Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 15 செப்டம்பர், 2021

முகேஷ்-க்கு விளையாட்டு, அனில்-க்கு சினிமா.. கலக்கும் அம்பானி பிரதர்ஸ்..!

 டி-சீரியஸ் மற்றும் ரிலையன்ஸ் எண்டர்டெயின்மென்ட்

இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானி தொட்ட இடம் எல்லாம் வெற்றிகரமான வர்த்தகமாக மாறும் சக்தி கொண்டாவராக மாறியுள்ளார். ஜியோ, ரீடைல், புதிதாக Avantra பிராண்ட், BluSmart உடன் சேர்ந்து இந்தியா முழுவதும் எலக்ட்ரிக் சார்ஜிங் ஸ்டேஷன் என அசத்தி வருகிறார்.

இதேவேளையில் முகேஷ் அம்பானியின் தம்பி அனில் அம்பானி வர்த்தகத்தில் மிகப்பெரிய சரிவைச் சந்தித்திருக்கும் வேளையில், மொத்தமாகத் திவாலாகும் நிலைக்குத் தள்ளப்பட்டு உள்ளார்.

இந்நிலையிலும் அண்ணன் தம்பி இருவரும் இரு திசையில் இருந்தாலும், தொடர்ந்து புதிய துறையில் வர்த்தகம் செய்ய ஆர்வமாக உள்ளனர். இதன் படி அண்ணன் முகேஷ் அம்பானி விளையாட்டுத் துறையிலும், தம்பி சினிமா துறையிலும் புதிய திட்டங்களைக் கையில் எடுத்துள்ளனர்.

கொரோனா தொற்று

இந்தியாவில் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த அறிவிக்கப்பட்டு இருந்த ஊரடங்கு கட்டுப்பாடுகள் தற்போது அதிகளவிலான தளர்வுகள் அறிவிக்கப்பட்டு இருக்கும் காரணத்தால், சினிமா துறை வேகமாக இயங்கி வருகிறது. இந்த நிலையைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் இந்தியாவில் இரு முக்கியச் சினிமா நிறுவனங்கள் மிகப்பெரிய திட்டத்திற்காக இணைந்துள்ளனர்.

டி-சீரியஸ் மற்றும் ரிலையன்ஸ் எண்டர்டெயின்மென்ட்

இந்தியாவின் முன்னணி ரெக்காரட் லேபிள் நிறுவனமான டி-சீரியஸ் மற்றும் அனில் அம்பானியின் ரிலையன்ஸ் எண்டர்டெயின்மென்ட் லிமிடெட் இணைந்து அடுத்த 36 மாதத்தில் 10 திரைப்படங்கள் எடுக்க முடிவு செய்துள்ளது. இந்த மாபெரும் திட்டத்தில் திரில்லர், பயோபிக், காமெடி எனப் பல வகையில் சுமார் 1000 கோடி ரூபாய் திரைப்படம் எடுக்கத் திட்டமிட்டுள்ளது. இதில் சில திரைப்படங்கள் அடுத்த வருடத்தின் ஆரம்பத்திலேயே வெளியாக உள்ளது.

 1000 கோடி ரூபாட் திட்டம்

டி-சீரியஸ் மற்றும் ரிலையன்ஸ் எண்டர்டெயின்மென்ட் லிமிடெட் கூட்டணியில் உருவாக்க இருக்கும் 1000 கோடி ரூபாய் திட்டம் தான் நாட்டிலேயே மிகப்பெரிய சினிமா துறை சார்ந்த திட்டமாக உள்ளது. இந்தியாவில் பல முன்னணி சினிமா நிறுவனங்களும், சினிமா தயாரிப்பாளர்களும் தியேட்டர் ரிலீஸ் செய்யாமல் அமேசான் மற்றும் நெட்பிளிக்ஸ் சார்ந்து இருக்கும் நிலையில் இந்த 1000 கோடி ரூபாய் திட்டம் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரிலையன்ஸ் இன்பராஸ்டக்சர்

அனில் அம்பானி தலைமை வகிக்கும் ரிலையன்ஸ் இன்பராஸ்டக்சர் நிறுவனம் 4 வருடத்திற்கு முன்பு டெல்லி மெட்ரோ அமைப்பிற்கு எதிராகத் தொடுத்த வழக்கில், உச்ச நீதிமன்ற பென்ச், ரிலையன்ஸ் இன்பரா நிறுவனத்திற்குச் சாதகமாகத் தீர்ப்பு கொடுத்துள்ளது.

வழக்கில் வெற்றி

இது மட்டும் அல்லாமல் நடுவர் நீதிமன்றம் வட்டியுடன் சேர்த்து மொத்தம் 630 மில்லியன் டாலர் அதாவது 4,660 கோடி ரூபாய் அளவிலான தொகையைக் கொடுக்க உத்தரவிட்டு உள்ளதாக ரிலையன்ஸ் இன்பரா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. இது அனில் அம்பானிக்கு பெரும் வெற்றியாகப் பார்க்கப்பட்ட நிலையில், தற்போது சினிமா துறையில் மிகப்பெரிய திட்டத்தை அறிவித்துள்ளார் அனில் அம்பானி.

முகேஷ் அம்பானியின் விளையாட்டு

இந்நிலையில் அனில் அம்பானியின் அண்ணன் முகேஷ் அம்பானி தனது தொலைக்காட்சி நிறுவனமான வாய்காம் 18 மூலம் விளையாட்டுப் போட்டிகளை ஒளிபரப்பு மற்றும் அதைச் சார்ந்த விளம்பரம் மற்றும் வர்த்தகத்தில் முன்னோடியாக இருக்க வேண்டும் என்பதற்காக இந்தியாவில் பல முன்னணி நிறுவனங்களை எதிர்த்து நேரடியாகப் போட்டிப்போட்டு வருகிறார்.

FIFA 2022 உலகக் கோப்பை

2 நாட்களுக்கு முன்பு யாரும் எதிர்பார்க்காத வகையில் புட்பால் FIFA 2022 உலகக் கோப்பை போட்டிகளை இந்தியாவில் ஒளிபரப்பும் ஒப்பந்தத்தை சுமார் 450 கோடி ரூபாய் சுமார் 60 மில்லியன் டாலருக்கு கைப்பற்றியுள்ளது. முகேஷ் அம்பானியின் வாய்காம் 18 நிறுவனம்.

FIFA உலகக் கோப்பை

FIFA உலகக் கோப்பை போட்டிகளை இந்தியாவில் ஒளிபரப்பும் திட்டத்தை 2010 வரையில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் தான் வைத்திருந்தது. இப்போது இந்த ஒப்பந்தத்தின் மதிப்பு 12 மில்லியன் டாலராக மதிப்பிடப்பட்டது. இதைத் தொடர்ந்து 2014 மற்றும் 2018 ஆகிய இரு உலகக் கோப்பை போட்டிகளின் ஒளிபரப்பு ஒப்பந்தத்தைச் சோனி ஸ்போர்ட்ஸ் சுமார் 80 மில்லியன் டாலருக்குக் கைப்பற்றியது.

வாய்காம் 18 அதிரடி

இந்நிலையில் தற்போது 2022ல் கத்தார் நாட்டில் நடக்கும் FIFA உலகக் கோப்பை போட்டிகளை மட்டும் (ஒரு வருடத் திட்டம் மட்டும்) இந்தியாவில் ஒளிபரப்பப் புதிதாக இத்துறைக்குள் நுழைந்துள்ள வாய்காம் 18 நிறுவனம் சுமார் 60 மில்லியன் டாலருக்குக் கைப்பற்றியுள்ளது.

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்

முகேஷ் அம்பானி தலைமை வகிக்கும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் கீழ் இயங்கும் பொழுதுபோக்கு நிறுவனமான வாய்காம் 18 நிறுவனம், ஆகஸ்ட் மாதம் இத்தாலி நாட்டில் மிகவும் பிரபலமாக இருக்கும் புட்பால் லீக் Serie A போட்டிகளின் அடுத்த 3 சீசன்களை இந்தியாவில் ஒளிபரப்பவும், டிஜிட்டல் மீடியா ரைட்ஸ்-ஐ மொத்தமாகக் கைப்பற்றியது.

பல திட்டங்கள் கையில்

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைமையிலான வாய்காம் 18 ஏற்கனவே அபுதாபி டி10 கிரிக்கெட் போட்டிகள், ஏடிபி மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டிகள், லா லிகா புட்பால், புட்பால் லீக் Serie A போட்டிகளுக்கான ஒளிபரப்பு மற்றும் டிஜிட்டல் மீடியா ரைட்ஸ்-ஐ வாங்கியுள்ளது. இந்நிலையில் தற்போது 2022ல் கத்தார் நாட்டில் நடக்கும் FIFA உலகக் கோப்பை புட்பால் போட்டி திட்டத்தையும் பெற்றுள்ளது.

அடுத்தது ஐபிஎல் டார்கெட்

இதைத் தொடர்ந்து வாய்காம் 18 அடுத்த ஐபிஎல், ஐசிசி போட்டிகள், அடுத்த வருசம் BCCI துவங்கும் போட்டிகள் அனைத்தையும் அடுத்தடுத்து கைப்பற்றி ஸ்போர்ட்ஸ் என்டர்டெயின்மென்ட் பிரிவில் முன்னோடியாக விளங்க திட்டமிட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக