ஜி வோல்ட்இ ஆதரவோடு வருகிறது.

6000 எம்ஏஎச் பேட்டரி வசதியோடு வருகிறது.

டெக்னோ ஸ்பார்க் 5

விலை: ரூ.9,499

6.6 இன்ச் எச்டி ப்ளஸ் ஐபிஎஸ் டச் வசதியோடு வருகிறது.

2 ஜிகாஹெர்ட்ஸ் குவாட் கோர் செயலி 2 ஜிபி ரேம் உடன் வருகிறது. 32 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு வருகிறது.

இரட்டை சிம் கார்ட் ஆதரவு

13 மெகாபிக்சல், 2 மெகாபிக்சல், 2 மெகாபிக்சல் எல்இடி ஃப்ளாஷ் உடன் மூன்று பின்புற கேமரா பொருத்தப்பட்டுள்ளது.

செல்பி வசதிக்கென 8 மெகாபிக்சல் முன்புற கேமரா இருக்கிறது.

இரட்டை 4ஜி வோல்ட்இ

வைஃபை 802.11

ப்ளூடூத், ஜிபிஎஸ், 5000 எம்ஏஎச் பேட்டரி வசதியோடு வருகிறது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக