Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வியாழன், 24 பிப்ரவரி, 2022

ஜியோ அதிரடி அறிவிப்பு: 1 வருட டிஸ்னி+ ஹாட்ஸ்டார் பிரீமியம் சந்தா, தினமும் 3ஜிபி டேட்டா: விலைக்கேற்ற வெகுமதி..

 ஜியோ அறிமுகம் செய்துள்ள இரண்டு புதிய திட்டங்கள்

இந்தியாவின் நம்பர் ஒன் தொலைத்தொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ, டிஸ்னி+ ஹாட்ஸ்டார் பிரீமியம் சந்தாவுடன் இரண்டு புதிய ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. தற்போது, ​​டிஸ்னி+ ஹாட்ஸ்டார் சந்தாவுடன் தனியார் தொலைத்தொடர்பு ஆபரேட்டர்கள் வழங்கும் அனைத்து திட்டங்களும் ஓவர்-தி-டாப் (OTT) தளத்தின் 'மொபைல்' திட்டத்தை மட்டுமே கொண்டு வருகின்றன. ஆனால் இப்போது, ​​பயனர்கள் ஜியோவிடமிருந்து தங்கள் ப்ரீபெய்ட் திட்டங்களுடன் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் பிரீமியம் சந்தாவைப் பெறுவதற்கான விருப்பம் வழங்கப்பட்டுள்ளது.

ஜியோ அறிமுகம் செய்துள்ள இரண்டு புதிய திட்டங்கள்

ஜியோ நிறுவனம் இப்போது அறிமுகம் செய்துள்ள இரண்டு புதிய திட்டங்களும் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் பிரீமியம் சந்தாவை முழுமையாக வழங்குகிறது. இந்த இரண்டு புதிய திட்டங்களின் விலை முறையே ரூ.1499 மற்றும் ரூ.4199 என்று ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது. விலையைப் பார்த்ததும் அம்மாடியோவ், இது எல்லாம் நமக்கு செட் ஆகாது என்று உடனே முடிவு செய்துவிடாதீர்கள். விலைக்கேற்ற வெகுமதி என்று சொல்வார்களே, அது போன்று தான் இந்த திட்டங்களும். நீங்கள் எதிர்பார்ப்பதை விட அட்டகாசமான நன்மைகளை உங்களுக்கு ஒரு வருடத்திற்குத் தடையின்றி வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

விலையை பார்த்து தப்பா யோசிக்காதீங்க.. விலைக்கேற்ற வெகுமதி உண்டு மக்களே

இந்த திட்டங்களில் விலையைப் பார்த்து இது மிகவும் அதிகம் என்று யூகித்துவிடாதீர்கள், உண்மையைச் சொல்லப் போனால், நீங்கள் தொடர்ந்து ஒரு வருடத்திற்கு மாதம் தவறாமல் ரீசார்ஜ் செய்யும் ஒட்டுமொத்த விலையுடன் ஒப்பிட்டுப் பார்க்கையில் இதன் விலை குறைவாகவே இருக்கிறது. இந்த திட்டங்கள் உங்களுக்கு வழங்கும் நன்மைகள் என்ன என்பதை நாம் கவனிக்க வேண்டும். இந்த திட்டங்கள் உங்களுக்கு 365 நாட்களுக்கும் சிறப்பான நன்மையைத் தடையின்றி வழங்குகிறது என்பதனால், உண்மையில் இது ஒரு புத்திசாலித்தனமான சாய்ஸ் தான்.

ஒரு வருட டிஸ்னி+ ஹாட்ஸ்டார் பிரீமியம் சந்தா

இப்போது டிஸ்னி+ ஹாட்ஸ்டார் பிரீமியம் சந்தா மூலம் பயனர்கள் 4கே தரத்தில் உள்ளடக்கத்தை அணுக முடியும். மேலும், ஜியோவின் திட்டங்களுடன், ஜியோமார்ட் மஹா கேஷ்பேக்கும் கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திட்டங்கள் ஒவ்வொன்றும் அட்டவணையில் என்ன கொண்டு வருகின்றன என்பதை இப்போது தெளிவாகப் பார்க்கலாம், டிஸ்னி+ ஹாட்ஸ்டார் பிரீமியம் சந்தாவை பெரும் பயனர்கள் எண்ணில் அடங்காத பிரீமியம் திரைப்படங்கள் மற்றும் டிவி நிகழ்ச்சிகளைப் பல மொழிகளில் கண்டு களிக்கலாம்.

ரிலையன்ஸ் ஜியோ வழங்கும் புதிய ரூ. 1499 ப்ரீபெய்ட் திட்டம்

ரிலையன்ஸ் ஜியோவிடமிருந்து புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ரூ. 1499 ப்ரீபெய்ட் திட்டத்தில், பயனர்கள் தினசரி 2ஜிபி டேட்டா நன்மை, வரம்பற்ற குரல் அழைப்பு நன்மை, தினமும் 100 எஸ்எம்எஸ் நன்மை ஆகியவற்றை நிறுவனம் வழங்குகிறது. இந்த திட்டத்தின் நன்மைகள் உங்களுக்கு 84 நாட்கள் செல்லுபடியாகும் வேலிடிட்டி உடன் வருகிறது. ஜியோ பயன்பாடுகளுக்கான சந்தா ஆகியவற்றையும் இத்திட்டம் வழங்குகிறது.

ஒரு வருட டிஸ்னி+ ஹாட்ஸ்டார் சந்தாவோடு கிட்டத்தட்ட இலவசமாகக் கிடைக்கும் நன்மைகள்

இந்த திட்டம் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் பிரீமியத்திற்கான இலவச சந்தாவைத் தொகுக்கும், பயனர்கள் இதை தனித்தனியாக வாங்கினால் பொதுவாக ரூ.1499 செலவு செய்ய வேண்டும் என்பது கவனிக்கத்தக்கது. ஜியோவுடன் கிடைக்கும் இந்த திட்டத்துடன் நீங்கள் ஒப்பிடுகையில், ஜியோ அதன் ரூ.1,499 திட்டத்தின் நன்மைகளை உங்களுக்கு இலவசமாகவே வழங்குகிறது என்று நாம் கூறலாம். நீங்கள் செலவு செய்யும் ரூ. 1,499 விலையில் ஒரு வருட டிஸ்னி+ ஹாட்ஸ்டார் பிரீமியம் சந்தாவுடன் 84 நாட்களுக்கு டேட்டா, வாய்ஸ் கால்ஸ் மற்றும் எஸ்எம்எஸ் நன்மையோடு கிடைக்கிறது.

ரிலையன்ஸ் ஜியோ வழங்கும் புதிய ரூ. 4,199 ப்ரீபெய்ட் திட்டம்

ரிலையன்ஸ் ஜியோ வழங்கும் புதிய ரூ. 4199 விலை ப்ரீபெய்ட் திட்டம், அதன் பயனர்களுக்குத் தினசரி 3ஜிபி டேட்டா நன்மை, வரம்பற்ற குரல் அழைப்பு நன்மை, தினமும் 100 எஸ்எம்எஸ் நன்மை ஆகியவற்றை வழங்குகிறது. இந்த திட்டம் 365 நாட்களுக்குச் செல்லுபடியாகும் வேலிடிட்டி உடன் வருகிறது. இத்துடன் உங்களுக்கு கூடுதல் ஜியோ நன்மையாக அனைத்து ஜியோ பயன்பாடுகளுக்கான சந்தாவையும் நிறுவனம் உங்களுக்கு வழங்குகிறது. இந்த திட்டமானது ஒரு வருட டிஸ்னி+ ஹாட்ஸ்டார் பிரீமியத்திற்கான சந்தாவைக் கூடுதல் கட்டணமின்றி வழங்குகிறது.

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் பிரீமியம் சந்தாவை வழங்கும் நாட்டின் முதல் நிறுவனம் ஜியோ

ப்ரீபெய்ட் திட்டங்களுடன் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் பிரீமியம் சந்தாவை வழங்கும் நாட்டின் முதல் தொலைத்தொடர்பு ஆபரேட்டராக ரிலையன்ஸ் ஜியோ மாறியுள்ளது. மீதமுள்ள தொலைத்தொடர்பு ஆபரேட்டர்கள் Disney+ Hotstar மொபைல் சந்தாக்களை மட்டுமே வழங்குகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. உண்மையைச் சொல்லப் போனால், வாடிக்கையாளர்களுக்கும் ஜியோவிற்கும் இது ஒரு சிறந்த மதிப்புள்ள ஒப்பந்தமாகும். ஏனெனில் இது ஒரு பயனருக்குச் சராசரி வருவாயை (ARPU) அதிகரிக்க டெல்கோவுக்கு உதவும்.

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் சந்தா வாங்கத் திட்டமிருந்தால் இதை கொஞ்சம் பாருங்க

இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, பாரதி ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா (Vi) ஆகியவை அதே வழியில் ஏதாவது செய்யுமா என்பதைப் பார்ப்பது சுவாரஸ்யமாக இருக்கும். டிஸ்னி+ ஹாட்ஸ்டார் பிரீமியம் சந்தாவை வாங்க விரும்பும் வாடிக்கையாளர்களிடமிருந்து இந்தத் திட்டங்கள் நிச்சயமாக அதிக வரவேற்பைப் பெறும் என்பதில் சந்தேகமில்லை. உங்களுக்கு டிஸ்னி+ ஹாட்ஸ்டார் சந்தா வாங்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தால், இந்த திட்டங்களைக் கருத்தில்கொள்ளுங்கள். டிஸ்னி+ ஹாட்ஸ்டார் விஐபி சந்தாக்கள் பிரீமியம் சந்தாவைப் போல் செயலாப்டாது என்பதும் கவனிக்கத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக