இந்த கோயில் எங்கு உள்ளது?
மதுரை மாவட்டத்தில் உள்ள பசுமலையில் அருள்மிகு விபூதி விநாயகர் திருக்கோயில் அமைந்துள்ளது.
இந்த கோயிலுக்கு எப்படி செல்வது?
மதுரையிலிருந்து சுமார் 7 கி.மீ தொலைவில் இத்திருக்கோவில் அமைந்துள்ளது. பசுமலையிலிருந்து மூலக்கரை செல்லும் வழியில் மெயின் ரோட்டில் இத்தலம் அமைந்துள்ளது. மதுரையிலிருந்து இத்தலத்திற்கு செல்ல பேருந்து வசதிகள் உள்ளன.
இந்த கோயிலின் சிறப்புகள் என்ன?
இத்தலத்தில் ராகு-கேதுவுடன், விநாயகப் பெருமான் எழுந்தருளியிருப்பது சிறப்பு.
மூலஸ்தானத்தில் ராகு-கேதுவுடன் விநாயகப்பெருமான் எழுந்தருளி அருள்பாலிக்கிறார்.
வேறென்ன சிறப்பு?
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலின் கிழக்கு முகம் எல்லைக் கோயிலாக இக்கோயில் திகழ்கிறது.
இந்த விநாயகருக்கு முதல் பூஜை செய்த பிறகுதான் மற்ற கோவில்களில் பிரதான தெய்வங்களுக்கு பூஜை நடக்கிறது.
என்னென்ன திருவிழாக்கள் கொண்டாடப்படுகின்றது?
பசுமலை பகுதியிலுள்ள கோவில்களில் முளைப்பாரி விழாவின்போது, கரக அலங்காரம் நடக்கிறது.
விநாயகர் சதுர்த்தி, சங்கடஹர சதுர்த்தி, பௌர்ணமி, பிரதோஷம் போன்ற நாட்களில் சிறப்பு பூஜைகள் செய்யப்படுகின்றது.
இத்தலத்தில் என்னென்ன பிரார்த்தனைகள் செய்யப்படுகிறது?
சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்க இங்கு பிரார்த்தனை செய்கிறார்கள்.
பக்தர்கள் தங்கள் கைகளாலேயே திருநீறு அபிஷேகம் செய்து விபூதி விநாயகரை வழிபடுவது சிறப்பு.
இத்தலத்தில் என்னென்ன நேர்த்திக்கடன்கள் செலுத்தப்படுகிறது?
விநாயகருக்கு அபிஷேகம் செய்து புது வஸ்திரம் சாற்றி, அருகம்புல் மாலை சாற்றி தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துகிறார்கள்.
மகம், உத்திரம், விசாகம், கேட்டை, பூராடம் போன்ற நட்சத்திர நாட்களில் விபூதி விநாயகருக்கு திருநீறால் அபிஷேகம் செய்ய, எண்ணிய எண்ணங்கள் விரைவில் நிறைவேறும் என்பது ஐதீகம்.
அருள்தரும் ஆலயங்கள்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக