Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 24 நவம்பர், 2021

மீன்களுக்கு 🐳 தாகம் எடுக்குமா... ரொம்ப நாள் டவுட்? - ரிலாக்ஸ் ப்ளீஸ்...!!

-------------------------------------------
இன்றைய ஜோக்ஸ்...!!
-------------------------------------------
கமல் : உன் மனைவி புத்தகம் வாங்கினதுக்கு நீ ஏன் பயந்து சாகுற? 
விமல் : புத்தகத்தோட தலைப்பு என்ன தெரியுமா? ரத்தம் வராமல் அடிப்பது எப்படி? 
கமல் : 😀😀
-------------------------------------------
ராமு : ஆக்சிடண்ட் ஆகி ஹாஸ்பிட்டலில் இருந்த யானையிடம் எறும்பு காதில் ஏதோ சொல்ல.... அந்த யானை செத்தே போய் விட்டது...!
சோமு : அப்படி என்ன எறும்பு சொன்னது?
ராமு : நான் உனக்கு இரத்தம் தரவா?
சோமு : 😅😅
------------------------------------------- 
ரொம்ப நாள் டவுட்?
-------------------------------------------
நீருக்கு அடியில் அழ 😰 முடியுமா?

மீன்களுக்கு 🐳 தாகம் எடுக்குமா?

பறவைகள் 🐦 ஏன் தூங்கும்போது மரத்திலிருந்து விழுவதில்லை?

பணம் 💰 மரத்திலிருந்து வருவதில்லை, பின் ஏன் வங்கிகள் எங்களுக்கு கிளைகள் 🏧 உள்ளன என்கின்றன? 

பசை ஏன் பாட்டிலுக்குள் 🍷 ஒட்டி கொள்வதில்லை?

வட்ட வடிவ பீட்சா🍕... ஏன் சதுர வடிவ பெட்டியில் வருகிறது?

-------------------------------------------
டங்கு ஸ்லிப் ஆகுதே..!!
-------------------------------------------
😜 கேடு கெட்ட உறவோடு கெட்ட மட்ட கருவாடு, கொண்டு வரும் வறுவோடு எடுக்க வைக்கும் திருவோடு.

😜 கட முட மாட்டு வண்டி தட தட வென உருண்டு போயி மட மட வென கழுன்றதென்றால் பட பட வென நெஞ்சம் பதறாதோ.
------------------------------------------- 
ஊர்களின் சிறப்புகள்...!!
-------------------------------------------
☀ தூத்துக்குடி - மக்ரூன், உப்பு

☀ கோவில்பட்டி - கடலை மிட்டாய்

☀ திருநெல்வேலி - அல்வா

☀ பரங்கிப்பேட்டை - அல்வா

☀ ஸ்ரீவில்லிப்புத்தூர் - பால்கோவா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக