Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 11 பிப்ரவரி, 2022

சீன அரசு அறிவித்த லாக்டவுன்.. 14 வருட உச்சத்தில் அலுமினியம் விலை.. என்ன நடக்குது..?!

 பைஸ் நகரம்

கனிம வள உற்பத்தியில் முன்னோடியாக இருக்கும் சீனா, சமீபத்தில் இத்துறையில் இருக்கும் பெரும் நிறுவனங்களை இணைத்து உலகிலேயே மிகப்பெரிய நிறுவனமாக உருவாக்கியது. உலகளவில் கனிம மற்றும் உலோக விற்பனை சந்தை மற்றும் அதன் விலையைத் தனது கட்டுப்பாட்டிற்குக் கொண்டு வர வேண்டும் என்பதற்காகச் சீன அரசு நிறுவனங்களை இணைத்தது.

இதை உறுதி செய்யும் வகையில் சீன அரசு பெயர் தெரியாத ஒரு பகுதியில் அறிவித்த லாக்டவுன் சர்வதேச சந்தையில் அலுமினியத்தின் விலை 14 வருட உச்சத்தைத் தொட்டு உள்ளது.
கொரோனா தொற்று

கொரோனா தொற்று பரவல் காரணமாகச் சீன அரசு பைஸ் (Baise) என்னும் தெற்கு சீன பகுதியில் இருக்கும் ஒரு சிறு நகரத்தில் லாக்டவுன் அறிவித்துள்ளது. இதனால் சர்வதேச சந்தையில் அலுமினிய உலோகத்தின் விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்து 14 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு உயர்ந்துள்ளது. இந்தப் பெயர் தெரியாத நகரத்தில் அறிவிக்கப்பட்ட லாக்டவுன் உலக நாடுகளைத் தடுமாற்றமடையச் செய்துள்ளது.

பைஸ் நகரம்

"தெற்கு சீனாவின் அலுமினிய தலைநகரம்" என்று செல்லப் பெயர் கொண்ட பைஸ் நகரம் வியட்நாமின் எல்லைக்கு அருகில் அமைந்துள்ள. சுமார் 35 லட்சம் மக்கள் தொகை கொண்ட பைஸ் நகரம் சீனாவின் அலுமினியம் சுரங்க மற்றும் உற்பத்திக்கான சென்டரல் இடமாக உள்ளது.

2.2 மில்லியன் டன் அலுமினியம்

பைஸ் நகரத்தில் இருந்து மட்டும் ஆண்டுக்கு சுமார் 2.2 மில்லியன் டன் பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. இது சீனாவின் கனிம வளம் நிறைந்த குவாங்சி பகுதி உற்பத்தியை விடவும் 80 சதவீதத்திற்கும் அதிகமாகும்.

சீனா ஆதிக்கம்

உலகின் மிகப்பெரிய அலுமினியம் உற்பத்தியாளராகச் சீனா விளங்கும் நிலையில், உலக நாடுகள் அனைத்தும் சீனாவை மட்டுமே அலுமினியத்திற்காக நம்பியுள்ளது. தற்போது அலுமினிய விலை உயர்வால் ஆட்டோமொபைல், கட்டுமானம் மற்றும் நுகர்வோர் பொருட்கள் உள்ளிட்ட முக்கியத் துறைகள் கடுமையாகப் பாதிக்கப்பட உள்ளது.

190 பேருக்கு தொற்று

பைஸ் நகரத்தில் 190 க்கும் குறைவான கொரோனா தொற்று மட்டுமே இருக்கிறது. உலகின் பிற பகுதிகளில் உள்ள தொற்று எண்ணிக்கையை ஒப்பிடும் போது இது குறைவாக இருந்தாலும், சீனா ஆரம்பம் முதல் கடுமையான கட்டுப்பாடுகள் உடன் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்தி வருவதால் திங்கட்கிழமை பைஸ் நகரத்தில் லாக்டவுன் அறிவிக்கப்பட்டு உள்ளது.

போக்குவரத்துப் பாதிப்பு

லாக்டவுன் அறிவிப்புக்குப் பின்பு அலுமினிய உற்பத்தி குறைந்து இருந்தாலும், லாக்டவுன் காரணமாகப் பயணக் கட்டுப்பாடுகள் கடுமையாக இருக்கும் நிலையில் அலுமினிய பார்கள் மற்றும் கனிமங்கள் பிற அனுப்ப முடியாமல் உள்ளது எனப் பைஸின் உள்ளூர் தொழில் சங்கம் தெரிவித்துள்ளது.

சீன புத்தாண்டு

சீனாவில் புத்தாண்டு விடுமுறை தொடர்ந்து இந்த லாக்டவுன் அறிவிக்கப்பட்டு உள்ள காரணத்தால் உலக நாடுகளில் அலுமினியத்தின் இருப்பு வேகமாகக் குறைந்து வருகிறது. இதனால் சீனாவில் மட்டும் அல்லாமல் உலக நாடுகள் முழுவதும் தட்டுப்பாடு அதிகரித்துள்ள காரணத்தால் விலையும் அதிகரித்துள்ளது.

அலுமினியம் விலை

கடந்த மாதம் ஒரு டன் அலுமினியம் விலை 2,954 டாலராக இருந்த நிலையில் தற்போது 3265.80 டாலர் வரையில் உயர்ந்து 14 வருட உச்சத்தைத் தொட்டு உள்ளது. இந்த விலை உயர்வின் மூலம் அலுமினியம் பயன்படுத்தும் அனைத்து உற்பத்தி பொருட்களின் விலையும் அதிகரிக்கும். குறிப்பாக ஆட்டோமொபைல், கட்டுமானம் மற்றும் நுகர்வோர் பொருட்களின் விலை அதிகரிக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக