கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெகாசஸ் விவகாரம் பூதாகரமாக வெடித்து ஓய்ந்த நிலையில் தற்போது மீண்டும் தலைத் தூக்க தொடங்கியிருக்கிறது. கடந்த ஆண்டு ஜூலை மாதம், பெகாசஸ் சாஃப்ட்வேர் மூலம் உலகம் முழுவதும் இருக்கும் மனித உரிமை ஆர்வலர்கள், செய்தியாளர்கள், தொழிலதிபர்கள், அரசியல் தலைவர்கள் என 50000 பேரின் தகவல்கள் திருடப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி சர்ச்சையை எழுப்பியது. குறிப்பாக இந்தியாவில் மட்டும் 40 செய்தியாளர்கள் உள்ளிட்ட 300 முக்கிய புள்ளிகளின் ஸ்மார்ட்போன்கள் தகவல்கள் கண்காணிக்கப்பட்டு திருடப்பட்டிருப்பதாக பல்வேறு செய்திகள் வெளியாகின.
தொடர்ந்து பெகாசஸ் தொடர்பாக விவகாரம் குறித்து எதிர்கட்சிகள் பல்வேறு போராட்டங்களை நடத்தி தங்களை கண்டனங்களை எழுப்பின. நாடாளுமன்ற இரு அவைகளும் இதன் காரணமாக முடங்கும் நிலை ஏற்பட்டது. அதே சமயத்தில் பெகாசஸ் விவகாரம் குறித்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இருக்கிறது. இந்த நிலையில் அமெரிக்காவின் நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் கடந்த 28 ஆம் தேதி செய்தி ஒன்று வெளியிட்டிருக்கிறது. அதில் 2017 ஆம் ஆண்டு இஸ்ரேலிடம் இருந்து இந்திய அரசு பெகாசஸ் உளவு மென்பொருளை வாங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா மட்டுமின்றி அமெரிக்கா, மெக்ஸிகோ, போலந்து, சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் போன்ற நாடுகளும் இஸ்ரேலிடம் இருந்து பெகாசஸ் உளவு மென்பொருளை வாங்கியதாக குறிப்பிடப்பட்டிருக்கிறது.
கடந்த 2017 ஆம் ஆண்டு ஜூலை மாதம் பிரதமர் மோடி இஸ்ரேல் நாட்டில் பயணம் மேற்கொண்டார். அங்கு அவருக்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த பயணத்தில் பெகாசஸ் உளவு மென்பொருள், ஏவுகணைகள் உள்ளிட்டவைகளை ரூ.15,000 கோடி செலவில் வாங்கியதாக கூறப்படுகிரது. இதையடுத்தே கடந்த 2019 ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஐ.நா சபையில் இஸ்ரேலுக்கு ஆதரவாக இந்தியா வாக்களித்தது என நியூயார்க் டைம்ஸ் செய்தி குறிப்பிட்டுள்ளது.
இஸ்ரேல் நாட்டின் என்எஸ்ஓ நிறுவனத்திடம் இருந்து இந்த உளவு மென்பொருள் வாங்கியதாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் குறித்து உச்சநீதிமன்றம் 3 நபர்களை சுதந்திரமான நிபுணர் குழுவை அமைத்து விசாரணை செய்து வருகிறது. இந்த நிலையில் பெகாசஸ் உளவுச் செயலியை வாங்கவில்லை என நாடாளுமன்றத்திலும், உச்சநீதிமன்றத்திலும் மோடி அரசு பொய் உரைத்து தேசத்துரோகக் குற்றம் இழைத்துள்ளது எனவும் இந்த விவகாரத்தில் மோடி பதவி விலக வேண்டும் எனவும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தி இருக்கிறார். மறுபுறம், நியூயார் டைம்ஸ்-ஐ நம்ப முடியுமா அந்த ஊடக நிறுவனத்துக்கு பணம் கொடுத்தால் எப்படி வேண்டுமானாலும் செய்தி வெளியிடும் என மத்திய அமைச்சரும் முன்னாள் ராணுவ தளபதியுமான வி.கே.சிங் டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
பிரான்ஸ் நாட்டின் தேசிய இணைய பாதுகாப்பு நிறுவனமான ஏஎன்எஸ்எஸ்ஐ, நாட்டின் ஆன்லைன் புலனாய்வு இதழான மீடியாபார்ட்-ன் இரண்டு பத்திரிகையாளர்கள் தொலைபேசிகளை பெகாசஸ் ஸ்பைவேர் இருப்பதை உறுதி செய்தது. முதல்முறையாக ஒரு அரசாங்க நிறுவனத்தால் உலகளாவிய உழல் குறித்த தகவல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்பட்டது. அதேபோல் பிரான்ஸ் நிதியமைச்சரின் செல்போனில் ஒட்டுக் கேட்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக தொழில்நுட்பக் குழுவினர் தெரிவித்தனர்.
பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் தனது மொபைல் எண்ணையும், மொபைல் போனையும் மாற்றி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அதிபருக்கு முன்னதாகவே பல மொபைல் எண்கள் இருக்கும் காரணத்தால் இது ஒரு பாதுகாப்பு நடவடிக்கையாகவே தெரிவிக்கப்பட்டது. அதேபோல் பிரான்ஸ் நாட்டு அதிபர் இமானுவேல் மேக்ரானின் மொபைல் எண் மாற்றப்பட்டது பாதுகாப்பு நடவடிக்கையே எனவும் இதன்மூலம் அவரது மொபைல் ஒட்டுக்கேட்கப்பட்டார் என்பதை உறுதி செய்யவில்லை எனவும் அந்நாட்டு அதிகாரிகள் குறிப்பிட்டனர்.
உலக நாடுகளில் பல்வேறு அரசியல் தலைவர்கள் இதில் சிக்கி உள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில், அதிகாரப்பூர்வமாக எடுக்கப்பட்ட முதல் நடவடிக்கையாக இது இருக்கிறது. பெகாசஸ் உளவு சாஃப்ட்வேர் என்பது சமீபத்தில் பேசுபொருளாக மாறி வருகிறது. தற்போது பெகாசஸ் சாஃப்ட்வேர் மூலம் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரானின் செல்போன் எண்ணும் வேவு பார்க்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த எண்களை நாங்கள் கண்டறிந்தோம் ஆனால் இம்மானுவேல் மேக்ரானின் தொலைபேசியின் தொழில்நுட்ப பகுப்பாய்வை எங்களால் மேற்கொள்ள முடியவில்லை என லாரன்ட் ரிச்சர்ட் தெரிவித்தார்.
பெகாசஸ் ஸ்பைவேரை தற்போது ஐபோனில் இலவச கருவியை பயன்படுத்தி குறியீட்டுத் திறன்கள் தேவையின்றி கண்டறியலாம். ஜெனீவா, ஸ்விட்சர்லாந்தை தளமாகக் கொண்ட டிஜிடிஎன்ஏ தனது ஐஓஎஸ் சாதன மேலாளர் iMazing-ஐ ஸ்பைவேர் கண்டறிதள் அம்சத்துடன் பெகாசஸை கண்டறிய உதவுகிறது. இந்த அம்சமானது அம்னஸ்டியின் மொபைல் சரிபார்ப்பு கருவித்தொகுப்பை பயன்படுத்தி வடிவமைக்கப்பட்டுள்ளது. பெகாசஸ் ஸ்பைவேர் மூலம் உங்கள் ஐபோன் தாக்கப்பட்டுள்ளதா என்பதை கண்டறிய இது உதவும்.
பெகாசஸ் ஸ்பைவேர் பயன்படுத்தி முக்கியப் புள்ளிகள் மட்டும் கண்காணிக்கப்பட்டு வருகிறது என தகவல்கள் கூறும்நிலையில் சாதாரண மக்களை கண்காணிக்கப்படுவது என்பது மிகக் குறைவு என்றாலும் பெகாசஸ் ஸ்பைவேர் தங்களை கண்காணிக்கப்படுகிறதா என்பதை உறுதி செய்து கொள்வது அவசியம். உங்கள் கணினியிலும் iMazing-ஐ பயன்படுத்தலாம். அதேபோல் மேக் அல்லது விண்டோஸ் கணினியிலும் iMazing இணையதள கருவியை இலவசமாக பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம். IMazing பயன்பாடு இலவசமாக கிடைத்தாலும், மென்பொருள் ஃப்ரீமியமாகவே கிடைக்கிறது. மென்பொருள் ஃப்ரீமியம் ஆக கிடைக்கிறது. அனைத்து அம்சங்களையும் பயன்படுத்த ப்ரீமியம் கட்டணம் செலுத்த வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக