ஈரோடு மாவட்டத்தில் உள்ள பாரியூர் என்னும் ஊரில் அருள்மிகு கொண்டத்து காளியம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது.
இந்த கோயிலுக்கு எப்படி செல்வது?
ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையத்தில் இருந்து சுமார் 3 கி.மீ தொலைவில் பாரியூர் உள்ளது. பாரியூர் பேருந்து நிலையத்திலிருந்து நடந்து செல்லும் தொலைவில் இத்திருக்கோயில் அமைந்துள்ளது.
இந்த கோயிலின் சிறப்புகள் என்ன?
அருள்மிகு கொண்டத்து காளியம்மன் திருக்கோயிலில் மூலவரான அம்மன் ருத்ரகோலத்தில் காட்சியளிக்கிறார்.
இத்தலத்தில் அம்பாளின் கீழ் உள்ள பீடம் 7 பீடமாக அமைந்துள்ளது.
இங்கு மூலவரான அம்மனின் தலையில் நெருப்பிலான கிரீடமும், காலடியில் ஒரு அரக்கனை மிதித்துக்கொண்டிருப்பது போலவும் அருள்பாளிக்கிறார்.
இத்தலத்தில் அம்மனை சிறப்பு நாட்களில் சந்தனம் அல்லது மஞ்சள் பூசி அலங்கரித்து ஆராதனை செய்கின்றனர்.
அம்பாளிடம் தங்கள் பிரச்சனைகளுக்கு உத்தரவு கேட்பவர்கள் வலது கை வாக்கு கிடைத்தால் காரியத்தை தொடங்குகின்றனர். இடது கை வாக்கு கிடைத்தால் நிறுத்தி விடுகின்றனர். ஆனால், வியாதிகள் குணமாவதற்கு இடது கை உத்தரவே பெரிதும் வேண்டப்படுகிறது.
வேறென்ன சிறப்பு?
இத்தலத்தில் அக்னிகுண்டம் இறங்கல் என்பது தனி சிறப்பு. இது 40 அடி நீளம் கொண்டு காணப்படுகின்றது.
அருள்மிகு கொண்டத்து காளியம்மன் திருக்கோயில் அம்பாள் உடன் விநாயகர், மகா முனியப்பன், கன்னிமார், பொன்காளியம்மன் மற்றும் இதர தெய்வங்களும் காட்சியளிக்கின்றனர்.
இக்கோயிலின் பிரதான கோபுரம் தெற்கு மூலையில் அமைந்துள்ளது. கருவறையைச் சுற்றி கருப்பு பளிங்குக்கற்களால் ஆன வெளி மண்டபம் அமைந்துள்ளது.
என்னென்ன திருவிழாக்கள் கொண்டாடப்படுகின்றது?
நவராத்திரி, கார்த்திகை தீபம், பொங்கல், தீபாவளி, தமிழ், ஆங்கில வருடப்பிறப்பு போன்ற நாட்களிலும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும்.
இத்தலத்தில் என்னென்ன பிரார்த்தனைகள் செய்யப்படுகிறது?
திருமண பாக்கியம், குழந்தை வரம், விவசாய செழிப்பு போன்றவற்றிற்கு இத்தலத்திலுள்ள கொண்டத்து காளியம்மனை பிரார்த்தனை செய்கின்றனர்.
பில்லி சூனியம், செய்வினை, ஏவல், பகை ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அந்த துன்பங்களிலிருந்து பாதுகாக்க இங்கு வழிபடலாம்.
இத்தலத்தில் என்னென்ன நேர்த்திக்கடன்கள் செலுத்தப்படுகிறது?
வேண்டுதல் நிறைவேறியவுடன் அக்னி குண்டம் இறங்குதல், அம்மனுக்கு புடவை சாற்றுதல், அம்மனுக்கு விளக்குப்போடுதல் போன்ற நேர்த்திக்கடன்களை செய்கின்றனர்.
அருள்தரும் ஆலயங்கள்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக