Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 12 ஜனவரி, 2022

புதிய நிறுவனத்தை உருவாக்கிய டாடா.. அமேசான், ரிலையன்ஸ் உடன் நேரடி போட்டி..!

 மார்கெட்பிளேஸ்

இந்தியாவின் முன்னணி வர்த்தகக் குழுமங்களில் ஒன்றான டாடா குழுமத்தின் கிளை நிறுவனமான டாடா டிஜிட்டல் வேகமாக வளர்ந்து வரும் டிஜிட்டல் நிதியியல் சேவை துறையில் தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்ய முடிவு செய்துள்ளது.

இதற்காக டாடா டிஜிட்டல் நிறுவனம் டாடா பின்டெக் என்ற நிறுவனத்தைப் புதிதாக உருவாக்கியுள்ளது. இந்த நிறுவனத்தின் வாயிலாக அனைத்து இந்தியாவின் ஒட்டுமொத்த நிதியியல் சேவைகளுக்குமான ஈகாமர்ஸ் தளத்தை உருவாக்க முடிவு செய்துள்ளது.

டாடா குழுமம்

டாடா குழுமம் உருவாக்கியுள்ள டாடா பின்டெக் நிறுவனம் பல்வேறு நிறுவனங்களின் நிதியியல் திட்டங்கள் மற்றும் புதிய ரீடைல் பேமெண்ட் கேட்வே சேவைகளை வாடிக்கையாளர்களுக்கு அளிக்கும் ஒரு மார்கெட்பிளேஸ் அதாவது ஈகாமர்ஸ் தளமாக விளங்கும் எனத் தெரிகிறது.

மார்கெட்பிளேஸ்

இந்தியாவில் டிஜிட்டல் சேவைகளும், நிறுவனங்கள் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துள்ள நிலையில், பல நிறுவனங்கள் வாடிக்கையாளர்களைப் பெற முடியாமல் தவித்து வருகிறது. இந்தப் பிரச்சனையைச் சமாளிக்கவே டாடா பின்டெக் நிறுவனத்தின் மார்கெட்பிளேஸ் சேவை வாயிலாக மக்களுக்கும் நிதியியல் சேவை நிறுவனங்களை இணைக்கும் ஒரு பாலமாக இருக்க முடிவு செய்துள்ளது.

டாடா பின்டெக் நிறுவனம்

டாடா குழுமம் நவம்பர் 2021ல் டாடா பின்டெக் நிறுவனத்தைத் தனது டிஜிட்டல் சேவை திட்டங்களை உருவாக்கும் பணியில் இருக்கும் இதேவேளையில் டாடா பின்டெக் மார்க்கெட் பிளேஸ் திட்டத்தை உருவாக்கி வருகிறது. இதற்காக டாடா பின்டெக் நிறுவனம் தற்போது சந்தையில் இருக்கும் முன்னணி டிஜிட்டல் மற்றும் நிதியியல் சேவை நிறுவனங்களில் இருக்கும் உயர் அதிகாரிகளைப் பணியில் சேர்த்து வருகிறது.

முக்கிய அதிகாரிகள்

டாடா பின்டெக் நிறுவனத்தின் நிர்வாகக் குழுவில் மின்திரா & க்யூர்பிட் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் பன்சால், முன்னாள் முதலீட்டு வங்கியாளர் அன்கூர் வர்மா, டாடா டிஜிட்டல் நிறுவனத்தின் நிதி சேவை பிரிவின் சிஇஓ மோதன் சாஹா ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

டாடா டிஜிட்டல் மற்றும் டாடா பின்டெக்

மேலும் டாடா டிஜிட்டல் மற்றும் டாடா பின்டெக் நிறுவனத்திற்கான தொழில்நுட்ப உதவிகள் அனைத்தும் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனம் அளித்து வருவது குறிப்பிடத்தக்கது. மேலும் டாடா பின்டெக் இன்னும் NBFC உரிமத்தை பெறாத காரணத்தால் பிற நிதியியல் சேவைகளை வழங்குவதில் அதிகப்படியான கவனத்தைச் செலுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக