Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

திங்கள், 14 பிப்ரவரி, 2022

இன்னும் 30,000 செயற்கைக்கோளா?- ஸ்பேஸ் எக்ஸ் பிரமாண்ட திட்டம்., விளைவுகள் குறித்து நாசா கவலை!

ஸ்பேஸ்எக்ஸ் போட்டியில் வெற்றி

எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனமானது பிராட்பேண்ட் இணையத்தை வழங்குவதற்கு சுமார் 12,000 செயற்கைக்கோள்களுக்கான அங்கீகாரத்தை பெற்றிருக்கிறது. மேலும் அடுத்த தலைமுறை இணைப்புக்கு என கூடுதலாக 30,000 செயற்கைகோள் நிலைநிறுத்த அங்கீகாரம் கோரியுள்ளது. ஸ்பேஸ் எக்ஸ்-ன் இந்த திட்டம் குறித்து நாசா கவலை தெரிவித்துள்ளது.

ஸ்பேஸ்எக்ஸ் போட்டியில் வெற்றி

ப்ளூ ஆர்ஜின், டினெடிக்ஸ் ஆஃப், ஹன்ட்ஸ்வில்லே, அலபாமா என்ற பாதுகாப்பு ஒப்பந்ததாரரான மூன்றாம் நிறுவனத்தை வீழ்த்தி மஸ்கின் ஸ்பேஸ்எக்ஸ் போட்டியில் வெற்றிப் பெற்றதாக நாசா இந்த மாதம் அறிவித்தது. எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் ஸ்டார்லிங்க் இணைப்பு பயன்பாடுக்கு என 30,000 செயற்கைக்கோளை விண்ணுக்கு அனுப்பும் திட்டம் குறித்து நாசா கவலை தெரிவித்துள்ளது. எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் ஆனது ஸ்டார்லிங்க் பிராட்பேண்ட் இணையத்தை வழங்குவதற்கு சுமார் 12,000 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்துவதற்கு அங்கீகாரம் பெற்றிருக்கிறது. அதோடு கூடுதலாக தற்போது 30,000 செயற்கைக்கோள்களை கொண்ட இரண்டாம் தலைமுறை இணையத்துக்கு அங்கீகாரம் கோரியிருக்கிறது.

பாதிப்புகள் மற்றும் அதிர்வெண்ணின் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு குறித்து நாசா கவலை

அறிவியல் மற்றும் மனித விண்வெளிப் பயணங்களில் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் அதிர்வெண்ணின் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு குறித்து நாசா கவலை கொண்டுள்ளது. என ஃபெடரல் கம்யூனிகேஷன்ஸ் கமிஷன் குறிப்பிட்டுள்ளது. தற்போது வரை 25,000 மொத்த பொருள்கள் சுற்றுப்பாதையில் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், அதில் 600 கிமீ-க்கு கீழ் 6100 பொருட்கள் இருப்பதாகவும் நாசா குறிப்பிட்டுள்ளது. தற்போது ஸ்பேஸ்எக்ஸ்-ன் இரண்டாம் தலைமுறை இணைப்புக்கு 30,000 செயற்கைக்கோள்களை அனுப்புவது என்பது "சுற்றுப்பாதையில் கண்காணிக்கப்படும் பொருட்களின் எண்ணிக்கையை விட இரண்டு மடங்கு அதிகமாகும் எனவும் 600 கிமீ-க்கு கீழே உள்ள பொருட்களின் எண்ணிக்கையை இது ஐந்து மடங்குக்கு மேல் அதிகரிக்கும் எனவும் தெரிவித்துள்ளது.

1469 செயற்கைக்கோள்கள் செயல்பாட்டில்

ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் இந்த கருத்துக்கு இன்னும் பதிலளிக்கவில்லை. ஜனவரி 15 அன்று ஸ்பேஸ்எக்ஸ் ஒரு டுவிட் செய்தது, அதில் 1469 செயற்கைக்கோள்கள் செயல்பாட்டில் இருப்பதாகவும் விரைவில் 272 செயற்கைக்கோள் செயல்பாட்டு சுற்றுப்பாதைக்கு வரும் எனவும் அதில் குறிப்பிட்டு இருந்தது. அதேபோல் அமேசான்.காம் நிறுவனமும் அதன் ப்ராஜெக்ட் கொய்பர் திட்டத்துக்கு 3236 செயற்கைக்கோள்களை உருவாக்க குறைந்தபட்சம் 10 பில்லியன் டாலர் செலவழிக்க இருப்பதாக உறுதியளித்தது. டிஷ் நெட்வொருக் செய்ததை போன்றே ஸ்பேஸ்எக்ஸ் திட்டம் குறித்தும் எஃப்சிசி கவலை எழுப்பி இருக்கிறது.

ஸ்பேஸ் எக்ஸ்-ன் ஸ்டார் லிங்க் சேவை

செயற்கைக்கோள் மூலம் இணையம் வழங்கும் ஸ்பேஸ் எக்ஸ்-ன் ஸ்டார் லிங்க் சேவை விலை உயர்ந்ததாக இருந்தாலும். ஃபைபர் ஆப்டிக் கேபிள்கள் மற்றும் செல்போன் டவர்கள் சென்றடையாத கிராமப்புற அல்லது சேவை செய்வதற்கு கடினமான இடங்களில் வசிப்பவர்களுக்கு இந்த செயற்கைக்கோள் தொழில்நுட்பம் மூலம் அதிவேக இணைய சேவை வழங்க முடியும். எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் அதன் ஸ்டார்லிங்க் ஆரம்ப அணுகல் திட்டத்தை ஆறு மாதங்களுக்கு முன்பு பொதுமக்கள் சேவைக்கு கொண்டு வந்தது. செயற்கைகோள் இணைய சேவையானது முதல் சில மாதங்களிலேயே 10,000-த்துக்கும் மேற்பட்ட பயனர்களை பெற்றது.

பிராட்பேண்ட் சேவையில் ஒரு புரட்சி

பிராட்பேண்ட் சேவையில் ஒரு புரட்சி என்றே இந்த ஸ்டார்லிங்க் சேவையை கூறலாம். செயற்கைக்கோள் மூலம் கிராமப்புற, வனப்பகுதி, தொலைத்தூர பகுதிகளுக்கு அதிவேக இணைய சேவை வழங்கும் திட்டம் இதுவாகும். எலான் மஸ்க்கின் டெஸ்லா இந்தியாவிற்கு வந்த நிலையில் இந்த பிராட்பேண்ட் ஸ்டார்லிங்க் சேவை கூடிய விரைவில் இந்தியாவுக்கு வர இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்க தகவலாகும். ஸ்டார்லிங்க் நிறுவனம் ஆயிரக்கணக்கான செயற்கைக்கோள்களை பயன்படுத்த திட்டமிட்டிருக்கிறது. இதற்கு ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் முன்னதாகவே 60 செயற்கைகோள்களை விண்ணில் செலுத்தியது. ரூட்டர், ஆண்டெனா போன்ற உபகரணங்களுக்கு 499 டாலர் பெறுவதாக தெரிவிக்கப்படுகிறது. தற்போது 150 எம்பிபிஎஸ் ஆக இருக்கும் பதிவிறக்க வேகம் செயற்கைகோள்கள் அதிகரிக்கும் போது 300 எம்பிபிஎஸ் ஆக அதிகரிக்கும் என எலான்மஸ்க் குறிப்பிட்டுள்ளார்.

விவசாய நிலங்கள், வனப்பகுதி உள்ளிட்ட கிராமப்புறப் பகுதி

இதுகுறித்து சிஎன்பிசி வெளியிட்ட தகவல்கள் குறித்து பார்க்கலாம். சேவையின் உண்மை அனுபவத்தை தெரிந்து கொள்ள சிஎன்பிசி ஸ்டார்லிங்க் பயன்படுத்தும் 50-க்கு மேற்பட்டவர்களிடம் கருத்துகளை சேகரித்துள்ளனர். இந்த கணக்கெடுப்பில் கனடா மற்றும் கலிபோர்னியா, மெக்சிகன் உள்ளிட்ட 13 யுஎஸ் மாநிலங்களை சேர்ந்தவர்கள் இதில் இடம்பெற்றுள்ளனர். மேலும் ஸ்டார்லிங்க் பயனர்களில் பெரும்பாலானோர் விவசாய நிலங்கள், வனப்பகுதி உள்ளிட்ட கிராமப்புறம் மற்றும் தொலைதூர பகுதிகளை சேர்ந்தவர்கள். ஸ்டார்லிங்க் சேவை நீண்டகாலம் வழங்க வேண்டும் என தான் எதிர்பார்ப்பதாகவும், சேவைக்கான பீட்டாவின் விலை பிற கிடைக்கும்த்தன்மை விலையை விட நியாயமானதாக உள்ளதாகவும் பயனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

ஒன்றோடொன்று இணைக்கப்பட்டு இணைய நெட்வொர்க்

ஸ்டார்லிங்க் பயன்பாடு குறித்து பார்க்கையில், இது ஆயிரக்கணக்கான செயற்கைக்கோள்களுடன் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டு இணைய நெட்வொர்க் உருவாக்கி வழங்கும் சேவையாகும். தொலைதூர பயனர்களுக்கும் அதிவேக இணையத்தை வழங்க வடிவமைக்கப்பட்டுள்ளது. விண்வெளி துறையின் விண்மூன் என இது அழைக்கப்படுகிறது. உயரமான பகுதிகள், மேற்கூரை ஆண்டெனா பொருத்த வேண்டும் என்ற கவலை தவிர்க்கும் வகையில் இதன் வேகம், கட்டணம் ஆகியவை இருக்கிறது.

இணைப்பு விலை குறித்த விவரம்

ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் தங்களது பயனர்களுக்கு கடந்த அக்டோபர் மாதம் "சிறந்தது ஏதுமில்லை" என்ற திட்டத்தை அறிமுகம் செய்தது. அதேபோல் இதுகுறித்த சிஎன்பிசி கணக்கெடுப்புப்படி பயனர்கள் பெரும்பாலானோர் நவம்பர், பிப்ரவரி மாதங்களில் இணைப்புகள் குறித்த அழைப்புகளை பெற்றுள்ளனர் எனவும் யுஎஸ்-ல் பீட்டாவின் கீழ் மாதம் 99 டாலர் விலையில் இணைப்பு பெறுகின்றனர் எனவும் தெரிவிக்கிறது. அதுமட்டுமின்றி வாடிக்கையாளர்கள் செயற்கைக்கோள்களுடன் இணைக்க வேண்டிய உபகரணங்களான வரி, ஷிப்பிங், ஆண்டெனா போன்ற உபகரணங்களுக்கு முன்பணம் செலுத்த வேண்டியிருக்கும் எனவும் கூறப்படுகிறது. ஸ்பேஸ்எக்ஸ் பயனர் கருவிகளை உண்மையாக குறைவான விலையே நிர்ணயிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக