Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 14 செப்டம்பர், 2021

பொறுப்புணர்ச்சியுடன் நடந்து கொண்ட நபர்... இறுதியில் நடந்தது? - ரிலாக்ஸ் ப்ளீஸ்...!!

---------------------------------------
கலக்கல் காமெடிகள்...!!
---------------------------------------

ராமு : கோழியினாலே முட்டை வந்ததா அல்லது முட்டையினாலே கோழி வந்ததா?
சோமு : கோழியினால்தான் முட்டை வந்தது
ராமு : எப்படி?
சோமு : ஒருமுறை ஹோட்டலுக்குப் போய் கோழி பிரியாணி ஆர்டர் பண்ணினேன். கூடவே முட்டையும் வந்தது. இன்னொரு நாள் போய் முட்டை பிரியாணி ஆர்டர் பண்ணினேன். ஆனால் அதோடு கோழி வரவில்லை.
ராமு : 😂😂
---------------------------------------
தங்கமணி : 'ஒன்றே குலம் ஒருவனே தேவன்" என்ற கொள்கையோட ஒரு கட்சி ஆரம்பிச்சீங்களே இப்போ எப்படி இருக்கு?
ரங்கமணி : அதில் ஒரே தலைவர் ஒரே உறுப்பினர்னு ஆயிடுச்சு.
தங்கமணி : 😆😆
---------------------------------------
சிந்தனை வரிகள்...!!
---------------------------------------
🔥 தனக்கு கிடைக்கும் ஊதியத்தின் மதிப்பை விட, தன்னுடைய உழைப்பின் மதிப்பை உயர்த்திக் காட்டும் மனிதன் தான் சமூகத்தில் முன்னேற முடியும்.

🔥 உங்களின் உழைப்பை 80 சதவிகிதம் திட்டமிடவும், 20 சதவிகிதம் திட்டமிட்டப்படி செயல்படுத்தவும் தொடங்கினால் நீங்கள் நிச்சயம் வெற்றியாளர்தான்.

🔥 வெற்றியை அறுவடை செய்ய... உழைப்பை விதைக்க தயாராய் இருக்க வேண்டும்.

🔥 உங்களின் எல்லாப் பிரச்சனைகளுக்கும் கடின உழைப்பு ஒன்று மட்டுமே தீர்வாக அமையும்.
---------------------------------------
பொறுப்புணர்ச்சி...!!
---------------------------------------
நேற்று நண்பர்களுடன் நடந்த 🎉பார்ட்டி முடிந்தபின் எனக்கு 🚗கார் ஓட்டத் தெரிந்திருந்தும், 🍹குடித்திருந்த காரணத்தினால் நானே கார் ஓட்டாமல் 🚕ஓலா புக் பண்ணி சென்றேன்.

என்னுடைய பொறுப்புணர்ச்சியை😇 நினைத்து எனக்கே 😇பெருமையாக இருக்கிறது என எல்லா நண்பர்களுக்கும் Message அனுப்பினேன்.

👬உடனே ஒரு நண்பனிடமிருந்து வந்த பதில்...

நேற்று பார்ட்டி நடந்ததே உன் வீட்டில் தானடா, ஓலா புக் பண்ணி எங்கடா போன?😳😵

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக