Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

சனி, 19 பிப்ரவரி, 2022

Android-ஐ பாதுகாப்பாக வைத்திருக்க உதவிய இந்திய தொழில்நுட்ப வல்லுநருக்கு வெகுமதியோடு நன்றி தெரிவித்த கூகுள்!

அமன் பாண்டே2021-ஆம் ஆண்டில் மட்டும் பாண்டே 232 குறைபாடுகளை கண்டறிந்து அவை தொடர்பாக விரிவான தகவல்களை சமர்ப்பித்துள்ளார்.  
 
ஆண்ட்ராய்டில் உள்ள குறைபாடுகளை கண்டறிந்து அது குறித்து விரிவான தகவல்களை சமர்ப்பித்த ஒரு இந்திய தொழில்நுட்ப வல்லுநரின் முயற்சியை அமெரிக்க பன்னாட்டு தொழில்நுட்ப நிறுவனமும், பிரபல இன்டர்நெட் சர்ச் என்ஜின் நிறுவனமான கூகுள் பாராட்டி உள்ளது. குறிப்பிட்ட இந்திய தொழில்நுட்ப வல்லுநர் கண்டுபிடித்துள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்வது அனைத்து யூஸர்களுக்கும் ஆண்ட்ராய் ஆப்ரேட்டிங் சிஸ்டமை பாதுகாப்பானதாக்குகிறது. இந்தியாவை சேர்ந்த சைபர் செக்யூரிட்டி ரிசர்ச்சரான (Indian cybersecurity researcher) அமன் பாண்டே (Aman Pandey) என்பவரே கூகுள் நிறுவனத்திடமிருந்து பாராட்டை பெற்றுள்ளார்.

இது தொடர்பாக கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், " பக்ஸ்மிரர் (Bugsmirror) நிறுவனத்தை சேர்ந்த அமன் பாண்டே குறைபாடுகளை புகாரளிக்கும் மற்றும் சமர்ப்பிப்பதில் சிறந்த ஆராய்ச்சியாளராக கருதப்படுகிறார். கடந்த 2021-ஆம் ஆண்டில் மட்டும் பாண்டே 232 குறைபாடுகளை கண்டறிந்து அவை தொடர்பாக விரிவான தகவல்களை சமர்ப்பித்துள்ளார். இதன் மூலம் எங்கள் திட்டத்தை மிகவும் வெற்றிகரமானதாக்குவதில் அமன் பாண்டே முக்கியப் பங்கு வகித்து உள்ளார்" என்று குறிப்பிட்டு இருக்கிறது.

இதனை தொடர்ந்து இந்திய ஆராய்ச்சியாளர் அமன் பாண்டே, 2021-ல் கூகுளின் பக் பவுண்டி ப்ரோகிராமில் (bug bounty program) முதலிடம் பிடித்துள்ள தகவலையும் கூகுள் வெளிப்படுத்தி உள்ளது. தனது வெப்சைட் மற்றும் சர்விஸ்களை அனைவருக்கும் பாதுகாப்பான ஒன்றாக மாற்றுவதில் அமன் பாண்டேயின் பங்களிப்புகளுக்காக கூகுள் இப்போது அவரை அங்கீகரித்துள்ளது. இது கூகுளின் bug bounty program-ன் ஒரு பகுதியாகும். இந்த திட்டத்தின் கீழ் கூகுள் நிறுவனம் தனது சாப்ட்வேரில் உள்ள சிக்கல்கள் மற்றும் குறைபாடுகளை கண்டறியும் சைபர் பாதுகாப்பு நிபுணர்களுக்கு வெகுமதியையும் அளிக்கிறது.

Bugsmirror நிறுவனம் இந்தூரிலிருந்து இயங்குகிறது. NIT Bhopal-ல் படித்த பட்டதாரியான அமன் பாண்டே, பக்ஸ்மிரரின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியும் ஆவார். 2019-ஆம் ஆண்டு முதல் பாண்டே குறைபாடுகளை சமர்ப்பித்து வருவதாக கூகுள் தெரிவித்துள்ளது. கூகுள், ஆப்பிள் மற்றும் பல நிறுவனங்களின் பாதுகாப்பு அமைப்புகளை மேம்படுத்த, பலப்படுத்த நாங்கள் உதவுகிறோம். நாங்கள் பிழைகளைக் கண்டறிந்து, சம்பந்தப்பட்ட குழுவிற்கு புகாரளிக்கிறோம்" என்று பக்ஸ்மிரர் தனது வெப்சைட்டில் கூறியுள்ளது.

 கூகுள் சுமார் 8.7 மில்லியன் டாலர்களை (ரூ.65 கோடி) குறைபாடுகளை கண்டறிந்ததற்கு வெகுமதியாக பக்மிரர்ஸ் நிபுணர்களுக்கு கொடுத்துள்ளது. நிறுவனத்தின் பாதுகாப்பு ஆய்வாளர்கள் ஆண்ட்ராய்டில் மட்டுமின்றி, கூகுள் குரோம், சர்ச், ப்ளே மற்றும் பிற தயாரிப்புகளிலும் பாதிப்புகள் இருப்பதாக தெரிவித்துள்ளனர். அதே போல 2021-ஆம் ஆண்டில், குறைபாடுகளை கண்டறிந்து சொன்னதற்கான வெகுமதியாக சுமார் 8,700,000 டாலர்களை வழங்கி சாதனை படைத்துள்ளோம் என்பதை அறிவிப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம் என்று கூகுள் கூறியது. இதில் ஆராய்ச்சியாளர்கள் தங்களின் வெகுமதிகளில் 300,000 டாலருக்கும் மேல் தங்கள் விருப்பப்படி தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடையாக வழங்கியதாகவும் கூகுள் கூறி இருக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக