திங்கள், 11 அக்டோபர், 2021

சனிபகவான் நேர்பாதையில் திரும்பும் போது இந்த 4 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கப் போகுதாம்..

People Of These Zodiac Signs Are Destined To Rise Before Saturn’s Path

சனி பகவான் ஒரு கொடுமையானவராக கருதப்படுகிறார். ஆனால் உண்மையில் சனி பகவான் அனைவருக்குமே நியாயமான நீதியை வழங்கக்கூடியவர். கெட்டது செய்பவர்களுக்கு திருந்துவதற்கான வாய்ப்பை அளிப்பவர் மற்றும் நல்லது செய்வபவர்களுக்கு மகிழ்ச்சியை வாரி வழங்குவார். இப்படி தான் சனி பகவான் அனைவருக்கும் நீதியை வழங்குகிறார். சனி பகவான் ஒரு நல்ல நிலையில் இருக்கும் போது, அது ஒருவரின் அதிர்ஷ்டத்தை அதிகரிக்கும்.

சனி பகவானால் ஆயையும் அரசனாக்க முடியும். அப்படிப்பட்ட சனி பகவான் அக்டோபர் 11 ஆம் தேதி, பிற்போக்கு நிலையில் இருந்து நேர்பாதைக்கு திரும்புகிறார். இப்படி சனி பகவான் தனது நேர் பாதையில் திரும்பும் போது ஒருசில ராசிக்காரர்களுக்கு சிறப்பான பலனை வழங்குவார். இக்கட்டுரையில் சனி பகவான் நேர்பாதையில் திரும்பும் போது எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தை வழங்கப் போகிறார் என்பதைக் காண்போம்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களின் கௌரவம் மற்றும் நிலையில் உயர்வு இருக்கும். அனைத்து வேலைகளிலும் வெற்றி பெறுவீர்கள். உங்களின் பணிகள் பாராட்டப்படும். வேலை மற்றும் தொழிலில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்கள் உள்ளன. லாபம் அதிகம் கிடைக்கும். மொத்தத்தில், ரிஷப ராசிக்காரர்களுக்கு இது ஒரு வசந்த காலமாக இருக்கும்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்கள் எந்த வேலையிலும் வெற்றி காண்பார்கள். வியாபாரம் மற்றும் வேலைக்கான மிகச்சிறந்த காலம். உங்களின் வேலைகள் பாராட்டப்படும். பணம் மற்றும் லாபம் இருக்கும். இதனால் உங்களின் நிதி நிலைமை வலுவாக இருக்கும். திருமண வாழ்க்கை சந்தோஷம் நிறைந்திருக்கும். நண்பர்களின் ஆதரவைப் பெறுவீர்கள்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களின் கெரளவம் மற்றும் நிலை மேம்படும். குடும்ப வாழ்க்கையில் உறவுகள் மிகவும் இனிமையாக இருக்கும். உங்கள் துறையில் நீங்கள் வெற்றி அடைவீர்கள். உங்களின் வேலைகள் சிறப்பான பாராட்டைப் பெறும். நிதி பிரச்சனைகளில் இருந்து விடுபடுவீர்கள். உங்களின் நிதி நிலை வலுவாக இருக்கும்.

மகரம்

மகர ராசிக்காரர்களின் மன அழுத்தம் குறையும். தடைப்பட்ட வேலைகள் முடிக்கப்படும். குடும்ப உறுப்பினர்களை சந்தோஷமாக வைத்துக் கொள்ள உங்களால் முடிந்த அனைத்தையும் செய்வீர்கள். இதனால் குடும்ப உறுப்பினர்களுடனான உறவு நன்றாக இருக்கும். உங்களின் வாழ்க்கை முறையில் சில நல்ல மாற்றங்களைக் காண்பீர்கள். இக்காலத்தில் நீங்கள் எதையும் பொறுமையாகவும் சிறப்பாகவும் மதிப்பிடுவதால், உங்களின் முடிவெடுக்கும் திறன் நன்றாக இருக்கும். மொத்தத்தில் எதிலும் புத்திசாலித்தனமாக செயல்பட்டு, நல்ல முடிவைப் பெறுவீர்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Follow and Join with US

தினமும் எங்கள் வாசகர்கள் மற்றும் நண்பர்கள் பல்வேறு செய்திகளை பெறுகின்றனர் நீங்களும் இணைத்து எங்களை வழி நடத்துங்கள்