Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 24 நவம்பர், 2021

பூ பூத்து.. காய் காய்க்காத வன்னி மரம் அருள்மிகு மகுடேஸ்வரர் திருக்கோயில் ஈரோடு

அருள்மிகு மகுடேஸ்வரர் திருக்கோயில்! – Vanakkam India
மூலவர் : மகுடேஸ்வரர், மலை கொழுந்தீஸ்வரர்

ஊர் : கொடுமுடி

மாவட்டம் : ஈரோடு

மாநிலம் : தமிழ்நாடு

இந்த கோயில் எங்கு உள்ளது?

அருள்மிகு மகுடேஸ்வரர் திருக்கோயில் ஈரோடு மாவட்டம் திருப்பாண்டிக் கொடுமுடியில் அமைந்துள்ளது. 

இந்த கோயிலுக்கு எப்படி செல்வது?

இத்தலம் ஈரோடு மாவட்டத்தில் இருந்து சுமார் 40 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இத்தலத்திற்கு செல்ல பேருந்து வசதிகள் உள்ளன.

இந்த கோயிலின் சிறப்புகள் என்ன?

இங்கே மூன்று முகம் கொண்ட பிரம்மனை தரிசிக்கலாம். வன்னி மரத்தடியில் இவர் அருள்பாலிக்கிறார்.

இத்தலத்தில் இறைவன் சுயம்புமூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

ஆஞ்சநேயர் கோரமான பல்லுடன் இங்கே காட்சி தருகிறார்.

சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 210 வது தேவாரத்தலம் ஆகும்.

தேவாரப்பாடல் பெற்ற கொங்கு நாட்டுத்தலங்களில் இது 6வது தலம்.

வேறென்ன சிறப்பு?

இத்தலத்தில் உள்ள வன்னிமரத்தின் வயதை கணக்கிட முடியவில்லை.

மிகவும் பழமையான இந்தமரத்தில் பூ பூக்கும். ஆனால் காய் காய்க்காது. ஒரு பக்கம் முள் இருக்கும். மற்றொரு பக்கம் முள் இல்லை. 

இந்த மரத்தின் இலையை தண்ணீரில் போட்டால் எவ்வளவு நாளானாலும் தண்ணீர் கெடுவதில்லை.

பழநி பங்குனி உத்திர விழாவிற்கு தீர்த்தக்காவடி கொண்டு செல்லும்போது காவிரி தீர்த்தத்தில் இந்த இலைகளை போட்டுதான் பக்தர்கள் பாதயாத்திரையாக கொண்டு செல்கிறார்கள்.

காவிரி ஆற்றின் கரைக்கருகில் இக்கோயில் உள்ளது. வடக்கிலிருந்து தெற்கு நோக்கி ஓடிவரும் காவிரி ஆறானது இவ்விடத்தில் கிழக்கு நோக்கி திசைமாறிச் செல்கிறது.

என்னென்ன திருவிழாக்கள் கொண்டாடப்படுகிறது?

சித்திரை திருவிழா 11 நாள் கொண்டாடப்படுகிறது.

ஆடிப்பெருக்கன்று ஆயிரக்கணக்கான மக்கள் கூடுவார்கள். 

பௌர்ணமி, அமாவாசை, பிரதோஷ நாட்களிலும் விசேஷ பூஜை உண்டு.

இத்தலத்தில் என்னென்ன பிரார்த்தனை செலுத்தப்படுகிறது?

ராகு கேது தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இத்தலத்தில் பரிகாரங்கள் செய்து திருமணத்தடை நீங்குதல், குழந்தைப்பேறு ஆகியவை அடையப்பெறுகிறார்கள்.

ஒருவருக்கு எத்தனை வயதோ, அத்தனை குடம் தண்ணீர் எடுத்து விநாயகருக்கு ஊற்ற வேண்டும்.

நாகதோஷம் நீங்க வன்னி மரத்தடியில் கல்லில் செய்த நாகரை பிரதிஷ்டை செய்ய வேண்டும்.

நவக்கிரக பூஜைசெய்து, வாழை மரத்திற்கு தாலிகட்டும் பழக்கமும் இங்கு உள்ளது.

அறுபதாம் கல்யாணம், ஆயுள்ஹோமம் ஆகியவை நடத்த இத்தலம் விசேஷமானது.

ஆதிசேஷனால் உருவான கோயில் என்பதால், இங்கு நாகர்வழிபாடு விசேஷம்.

இத்தலத்தில் என்னென்ன நேர்த்திக்கடன்கள் செலுத்தப்படுகிறது?

வேப்பமரமும், அரசமரமும் இணைந்துள்ள மரத்தடியில் உள்ள விநாயகருக்கு காவிரியிலிருந்து தண்ணீர் எடுத்துவந்து ஊற்றினால் திருமண வரமும், குழந்தைவரமும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக