Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 22 பிப்ரவரி, 2022

3 வருடத்தில் 8 லட்சம் பேர் வெளியேற்றம்.. எல்ஐசி-யின் உண்மையான நிலை இதுதான்..!

  96 சதவீத ப்ரீமியம்

இந்தியாவின் மிகப்பெரிய ஆயுள் காப்பீட்டு நிறுவனமாக இருக்கும் எல்ஐசி நிறுவனத்தின் நிலையான வளர்ச்சிக்கும், ஆதிக்கத்திற்கும் முக்கியப் பங்கு விகித்த எல்ஐசி ஏஜெண்ட்கள் தற்போது தொடர்ந்து வெளியேறி வருவதாக எல்ஐசி தெரிவித்துள்ளது.

மார்ச் மாதம் இந்தியாவிலேயே மிகப்பெரிய ஐபிஓ-வை வெளியிட காத்து இருக்கும் எல்ஐசி நிறுவனத்திற்கும், எல்ஐசி நிறுவனத்தில் முதலீடு செய்யக் காத்திருக்கும் முதலீட்டாளர்களுக்கும் அதிர்ச்சி அளிக்கும் விஷயமாக மாறியுள்ளது.

எல்ஐசி நிறுவனத்தின் ராணுவம்

எல்ஐசி நிறுவனத்திற்கு இன்சூரன்ஸ் ஏஜெண்ட் தான் ராணுவம் போல, இந்தியா முழுக்கச் சிறு கிராமம், டவுன் முதல் பெரு நகரங்கள் வரையில் ஏஜெண்ட்களை வைத்துக் கொண்டு இயங்கி வருகிறது.

எல்ஐசி ஏஜெண்ட்கள்

இந்தியாவில் இன்சூரன்ஸ் வாங்குவதற்கு மறுப்புத் தெரிவித்த காலத்தில் இருந்து இன்று அனைவரும் தானாக முன்வந்து இன்சூரன்ஸ் பெறும் நிலைக்கு இந்திய மக்கள் மாறியுள்ளதற்கு மிக முக்கியமான காரணம் எல்ஐசி நிறுவனத்தின் ஏஜெண்ட்களின் பல வருட உழைப்பு தான்.

96 சதவீத ப்ரீமியம்

இன்றளவும் எல்ஐசி நிறுவனத்திற்கு 96 சதவீத ப்ரீமியம் தொகையைக் கொண்டு வருவது எல்ஐசி இன்சூரன்ஸ் ஏஜெண்ட்கள் தான், ஆனால் உண்மையில் பல ஏஜெண்ட்கள் எல்ஐசி நிறுவனத்தில் நேரடி பணியாளர்கள் இல்லை என்பதும் கூடுதல் தகவல்.

கொரோனாவுக்கு பின்

கொரோனா தொற்றுக்குப் பின்பு மிகப்பெரிய அளவிலான மாற்றங்கள் இன்சூரன்ஸ் துறையில் ஏற்பட்டு உள்ள காரணத்தால் எல்ஐசி இன்சூரன்ஸ் ஏஜெண்ட்டுகள் அதிகளவில் வெளியேற துவங்கியுள்ளனர், இதனால் எல்ஐசி நிறுவனத்தின் வர்த்தகமும் கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளது.

எல்ஐசி ஏஜெண்ட்கள் வெளியேற்றம்

இந்நிலைில் 2019ஆம் நிதியாண்டில் 2.33 லட்சம் பேரும், 2020ஆம் நிதியாண்டில் 2.43 லட்சம் பேரும், 2021ஆம் நிதியாண்டில்

லட்சம் பேரும், 2022ஆம் நிதியாண்டில் முதல் 6 மாதத்தில் 1.34 லட்சம் எல்ஐசி ஏஜெண்ட்கள் வெளியேறியுள்ளனர் என எல்ஐசி தெரிவித்துள்ளது.

புதிய ஏஜெண்ட்கள் சேர்ப்பு

மேலும் எல்ஐசி நிறுவனத்தின் ஆக்டிவ் ஏஜெண்ட் எண்ணிக்கை மார்ச் 31, 2021ல் 10.86 லட்சமாக இருந்த நிலையில், செப்டம்பர் 30, 2021ல் 17.48 சதவீதம் குறைந்து 8.96 லட்சமாக சரிந்துள்ளது. எல்ஐசி ஏஜெண்ட்கள் வெளியேறுவதற்கு இணையாகப் புதிய ஏஜெண்ட்கள் சேர்க்கப்பட்டாலும் வர்த்தகம் கடந்த சில வருடங்களகாகப் பாதிக்கப்பட்டு வருகிறது.

ஆதிக்கம்

ஒட்டுமொத்த தனியார் இன்சூரன்ஸ் நிறுவனங்களில் 11 லட்சம் இன்சூரன்ஸ் ஏஜெண்ட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், எல்ஐசி இன்று 13.5 லட்சம் இன்சூரன்ஸ் ஏஜெண்டுகளை வைத்துக்கொண்டு அசத்தி வருகிறது.

ஐபிஓ முதலீட்டாளர்கள்

ஆனால் 96 சதவீத ப்ரீமியம் கொண்டு வரும் எல்ஐசி ஏஜெண்ட்டுகளை தக்கவைப்பதில் நிலையற்ற தன்மை இருக்கும் நிலையில் எல்ஐசி டிஜிட்டல் மார்கெட்டிங் மூலம் வர்த்தகத்தைப் பெற்றாலும் மொத்த வர்த்தகத்தில் 1 சதவீதத்தை கூடத் தாண்டவில்லை. இந்நிலையில் எல்ஐசி நிறுவனத்தில் நீண்ட காலப் பங்கு முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டிய முக்கியக் காரணியாக இது மாறியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக