சமீபத்தில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், இன்ஸ்டாகிராம் பயன்படுத்தும் இளம் பெண்களின் மனநிலையை இந்த ஆப்ஸ் இன்னும் கூடுதலாக மோசமாக்குவதாக கண்டறியப்பட்டுள்ளது. இதில் உள்ள சில பெண்களின் மனநிலையில் தற்கொலைக்கான எண்ணங்களை இந்த ஆப்ஸ் ஏற்படுத்தியுள்ளதாக திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஆய்வில் வெளியான தகவலின் முழு விபரத்தை இந்த பதிவின் மூலம் பார்க்கலாம்.
பள்ளி மாணவர்கள் கூட பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்அப் பயன்படுத்துகிறார்களா?
சமூக ஊடங்களில் போக்கு இன்றைய இளம் தலைமுறையினர் இடையே வெகுவாக பரவியுள்ளது. இந்தியாவில் பள்ளி மாணவர்கள் கூட பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்அப் போன்ற முக்கிய சமூக வலைதள பக்கங்களில் அவர்களுக்கென்று தனியாக அக்கௌன்ட் வைத்துள்ளனர். இதில் இன்ஸ்டாகிராம் பயன்படுத்தும் இளம் பெண்களின் நிலையை மோசமாக்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் சிலருக்கு தற்கொலை எண்ணம் ஏற்படுத்துவதாகவும் கூறப்பட்டுள்ளது
பேஸ்புக் நடத்திய ஆய்வு
பேஸ்புக் நடத்திய ஆய்வின் மூலம் இந்த தகவல் வெளியாகியுள்ளது. இளைஞர்கள் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ் ஆப் போன்ற சமூக ஊடங்களில் அதிகளவு நேரம் செலவிடுவதாகவும் கூறப்படுகிறது. இதில் சிலர் அடிமைத்தனத்தின் உச்சத்திற்கே சென்றுவிட்டனர் என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டுள்ளது. இது உலகம் முழுக்க நிகழும் நிகழும் உண்மை என்பதனால் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்க யாரும் முன்வரவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
அளவுக்கு மீறினால் அமிர்ந்தமும் நஞ்சு
அளவுக்கு மீறினால் அமிர்ந்தமும் நஞ்சு என்ற வாக்கியத்திற்கு ஏற்ப சமூக வலைதள பயனர்கள் ஒரு கட்டுப்பாட்டுடன் செயல்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். எப்போதும் அளவுடன் சமூக ஊடகத்தை பயன்படுத்துவது யாருக்கும் சிக்கல் அளிக்காது என்று மனநல மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். சமூக ஊடக பயன்பாட்டிற்கு மக்கள் அடிமையாகும் போது தான் ஆபத்தான சூழ்நிலை உருவாகிறது என்றும் அவர்கள் குறிப்பிட்டு கூறியுள்ளனர்.
மன ரீதியாக பல்வேறு கோளாறுகளை சந்திக்கும் இளம் பெண்கள்
இப்படி எல்லையை மீறி ஒரு வரைமுறை இல்லாமல் முழு நேரம் சமூக வலைத்தளத்தை பயன்படுத்தும் பயனர்கள் அடிமையாவது மட்டுமின்றி, மன ரீதியாக பல்வேறு கோளாறுகளுக்கு ஆளாகிறார்கள் என்று கண்டுபிடிக்கப்பட்டுளள்து. இதனால் இதை கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கைவிடுத்துள்ளனர். இதன் அடிப்படையில், நடத்தப்பட்ட பேஸ்புக் ஆய்வில் தான் இப்போது பல பகீர் உண்மைகள் வெளியாகியுள்ளது.
இளம் பெண்கள் தங்கள் உடலைப் பற்றி மோசமாக உணர்ந்தபோது?
இதனால் பேஸ்புக் நிறுவனம் தானாக முன்வந்து தனக்கு சொந்தமான இன்ஸ்டாகிராம் பயனர்களின் மனநிலை குறித்து ஆய்வு நடத்த முடிவு செய்தது. இந்த ஆய்வில் இன்ஸ்டாகிராம் பயனர்களின் இளம் வயது கொண்ட பயனர்கள் மனநலம் பாதிக்கப்படுகிறது என்பது உறுதிப்படுத்தப்பட்டது. சுமார் 32 சதவிகிததிற்கும் அதிகப்படியான இளம் பெண்கள் தங்கள் உடலைப் பற்றி மோசமாக உணர்ந்தபோது, இன்ஸ்டாகிராம் அவர்களை இன்னும் அதிக மோசமாக உணர வைத்துள்ளது என்பது கண்டறியப்பட்டுள்ளது.
மனநிலை மாறி தற்கொலைக்கு முயற்சியா?
அதிலும் குறிப்பாக, அமெரிக்கா மற்றும் பிரிட்டன் போன்ற இடங்களில் டீன் ஏஜ் வயது பெண்களுக்கு மனநிலை மாறியதாகவும், இன்ஸ்டாகிராம் பயன்படுத்திய காரணத்தினால் சில நேரங்களில் மனநிலை மாறி தற்கொலைக்கு முயன்றதாகவும் கூறியுள்ளனர் என்று ஆய்வின் முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பேஸ்புக்கை காட்டிலும் டீன் ஏஜ் வயதினர் இன்ஸ்டாகிராமை அதிக பயன்படுத்துவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் 40 சதவீதத்திற்கும் மேலான பயனர்கள் வெறும் 22 வயதுக்கும் குறைவானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக