Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 5 அக்டோபர், 2021

அருள்மிகு லட்சுமி நரசிம்மர் திருக்கோயில், நாமக்கல்.

அருள்மிகு லட்சுமி நரசிம்மர் திருக்கோயில், நாமக்கல் – www.patrikai.com

அமைவிடம் :

தமிழ்நாட்டில் நாமக்கல் நகரில் 200 அடி உயரமுள்ள குன்றின்மீது அமைந்துள்ள குடைவரைக் கோயிலாகும்.

மாவட்டம் :

அருள்மிகு லட்சுமி நரசிம்மர் திருக்கோயில், நாமக்கல்.

எப்படி செல்வது?

நாமக்கல் நகரின் மையத்தில் அமைந்துள்ளது இத்திருத்தலம். நாமக்கல் நகருக்கு அனைத்து முக்கிய நகரங்களிலிருந்தும் பேருந்து வசதிகள் உள்ளது.

கோயில் சிறப்பு :

இத்தலத்தில் உள்ள நரசிம்மர் சிற்பம் ஒரு குடவரை சிற்பம். கூரிய நகங்களுடன் இருக்கும் இவர், இரணியனை சம்ஹாரம் செய்ததன் அடையாளமாக உள்ளங்கையில் ரத்தக் கறையுடன் காட்சி தருவது கலியுக அதிசயம்.

அருகில் சனகர், சனாதனர், சூரியன், சந்திரன் மற்றும் பிரம்மா உள்ளனர். நரசிம்மர் குடவரை மூர்த்தி என்பதால், திருமஞ்சனம் கிடையாது. உற்சவருக்கே திருமஞ்சனம் நடக்கிறது.

இக்கோயில் மலையின் மேற்கு புறம் குடவரையில் அமைந்துள்ளது. இங்கு வலது காலை தரையில் ஊன்றியும், இடது காலை மடி மீதும் வைத்தும் ஸ்ரீநரசிம்மர் வீற்றிருக்கிறார். 

அருகில் பூஜக முனிவர்களும், சூர்ய சந்திரர்களும் கவரி வீச, வலது புறம் இடது புறம் பிரம்மாவும் பகவான் இரணியனை அழித்த உக்கிரம் தீர வழிபடுகிறார்கள். 

ஸ்ரீ மகாலட்சுமியின் தவத்தால் மகிழ்ந்த நரசிம்மர் இங்கு ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் என அழைக்கப்படுகிறார். பிரம்மா, விஷ்ணு, சிவன், ஆகியோர் ஒரே இடத்தில் அருள் பாலிப்பதால் மும்மூர்த்தி ஸ்தலம் என அழைக்கப்படுகிறது. 

இங்கு இரணியனை வதைத்த பின் ரத்தக்கரையுடன் கூரிய நகங்களுடன் பகவான் காட்சி தருகிறார். உலகில் சிவன் சில இடங்களில் மட்டுமே தலையில் பிறைச்சந்திரனுடன் காட்சி தருகிறார். அவற்றில் ஒன்று இத்திருத்தலம்.

நாமக்கல் மலையும், அதன்மீது உள்ள கோட்டையும் மகாவிஷ்ணுவின் கோட்டையாக உள்ளது. மலையின் கீழ்ப்புறம் ரங்கநாதராகவும், மலை மேல் கோட்டையின் உள்ளே வரதராகவும், மலையின் மேலே நரசிம்மராகவும் மூன்று அவதாரங்களில் எழுந்தருளியுள்ளார். இப்படி மூன்று அவதாரம் பெற்றிருப்பினும், நரசிம்மரே இங்கு பிரதானம். 

கோயில் திருவிழா : 

நரசிம்ம ஜெயந்தி, அனுமன் ஜெயந்தி ஆகிய விழாக்கள் வெகு விமர்சையாக கொண்டாப்படுகின்றன.

பிரார்த்தனை :

பக்தர்கள் தங்களது பிரார்த்தனைகள் நிறைவேற இங்குள்ள நரசிம்மரை வழிபடுகின்றனர்.

நேர்த்திக்கடன் : 

நரசிம்மருக்கு அபிஷேகம் செய்து, வெற்றிலை மாலை சாற்றி, புதுவஸ்திரம் அணிவித்து நேர்த்திகடன் செலுத்துகின்றனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக