கண்ணுக்குள் கீழ் தோன்றும் கருவளையம் என்பது உங்களுடைய அழகுக்கு மட்டுமல்ல, ஆரோக்கியத்திற்கு அடிக்கப்பட்ட எச்சரிக்கை மணி. ஆண், பெண் என இருபாலருக்குமே கருவளைய பிரச்சனைகள் வருவது உண்டு என்றாலும், அது பெண்களை தான் அதிகம் கவலை அடையச் செய்கிறது.
தூக்கமின்மை, வேலைப்பளு, மன அழுத்தம் போன்ற பிரச்சனைகளாலும், வைட்டமின் பி12 வைட்டமின் ஈ, வைட்டமின் கே, மற்றும் டி ஆகியவற்றின் குறைபாட்டாலும் கண்களுக்கு கீழ் உள்ள சரும நிறம் மாறுவதை கருவளையம் என்கிறோம். மேக்கப் போட்டு கருவளையத்தை கவர் செய்வது என்பது நிரந்தரமான தீர்வு கிடையாது. கண்களுக்கு கீழ் தோன்று கருவளையத்தை போக்க என்னவெல்லாம் செய்யலாம் என்பதை பார்க்கலாம்...
சருமத்தை பொலிவாக்கும் க்ரீம்கள்:
கண்களுக்கு கீழ் உள்ள சருமம் மிகவும் மென்மையானது. எனவே கருவளையத்தை அகற்ற பயன்படுத்தும் க்ரீம்கள் மீது கூடுதல் கவனம் தேவை. வைட்டமின் சி, ரெட்டினாய்டுகள் மற்றும் ஹைலூரோனிக் அமிலம் போன்றவை நிறைந்த க்ரீம்களை பயன்படுத்துவது கருவளையம் மீது நல்ல பலன் கொடுக்கும்.
அண்டர் ஐ லைட்னிங் க்ரீம் :
கண்களுக்கு கீழ் உள்ள கருவளையம், சுருக்கங்கள் ஆகியவற்றின் மீது அண்டர் ஐ லைட்னிங் க்ரீம்கள் சிறப்பாக செயல்படுகின்றன. குறிப்பாக ஈரப்பதத்தை தக்க வைக்க கூடிய மாய்சுரைசிங் தன்மை நிறைந்த க்ரீம்களை பயன்படுத்தினால் 3 முதல் 6 வாரத்திற்குள் உங்களது கருவளையம் மறையத்தொடங்குவதை காணலாம்.
மீண்டும் ஒருமுறை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள் கண்ணுக்கு கீழ் உள்ள சருமம் மிகவும் மெல்லியது, எனவே இதுபோன்ற க்ரீம்களை பயன்படுத்துவதற்கு முன்னதாக தோல் மருத்துவரிடம் ஆலோசனை கேட்பது நல்லது.
டீ பேக்குகளை 10 நிமிடங்கள் ஃப்ரிட்ஜ்ஜில் வைத்து, அதனை 15 நிமிடங்கள் கண்களில் வைத்து எடுத்தால், கண்களுக்கு ஈரப்பதத்தை அளித்து கண்களை சுற்றியுள்ள வீக்கம் மற்றும் கருமையை நீக்க உதவும்.
எக்ஸ்ட்ரா தூக்கம் நல்லது :
தூக்கமின்மை கருவளையம் உருவாக முக்கிய காரணியாக உள்ளது. குறைந்த பட்சம் 7 மணி நேரமாவது ஆழ்ந்து உறங்குவது உடலுக்கு புத்துணர்ச்சியையும், கண்களுக்கு ஓய்வையும் கொடுக்கிறது. கருவளைய பிரச்சனை உள்ளவர்கள் கூடுதலாக சில மணி நேரம் உறங்குவது நல்லது. இரவில் நேரமாக படுக்கைக்கு செல்வது, இரவில் நீண்ட நேரம் செல்போன் பார்ப்பது, கணினியில் வேலை பார்த்துவிட்டு அப்படியே உறங்கச் செல்வது, மேக்கப் உடன் தூங்குவது போன்ற பழக்கங்களையும் மாற்றிக்கொள்வது கண்களுக்கும், கருவளையத்திற்கும் நல்ல ஆரோக்கியத்தை கொடுக்கும்.
ஆரோக்கியமும் - அழகுக்குறிப்பும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக