Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 17 செப்டம்பர், 2021

பளிச் பற்களை பெற வேண்டுமா? இந்த டிப்ஸ் உங்களுக்கு உதவும்

 பளிச் பற்களை பெற வேண்டுமா? இந்த டிப்ஸ் உங்களுக்கு உதவும்

நம் முகத்தின் அழகில் பற்களுகளுக்கு ஒரு மிகப்பெரிய பங்கு உண்டு. எனினும், அழகு சேர்ப்பது பற்களின் இரண்டாம் நிலை பணிதான். நாம் உண்ணும் உணவை நாம் நன்றாக கடித்து உண்ண உதவுவதே பற்களின் முக்கிய பணியாகும். இதன் காரணமாக அதிக பாதிப்புக்கும் நம் பற்கள் ஆளாகின்றன. 

‘வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டுப்போகும்’ என்பார்கள். ஆனால், இன்றைய காலத்தில் வாய்விட்டு சிரிக்கக்கூட பலர் அஞ்சுவதை நாம் கண்டுள்ளோம். ஆம்!! நம் பற்களை யாராவது கவனித்து விடுவார்களோ என்ற அச்சம்தான் அது. ஃபாஸ்ட் புட் பெருகிவிட்ட இக்காலத்தில் நாம் உண்ணும் உணவால் நமது பற்களின் ஆரோக்கியமும் நிறமும் திடமும் வெகுவாக பாதிக்கப்படுகின்றது. 

விலையுயர்ந்த பற்பசையைப் பயன்படுத்தினாலும், பற்கள் வெண்மையாகவும் பிரகாசமாகவும் இருப்பதில்லை என பெரும்பாலும் மக்கள் புகார் அளிப்பதைக் கேட்டுள்ளோம்.  இத்தகைய சூழ்நிலையில், பற்களை பராமரிப்பதற்கான எளிதான வீட்டு பராமரிப்பு பற்றி தெரிந்தால் அது மிகவும் உபயோகமாக இருக்கும். பற்களை சுத்தம் செய்ய வேண்டுமானாலும் பிரகாசிக்கச் செய்ய வேண்டுமானாலும், அல்லது துர்நாற்றத்தை அகற்ற வேண்டும் என்றாலும், அதற்கு பல எளிய, வீட்டு வைத்திய வழிமுறைகள் நமக்கு உதவும். இவை பற்கள் மற்றும் ஈறுகளுக்கு நன்மை பயக்கும். அவற்றில் சிலவற்றை இங்கே காணலாம்:

கடுகு எண்ணெய்

கடுகு எண்ணெயில் உப்பு கலந்து காலையிலும் மாலையிலும் பயன்படுத்துவது பற்கள் (Tooth), ஈறுகள் ஆகியவற்றை பலப்படுத்தி பல்வலி, ஈறுகளில் ரத்தம் வருவது ஆகியவற்றிலிருந்து நிவாரணம் அளிக்கிறது. இது தவிர, பற்களும் பளபளப்பாகவும் வலுவாகவும் இருக்கும்.

சோடா உப்பு, கல் உப்பு

பற்கள் பளபளப்பாக இருக்க, ஒரு ஸ்பூன் சோடா உப்பு, ஒரு ஸ்பூன் பொடித்த கல் உப்பு (Salt) மற்றும் தூள் ஐசிங் ஆகியவற்றை கலந்து, அந்த கலவையால் பற்களை சுத்தம் செய்யுங்கள். சிறிது பேக்கிங் சோடாவில் எலுமிச்சை சாற்றை கலந்து பேஸ்ட் செய்து பிரஷ்ஷின் உதவியுடன் பற்களில் நன்கு தடவவும். அதற்கு முன், டிஷ்யூ பேப்பரில் தேய்த்து பற்களை சுத்தம் செய்ய வேண்டும்.

ஆப்பிள் வினிகர்

காலையில் பல் துலக்கிய பின், ஆப்பிள் வினிகரில் சம அளவு தண்ணீர் கலந்து வாய் கொப்பளித்தால், பற்களின் துர்நாற்றம் நிமிடங்களில் காணாமல் போகும். வினிகரை வாரத்திற்கு இரண்டு முறைக்கு மேல் பயன்படுத்த வேண்டாம்.

தேங்காய் எண்ணெய்

காலையில், பல் துலக்குவதற்கு முன், ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெயை வாயில் விட்டு, பற்களைச் சுற்றிலும் நன்றாகச் சுழற்றி, பற்களில் படுமாறு எண்ணெயை 15 நிமிடங்கள் விட்டு விடுங்கள். பின்னர் மிதமான தண்ணீரில் நன்றாக வாயைக் கொப்பளிக்கவும். இப்படி வாரத்தில் இரண்டு அல்லது மூன்று முறை செய்தால், பற்கள் சுத்தமாகவும் வெண்மையாகவும் மாறும். ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெயில் ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் 2-3 ஸ்பூன் புதினா எண்ணெயை கலக்கவும். இப்போது அந்த கலவையை சாதாரண பற்பசையாகப் பயன்படுத்துங்கள். இந்த பாட்டி வைத்தியம் பற்களை நன்றாக கவனிப்பதோடு பற்களுக்கு வெண்மை தரும்.

சாத்துக்குடி

சாத்துக்குடி பழத்தின் உலர்ந்த தோலை பட்டை இலையுடன் சேர்த்து நன்றாக அரைக்கவும். பின்னர் அந்த தூளைக் கொண்டு பற்களை சுத்தம் செய்யுங்கள். வீட்டில் செய்யப்படும் இப்படிப்பட்ட பல் தூள் பற்களுக்கு மிகவும் பொருத்தமானது.

கற்றாழை 

புதிய கற்றாழை (Aloe Vera) சாறு அல்லது அதிலிருந்து தயாரிக்கப்பட்ட ஜெல்லை பற்களின் மீது தேய்க்கவும். பின்னர் பிரஷ் கொண்டு மசாஜ் செய்து வாயைக் கொப்பளிக்கவும். காலையில் பல் துலக்கிய பின்னரும் இதை எப்போது வேண்டுமானாலும் செய்யலாம். சில வாரங்களிலேயே உங்கள் புன்னகை பிரகாசமான பளபளக்கும் புன்னகையாக மாறும். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக