
ஒரு போனின் விலை ஒரு கோடி ரூபாய் என்றால் கூட அந்தளவுக்கு தொழில்நுட்பம் புகுத்திய அம்சமாக இருக்கலாம். ஆனால் ஒரு மெசேஜ் ஒரு கோடி ரூபாய்க்கு ஏலம் போயுள்ளது என்றால் நம்ப முடிகின்றதா?
ஆனால் இது உண்மை தான். உலகில் முதல் முதலாக அனுப்பட்ட ஒரு மெசேஜ் தான் தற்போது ஒரு கோடி ரூபாய்க்கு ஏலம் போயுள்ளது.
அப்படி என்ன மெசேஜ் அது? எதற்காக இந்தளவுக்கு ஏலம் போயுள்ளது? இதனை யார் ஏலத்தில் யார் எடுத்துள்ளார்? ஏலத்தில் விட்டது யார்? வாருங்கள் பார்க்கலாம்.
இதன் முழு பெருமையும் வோடபோன் நிறுவனத்திற்கே எனலாம். தற்போதைய நவீன காலகட்டத்தில் இணையம் மூலமாக மேசேஜ்களை பரிமாறிக் கொள்கிறோம். மெயில், சாட்டிங், வீடியோ சாட்டிங், வாய்ஸ் சாட்டிங், இமேஜ் சாட்டிங் என பலவற்றையும் பயன்படுத்தி வருகின்றோம். ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு சாட்டிங் செய்து கொள்ளலாம்.
ஆனால் ஒரு காலகட்டத்தில் மெசேஜ்-லேயே பேசிய காலத்தினை பேசியதை யாருக்கும் மறந்திருக்க முடியாது. அதிலும் ஒரு நாளை 100 இலவச எஸ் எம் எஸ், அதற்கு மேற்பட்டு 1 மேசேஜ்-க்கு 1 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். இந்த மெசேஜ்ஜுக்காக தனியாக டாப் செய்ய வேண்டியிருக்கும். இப்படி இருந்த காலத்தினையும் மறக்க முடியாது.
முதன் முதலாக என்ன அனுப்பப்பட்டது?கடந்த 1992ம் ஆண்டில் . டிசம்பர் 3 அன்று, நீல் பாப்வொர்த் என்பவரால் அனுப்பப்பட்டது. இவர் முதன் முதலாக அனுப்பிய செய்தி தான் மெர்ரி கிறிஸ்மஸ் (Merry Christmas) என்று அனுப்பியுள்ளார். இவர் தனது தன்னுடன் பணிபுரிந்த சக ஊழியரான ரிச்சர்ட் ஜார்விஸூக்கு தான் இந்த செய்தியினை அனுப்பியுள்ளார்.
நீல் பாப்வொர்த் தான் அனுப்பிய 14 எழுத்துகள் கொண்ட Merry Christmas என்ற செய்தியை, அவரின் 2 கிலோ எடையுள்ள ஆர்பிட்டல் மொபைலில் ((4 lb) "Orbitel) அனுப்பியுள்ளார்.
நீல் அனுப்பிய இந்த முதல் செய்தியின் நகல் தான், தற்போது ஏலம் விடப்பட்டுள்ளது. இந்த பிரான்ஸின் தலை நகரில் ஏலம் பாரிஸில் நடைபெற்றது. இந்த செய்தி டாலரில் CNNன் செய்தியின் படி, 1,49,729 டாலர்களுக்கு ஏலம் விடப்பட்டுள்ளது. இதே பவுண்டில் 1,32,680 ஆகும்.
வோடபோன் நிறுவனம் ஏலத்தில் கிடைத்த இந்த தொகையினை UNHCR-UN Refugee Agencyக்கு வழங்கப்படும் என தெரிவித்துள்ளது. ரூபாய் மதிப்பில் இந்த ஒற்றை செய்தியின் மதிப்பு 1 கோடி ரூபாய்க்கு மேல்.
உண்மையில் என்னதான் தொழில் நுட்பம் என்பது வளர்ந்திருந்தாலும் ஓல்டு இஸ் கோல்டு என்பது போல, பழைக்கும் ஒரு மதிப்பு உண்டு என்பதை இதன் மூலம் உணர முடிகின்றது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக