Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

சனி, 19 பிப்ரவரி, 2022

புதிய சிறப்பம்சங்களுடன் கூடிய வயர்லெஸ் இயர்பட்ஸை அறிமுகப்படுத்திய சோனி.!

 வயர்லெஸ் இயர்பட்ஸ்புதிய வயர்லெஸ் இயர்பட்ஸ்கள் பல்வேறு மேம்பட்ட அம்சங்களுடன் வருகிறது. யூஸர்களுக்கு பிரீமியம் ஆடியோ தரத்தை வழங்குவதிலும் தனி கவனம் செலுத்துகிறது.! 

ஆடியோ உலகில் மிக பெரிய மற்றும் பிரபலமான பிராண்டாக திகழ்கிறது sony. இந்த நிறுவனத்தின் ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ்கள் பல ஆண்டுகளாக சிறந்த தரத்தை தக்க வைத்துள்ளன. ஜப்பானிய நிறுவனமான சோனி இப்போது மற்றொரு வயர்லெஸ் இயர்பட்டை மார்கெட்டிற்கு கொண்டு வந்துள்ளது. ஆனால் இது சற்று வித்தியாசமானது. சோனி நிறுவனத்தின் இந்த புதிய தயாரிப்பு Sony LinkBuds true wireless stereo (TWS) earbuds என்று அழைக்கப்படுகிறது. இந்த புதிய இயர்பட்ஸை சோனி சமீபத்தில் உலகளவில் அறிமுகம் செய்தது.

இந்த புதிய வயர்லெஸ் இயர்பட்ஸ்கள் பல்வேறு மேம்பட்ட அம்சங்களுடன் வருகிறது. யூஸர்களுக்கு பிரீமியம் ஆடியோ தரத்தை வழங்குவதிலும் தனி கவனம் செலுத்துகிறது. இந்த புதிய ட்ரூ வயர்லெஸ் இயர்போன்கள் ஒரு புதுமையான ஓப்பன் ரிங் டிசைனை கொண்டுள்ளன, இது யூஸர்கள் விரும்பும் போது அவர்களின் சுற்றுப்புறத்திலிருந்து ஒலிகளைக் கேட்க எளிதாக அனுமதிக்கும் என்று சோனி நிறுவனம் கூறி இருக்கிறது. அதே போல Sony LinkBuds TWS இயர்பட்கள் வைட் ஏரியா டேப் (Wide Area Tap) என்ற அம்சத்தையும் பெறுகின்றன. இந்த அம்சமானது யூஸர்கள் தங்கள் காதுகளுக்கு முன்னால் Tap செய்வதன் மூலம் ப்ளேபேக்கை கன்ட்ரோல் செய்ய அனுமதிக்கிறது.

இந்த TWS இயர்பட்ஸை பயன்படுத்தும் யூஸர் ஒருவரிடம் பேசத் தொடங்கும் போது தானாக மியூசிக் ப்ளேபேக்கை pause செய்யும் வகையில் Speak-to-Chat அம்சம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. மேலும் Sony LinkBuds TWS இயர்பட்ஸ் வியர்வை மற்றும் ஸ்பிளாஷ் ப்ரூஃபிற்கான IPX4 ரேட்டிங்கை பெற்றுள்ளன. Sony LinkBuds TWS இயர்பட்ஸானது Spotify-யிலிருந்து மியூசிக் ட்ராக்குகளை இயக்கும் திறனை கொண்டுள்ளது, எனவே யூஸர் ஸ்மார்ட் போனைப் பயன்படுத்தாமலேயே மியூசிக்கை ப்ளே செய்யலாம். இந்த தனித்துவமான வடிவமைப்பு ஒரு அல்ட்ரா-லைட் தயாரிப்பை வழங்குகிறது.

யூஸர் இதை காதில் சொருகி இருந்தாலும் பிறரிடம் பேசவும், பிறர் பேசுவதை கேட்பதற்கும் ஒரு அடிப்படை நோக்கத்தை வழங்குகிறது. சோனி இதை LinkBuds-ன் "நெவர் ஆஃப்" எக்ஸ்பீரியன்ஸ் என்று அழைக்கிறது. இது யூஸர் யாரிடமாவது பேசும் அலல்து பேசுவதை கவனிக்கும் தருணத்தில்மியூசிக்கை நிறுத்துகிறது. பேசி முடித்ததும், மியூசிக் தானாகவே ப்ளே ஆக தொடங்குகிறது. மேலும் இந்த இயர்பட்ஸ்கள் ஃபோன் கால்களை மேற்கொள்ளும் போது noise cancellation அனுபவத்தை தரும், மேலும் உங்கள் சுற்றுப்புறத்தின் அடிப்படையில் ஒலியளவை அமைக்கும் மேம்பட்ட வால்யூம் கன்ட்ரோலை வழங்கும்.

சோனி தனது இந்த புதிய லிங்பட்ஸை நன்கு சமநிலை ஒலி அனுபவத்தை தருவதற்காக 12 மிமீ ரிங் டிரைவருடன் (12mm ring driver) பொருத்தியுள்ளது. அதே நேரத்தில் அதன் இன்டக்கிரேட்ட்டட் ப்ராசஸர் V1 இயர்பட்ஸின் ஒட்டுமொத்த செயல்திறனை கவனித்து கொள்கிறது. இந்த வயர்லெஸ் இயர்பட்ஸ் ஒருமுறை சார்ஜ் செய்தால் 5.5 மணிநேரம் டோட்டல் ப்ளேபேக் டைமிங்கை வழங்குவதாக கூறப்படுகிறது. மேலும் சார்ஜிங் கேஸ் கூடுதல் 12 மணிநேர பேட்டரி ஆயுளை வழங்குகிறது.

Sony LinkBuds TWS இயர்பட்ஸின் விலை:

Sony LinkBuds TWS இயர்பட்களின் விலை $179.99 (தோராயமாக ரூ.13,500) ஆகும். சோனி வயர்லெஸ் இயர்பட்கள் அமெரிக்காவில் உள்ள அதிகாரப்பூர்வ இணையதளம், அமேசான், பெஸ்ட் பை மற்றும் பிற அங்கீகரிக்கப்பட்ட விற்பனை நிறுவனங்கள் மூலம் வாங்க கிடைக்கின்றன. இவை கிரே மற்றும் வொயிட் கலர் ஆப்ஷன்களில் கிடைக்கின்றன. இந்தியாவில் Sony LinkBuds விலை மற்றும் கிடைக்கும் விவரங்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக