Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 14 செப்டம்பர், 2021

எந்த ஆவணமும் கொடுக்காமல், இலவசமாக பான் அட்டை பெறலாம், வழிமுறை இதோ


PAN Card: எந்த ஆவணமும் கொடுக்காமல், இலவசமாக பான் அட்டை பெறலாம், வழிமுறை இதோ

PAN அட்டை 10 இலக்க ஆல்ஃபாநியூமெரிக் PAN எண்ணுடன் வரும் மிக முக்கியமான ஆவணம் ஆகும். இது பெரிய அளவிலான பரிவர்த்தனைகள் மற்றும் அன்றாட வாழ்வில் மிகவும் தேவைப்படும் பல முக்கிய பணிகளை மேற்கொள்ள பயன்படுகிறது.

பான் அட்டை ஒரு முக்கியமான ஆவணமாகும். இப்போது பயனர்கள் இலவசமாக பான் அட்டையை பெற முடியும். ஆனால், இது ஒரு முக்கிய ஆவணம் என்பதால், ஆதார் அட்டை இருந்தால் மட்டுமே கட்டணமின்றி பான் கார்டைப் பெற முடியும் என்பதை மனதில் கொள்ள வேண்டும். உடனடி PAN வெளியீடு (instant PAN issuance) ஆதார் அடிப்படையிலான eKYC பயன்பாட்டை உள்ளடக்கியது.

ஆதார் eKYC இல்லாமல் இலவச மற்றும் உடனடி PAN க்கு எப்படி விண்ணப்பிப்பது என்பதை இங்கே காணலாம்:

- புதிய வருமான வரி இணையதளத்திற்கு செல்லவும். 'Instant PAN'-க்கு செல்லவும். 
- இந்த வசதி இ-பான்-ஐ ரியல் டைம் அடிப்படையில் வழங்குகிறது. இது PDF வடிவத்தில் வருகிறது.
- பின்னர் 'Get new E-PAN'-ஐக் கிளிக் செய்யவும்
- அதன்பிறகு உங்கள் ஆதார் (Aadhaar) எண்ணை உள்ளிட்டு, 'நான் அதை உறுதிப்படுத்துகிறேன்' என்ற செக் பாக்ஸை டிக் செய்யவும். 
- பின்னர் வருமான வரித்துறை சில விஷயங்களில் உங்கள் பதில்களைக் கேட்கும். அவை பின்வருமாறு:

1. எனக்கு இதற்கு முன்னர் PAN அளிக்கப்பட்டதில்லை.

2. எனது செயலில் உள்ள மொபைல் எண் ஆதார் உடன் இணைக்கப்பட்டுள்ளது.

3. எனது பிறப்பு விவரங்கள் முழுவதும் ஆதார்-இல் உள்ளன. 

4. PAN விண்ணப்ப தேதியின்படி நான் மைனர் அல்ல.

இவற்றுக்கான உறுதிப்பாட்டை நீங்கள் அளித்த பிறகு, பதிவு செய்யப்பட்ட உங்கள் மொபைல் எண்ணுக்கு OTP அனுப்பப்படும். அதை உள்ளிட்டவுடன், 15 இலக்க ஒப்புதல் எண் (acknowledgement number) உருவாக்கப்படும். 

பான் நகல் உருவாக்கப்பட்ட பிறகு ஆதார் இணைக்கப்பட்ட மின்னஞ்சல் ஐடிக்கு அது அனுப்பப்படும்.

உடனடி PAN விண்ணப்பத்தின் நிலையை எவ்வாறு சரிபார்ப்பது: 

உங்கள் பான் கோரிக்கையின் நிலையை கண்காணிக்க ஒப்புகை எண்ணைப் (acknowledgment number ) பயன்படுத்த வேண்டும். 'Instant PAN through Aadhaar' என்ற இணைப்பை கிளிக் செய்து, பின்னர் 'Check Status of PAN' -ஐ கிளிக் செய்யவும். 

அதன்பிறகு குறிப்பிடப்பட்ட இடத்தில் ஆதார் எண்ணை சமர்ப்பித்து, ஆதார் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு அனுப்பிய OTP ஐ சமர்ப்பிக்கவும். கடைசியாக, PAN விண்ணப்பத்தின் நிலையை சரிபார்க்கவும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக