Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 23 நவம்பர், 2021

பணக்காரனாக ஆவதற்கு... இதை செய்தாலே போதும்... படிக்க... சிந்திக்க... - ரிலாக்ஸ் ப்ளீஸ்...!!

--------------------------------------
சிரிக்கலாம் வாங்க...!!
--------------------------------------
கமல் : ஒருத்தரைச் சிரிக்க வைக்க முயற்சி செஞ்சேன்.. கொலை முயற்சின்னு உள்ள தள்ளிட்டாங்க..
விமல் : ஏன்?
கமல் : பஸ்ல தொங்கிட்டு வந்தவரை கிச்சுக் கிச்சு மூட்டக்கூடாதாம்.
விமல் : 😂😂 
--------------------------------------
ராமு : வீடு கட்ட லோன் வாங்கின பணத்துல இரண்டாம் கல்யாணம் பண்ணிக்கிட்டியாமே நிஜமா?
சோமு : இப்போதைக்கு சின்ன வீடு போதும்னு ஜோசியர் சொன்னார்.
ராமு : 😜😜
--------------------------------------
புதிர் கணக்கு...!!
--------------------------------------
ஒருவர் ஒரு கடையில் 200 ரூபாய் மதிப்புள்ள பொருளை வாங்கிக்கொண்டு 1000 ரூபாய் நோட்டை தருகிறார். சில்லறை இல்லாத காரணத்தினால் கடைக்காரர் பக்கத்து கடைக்கு சென்று 1000 ரூபாய் நோட்டை கொடுத்து சில்லறை பெற்றுக்கொண்டு வந்து 800 ரூபாயை பொருள் வாங்கியவரிடம் கொடுத்து விட்டார்.

சிறிது நேரம் கழித்து பக்கத்துக் கடைக்காரர் அந்த 1000 ரூபாய் கள்ளநோட்டு என்று சொல்லி அதை கொடுத்துவிட்டு, தான் கொடுத்த 1000 ரூபாய்க்கான சில்லறையை வாங்கிச் செல்கிறார்.

மொத்தத்தில் கடைக்காரருக்கு எவ்வளவு நஷ்டம்?🤔
--------------------------------------
விடை :
--------------------------------------
1000 ரூபாய் நஷ்டம்.

கடைக்காரரின் 200 ரூபாய் மதிப்புள்ள பொருளும், 800 ரூபாயை சில்லறையாக கொடுத்த பணமும் சேர்த்தால் மொத்தம் 1000 ரூபாய் ஆகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக