சாம்சங் கேலக்ஸி ஏ52 எஸ் 5ஜி சாதனத்துக்கான அப்டேட் இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது. 4 ஜிபி ரேம் வரையிலான விரிவாக்கத்தின் மூலம் மெய்நிகர் ரேம் அம்சத்தை இந்த சாதனம் பெற இருக்கிறது.
சாம்சங் கேலக்ஸி ஏ52 எஸ் 5ஜி
சமீபத்தில் சாம்சங் கேலக்ஸி ஏ52 எஸ் 5ஜி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது இதற்கான புதுப்பிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம் 4ஜிபி மெய்நிகர் நினைவகம் சேர்க்கப்படுகிறது. மேலும் இந்த புதுப்பிப்பு ஆனது கேமரா மேம்பாடுகள் மற்றும் பாதுகாப்பு இணைப்பு ஆகியவற்றை ஒருங்கிணைக்கிறது.
புதிய மேம்படுத்தல் ரேம் பிளஸ்
சாம்சங் கேலக்ஸி ஏ52 எஸ் 5ஜி இந்த மாத தொடக்கத்தில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. அறிமுகம் செய்த சில காலத்திலேயே அதன் முதன் மென்பொருள் புதுப்பிப்பை பெற்றிருக்கிறது. புதிய மேம்படுத்தல் ரேம் பிளஸ் அம்சத்தையும் இணைக்கிறது. சமீப காலங்களில் ஒப்போ, விவோ, ரியல்மி மற்றும் ரெட்மி ஆகிய சாதனங்களிலும் இதேபோன்ற மெய்நிகர் ரேம் அம்சங்களை வெளியிட்டது. அதேபோல் சாம்சங் நிறுவனமும் இதுபோன்ற அம்சத்தை வெளியிட்டுள்ளது.
8 ஜிபி ரேம் ஆக விரிவாக்கம் செய்யலாம்
சாம்சங் கேலக்ஸி ஏ52 எஸ் 5ஜி புதுப்பிப்பு குறித்து பார்க்கையில், கேலக்ஸி ஏ52 எஸ் 5ஜி இந்தியாவில் ஓடிஏ அப்டேட்டை பெற்றிருக்கிறது. புதுப்பிப்பு ஃபார்ம்வேர் பதிப்பு A528BXXU1AUH9 உடன் வருகிறது. இது ரேம் ஆனது 4 ஜிபி ஆக இருக்கும் நிலையில் இது 8 ஜிபி ரேம் ஆக விரிவாக்கம் செய்யப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் பாதுகாப்பு இணைப்பு மற்றும் கேமரா மேம்பாடுகளை ஒருங்கிணைக்கிறது.
மென்பொருள் புதுப்பிப்பு
சாம்சங் கேலக்ஸி ஏ52 எஸ் சாதனம் பயனர்களாக நீங்கள் இருந்தால் மென்பொருள் புதுப்பிப்புக்கான அறிவிப்பை தற்போது பெறுவீர்கள். இதற்கான இணைப்பு இன்னும் பெறாத பயனர்களுக்கு சில வழிமுறைகள் உள்ளன. தங்கள் சாதனத்தில் செட்டிங்க்ஸ் தேர்வுக்குள் சென்று மென்பொருள் புதுப்பிப்பு என்பதை கிளிக் செய்ய வேண்டும் பின் பதிவிறக்கம் மற்றும் நிறுவதல் ஆகியவற்றை தேர்ந்தெடுக்க வேண்டும். புதுப்பிப்பு தொடங்குவதற்கு முன் தங்களது சாதனம் நிலையான வைஃபை நெட்வொர்க் உடன் 50% சார்ஜ் இணைப்பை பெற்றிருக்க வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக