கடந்த சில ஆண்டுகளாக ஆன்லைன் ஷாப்பிங் மோகம் என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. அதிலும் கொரோனாவின் வருகைக்கு பின்னர் இந்த விகிதம் கணிசமாக அதிகரித்துள்ளது எனலாம்.
எக்கச்சக்க சலுகைகள்
கிரெடிட் கார்டுகளுக்கு வழங்கப்படும் சலுகைகள், தள்ளுபடிகள், கேஷ் பேக் ஆஃபர்கள், பை நவ் பே லேட்டர் சலுகை என பல வித சலுகைகள் வாடிக்கையாளர்களை சுண்டி இழுக்கின்றன. குறிப்பாக பை நவ் பே லேட்டர் சலுகையானது, அவசர காலத்தில் பொருட்களை பெற்றுக் கொண்டு, பின்னர் தொகை செலுத்தும் ஆப்சன் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பினை பெற்றுள்ளது.
பை நவ் பே லேட்டர் ஆப்சன்
குறிப்பாக பண்டிகை காலத்தில் இது போன்ற சலுகைகளுக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு உண்டு. அந்த வகையில் நாம் இன்று பார்க்கவிருக்கும் ஆப்சன் பை நவ் பே லேட்டர் ஆப்சன், அதற்கான வட்டி விகிதம், மற்ற முக்கிய விவரங்கள் என்ன வாருங்கள் பார்க்கலாம். ஏற்கனவே வரவிருக்கும் பண்டிகை காலத்தில் வாடிக்கையாளர்களை கவர்ந்திழுக்கும் சலுகைகளை வாரி வழங்க இகாமர்ஸ் நிறுவனங்கள் திட்டமிட்டு வருகின்றன.
விவரங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்
கொரோனா பெருந்தொற்று பாதிப்புக்கு மத்தியில் பலரும், ஆன்லைன் இ-காமர்ஸ் நிறுவனங்களின் பிஎன்பிஎல் கடன் திட்டத்தினை நாடி வருகின்றனர். எனினும் இந்த வசதியை நாடும் முன், இதன் முக்கிய அம்சங்களை தெரிந்து கொள்வது மிக அவசியம். இதன் அனைத்து விவரங்களையும் தெரிந்து கொள்ள வேண்டும்.
கிரெடிட் கார்டுக்கு மாற்று
பொருட்களை வாங்கும் போது பணம் கொடுக்காமல், பின்னர் அதற்கான தொகையை செலுத்தும் வசதி தான், பை நவ் பே லேட்டர். இந்த ஆப்சனை கிரெடிட் கார்டு பயன்படுத்தி வாங்கலாம். ஆனால் சில நிறுவனங்கள் கிரெடிட் கார்டு இல்லாமலும் வழங்கி வருகின்றன. அப்படி கார்டு இல்லாமல் ஆன்லைன் ஷாப்பிங் செய்ய உதவும் வகையில் அறிமுகம் செய்யப்பட்டது தான் யூனி பே. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் இணையத்தில் பொருட்களை வாங்கி விட்டு, பின்னர் அதற்கான தொகையை செலுத்தலாம்.
குறுகிய கால கடன் வசதி
இந்த திட்டத்தை எளிதான குறுகிய கால கடன் வசதி போல கருதலாம். குறிப்பிட்ட காலத்திற்குள் தொகையை செலுத்திவிட்டால், இதற்காக தனியே எந்த கட்டணமும் செலுத்த வேண்டாம்.
அதற்கு மேல் அவகாசம் தேவைப்பட்டால், மாதத் தவணையாக பணத்தை செலுத்தலாம். தவணை செலுத்தும் காலத்திற்கு உரிய வட்டி வசூலிக்கப்படும்.
எனினும் மாத தவணையை செலுத்த தவறினால் அபராதம் செலுத்த வேண்டும். ஆக இந்த ஆப்சன் கையில் பணம் இல்லாத போது உடனடியாக பொருட்களை வாங்க இந்த வசதி ஏற்றதாக இருக்கும். எனினும் குறிப்பிட்ட காலத்திற்கு அந்த தொகையை செலுத்த வேண்டும்.
யாருக்கு இந்த பே லேட்டர் ஆப்சன்?
இந்த கடன் திட்டம் அனைவருக்குமான கடன் வசதியை அளிப்பதாக கருதப்படுகிறது. தற்போது இ- காமர்ஸ் நிறுவனங்கள், வங்கிகள் இந்த வசதியை அதிகம் முன்னிறுத்துகின்றன. பொருட்களை வாங்க, சேவைகளை பெற எளிய வழி என்றாலும், இந்த வசதியை கவனமாக நாட வேண்டும். ஏனெனில் இந்த இ-காமர்ஸ் வங்கிகள் மற்றும் நிறுவனங்கள் இவற்றில் உள்ள லாபம் காரணமாகவே இவற்றை வழங்கி வருகின்றன.
கட்டணம் அதிகம்
இந்த கடன் திட்டத்தில் வாடிக்கையாளர்கள் குறிப்பிட்ட கால அவகாசத்தில் தொகையை செலுத்த முடியாமல், தவணை வசதியை நாடுவதாக இருந்தால், அதற்கான வட்டியை சேர்த்து செலுத்த வேண்டும்.
மேலும் பல நேரங்களில் செயல்பாட்டு கட்டணத்தையும் செலுத்த வேண்டியிருக்கும். தொகையை செலுத்த தவறினால் அபராத கட்டணமும் சேரும். இவை எல்லாம் சேர்ந்து செலவை அதிகமாக்கும்.
நெருக்கடி நேரத்தில் விருப்பமான பொருள்
இது போன்ற ஆப்சன்களை பஜாஜ் பைனான்ஸ் மற்றும் ஜெஸ்ட் மணி போன்ற நிறுவனங்கள், இந்த பே லேட்டர் சேவையினை வழங்கி வருகின்றன. இவை மாத தவணை சலுகையும் கொடுக்கிறது. இதனால் நெருக்கடியான சமயத்தில் விருப்பமான பொருட்களை வாங்கவும் இந்த பேமெண்ட் ஆப்சன் உதவுகிறது.
இதனையும் யோசித்து செயல்படுங்கள்
இந்த பே லேட்டர் ஆப்சன் கட்டணங்கள் குறைவானதாக தோன்றினாலும், நடைமுறையில் அதிக சுமையாகலாம். மேலும் பே லேட்டர் ஆப்சன் இந்த கடன் வசதி தேவையில்லாத பொருட்களை கூட வாங்கத் துாண்டலாம். ஆக உங்களுக்கு மிக அவசியமான பொருட்களை வாங்கலாம். இதனை தவிர்க்க இயலாமல் இந்த வசதியை நாடும் போது, அதற்கான மொத்த செலவை கணக்கிட்டுப் பார்த்து அதற்கேற்ப செயல்படலாம்.
நிபுணர்களின் கருத்து?
நிபுணர்கள் இந்த யுனி கார்டுகள் கிரெடிட் கார்டுகள் போலத் தான். சரியான நேரத்தில் சரியாக பயன்படுத்திக் கொண்டால் பயன் தான். சரியான நேரத்தில் செலுத்த முடியாத பட்சத்தில் சற்று யோசிக்க வேண்டுமே. ஆக வரவிருக்கும் பண்டிகை காலத்தில் இந்த திட்டத்தினை பயன்படுத்த திட்டமிடும்போது, யோசித்து செயல்படுவது நல்லது.
யூனி பே (Uni pay)
மேற்கண்ட பே லேட்டர் சேவையினை வழங்கி வரும் யூனி பே (Uni pay) சேவை பற்றித் தான் இதில் பார்க்கவிருக்கிறோம். உடனடி கடனுக்கு பல ஆப்கள் உள்ளன. அதே போல் கிரெடிட் கார்டுக்கான ஆப்கள் பல உள்ளன. அதில் ஒன்று தான் யூனி பே கார்டு. இது இந்தியாவில் பே 1/3 கார்டு சேவையினை வழங்கி வருகின்றது. அதாவது 30,000 ரூபாய்க்கு நீங்கள் ஒரு பொருளை வாங்குகிறீர்கள் என வைத்துக் கொள்வோம். நீங்கள் இதற்கான தொகையினை 10,000 ரூபாயாக மூன்று தவணைகளாக செலுத்திக் கொள்ளலாம்.
எப்படி பெறுவது?
இந்த கிரெடிட் ஆப்சனை கிரெடிட் கார்டாகவும் பெற்றுக் கொள்ள முடியும். அதெல்லாம் சரி இந்த கார்டினை எப்படி பெறுவது? வாருங்கள் பார்க்கலாம்.
பிளே ஸ்டோரில் இந்த யூனி கார்டுஸ் என்று கொடுத்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த ஆப்பினை பதிவிறக்கம் செய்த பிறகு உங்களது ஆதார், பான் விவரங்கள் கொடுத்த பிறகு, உங்களுக்கு இந்த சேவை வழங்க முடியுமா? என வெரிஃபை செய்த பிறகு தான் பெற முடியும்.
உங்களது கிரெடிட் கார்டினை பொறுத்து உங்களுக்கான லிமிட்டினை வைப்பார்கள். அந்த லிமிட் உங்களுக்கு சரியென்றால், கே.ஓய்.சி செய்து பெற்றுக் கொள்ளலாம்.
கால அவகாசம் அதிகம்
ஆரம்பத்தில் இந்த கார்டுக்கு 1% கேஷ் பேக் சலுகையும் கிடைக்கிறது. அதோடு கிரெடிட் கார்டுடன் ஒப்பிடும்போது கால அவகாசமும் அதிகமாக கிடைக்கிறது. கிரெடிட் கார்டில் கிடைக்கும் வட்டியில்லா கால அவகாசத்தினை விட, இந்த யூனிபே ஆப்சனில் 3 மாதம் கால அவகாசம் கிடைக்கும்.
எவ்வளவு கடன் பெறலாம்
இந்த யூனி பே ஆப்சனில் 20,000 ரூபாய் முதல் 6 லட்சம் ரூபாய் வரையில் கடன் பெற்றுக் கொள்ள முடியும். இதன் மூலம் வாடிக்கையாளர்கள் கடன் ஆப்சனை பெற்ற பின்பு மாத மாதம் செலுத்தும் ஆப்சன் அல்லது ஓரே தவணையாகவும் செலுத்திக் கொள்ளலாம். எனினும் தவணை தவறும்பட்சத்தில் வட்டிக்கு வட்டி செலுத்த வேண்டியிருக்கும். இந்த யூனி பே ஆப்சனுக்கு செப்டம்பர் 31, 2021 வரையில் இணையும் கட்டணம் 1,999 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக