Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

சனி, 19 பிப்ரவரி, 2022

ட்விட்டரின் டிப்ஸ் அம்சத்துடன் இணைந்த பேடிஎம்: என்ன பயன்? யாருக்கு எல்லாம் லாபம்?

 Twitter's redesign includes new font, less visual clutter - CNET
மைக்ரோ-பிளாக்கிங் பிளாட்பார்ம் ஆன ட்விட்டர், கடந்த ஆண்டு அதன் 'டிப்ஸ்' அம்சத்தை அறிமுகம் செய்தது. தற்போது இந்த அம்சம் பேடிஎம் பேமண்ட்ஸ் வழியாகவும் அணுக கிடைக்கும் என்பதை ட்விட்டர் இந்தியா உறுதிப்படுத்தி உள்ளது. ட்விட்டரின் 'டிப்ஸ்' அம்சமானது, வெப்சைட்டில் உள்ள யூசர்கள் தங்களை ஃபாலோ செய்வபவர்களிடம் இருந்து ஃபன்ட் (Fund) அல்லது ‘டிப்ஸ்’ (Tips) பெற அனுமதிக்கும் ஓரு அம்சம் ஆகும்.

முன்னரே குறிப்பிட்டபடி இந்த அம்சம் கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்டது; இது தனது பிளாட்பார்மில் மானிடைசேஷனை அறிமுகப்படுத்துவதற்கான ட்விட்டர் நிறுவனத்தின் பல முயற்சிகளில் ஒன்றாகும். நினைவூட்டும் வண்ணம், ட்விட்டர் நிறுவனம் 'டிப்ஸ்' அனுப்புவதற்கான மற்றொரு இந்திய ஆன்லைன் பேமெண்ட் தளமாக ரேஸர்பேவை (Razorpay) சமீபத்தில் தேர்வு செய்து இருந்தது. இந்த அம்சத்தின் வழியாக, தான் விரும்பும் கிரியேட்டரின் அக்கவுண்ட்டிற்கு 'டிப்ஸ்' கொடுக்க விரும்பும் யூசர்கள், ஃபன்ட் அனுப்ப குறிப்பிட்ட ஆப்பிற்கு அழைத்துச் செல்லப்படுவார்கள். ட்விட்டரில் பேடிஎம் ஆப்பை ஒரு 'பேமண்ட் சோர்ஸ்' ஆக சேர்ப்பதற்கான விருப்பம் ஏற்கனவே ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் ஆகிய இரண்டிலுமே வெளியிடப்பட்டுள்ளது.

நேற்று (பிப்ரவரி 16, 2022), டிப்ஸ் அனுப்புவதற்கான ஆதரவு, பேடிஎம் பேமண்ட்ஸிற்கு வழங்கப்பட்டுள்ளதாக ட்விட்டர் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. டிப்ஸ் அம்சம் எனேபிள் செய்யப்பட்ட எந்த அக்கவுண்ட்டிலும், யூசர்கள் டிப்ஸ் ஐகான்-ஐ கிளிக் செய்யலாம். பிறகு பேடிஎம்-ஐ தேர்ந்தெடுக்க, அவர்கள் பணபரிமாற்றத்தை முடிக்க பேடிஎம் பேமண்ட்ஸ் ஆப்பிற்கு அழைத்து வரப்படுவார்கள்.

இப்படியாக யூசர்களுக்கு கிடைக்கும் வருவாயில் எந்த விதமான கட்டணத்தையும் நிறுவனம் எடுக்காது என்று ட்விட்டர் தெரிவித்து உள்ளது. பேடிஎம் ஆப்பை ஒரு 'பேமண்ட் மெத்தேட்' ஆக சேர்ப்பதன் மூலம், யூசர்கள் யுபிஐ, கிரெடிட் கார்டு அல்லது டெபிட் கார்டுகள் மற்றும் நெட் பேங்கிங் ஆகியவற்றைப் பயன்படுத்தி பணம் செலுத்த முடியும். ட்விட்டர் டிப்ஸ் அம்சத்தின் கீழான பேடிஎம் ஆப்பின் சேர்க்கையானது ரேஸர்பே (Razorpay), பேட்ரியான் (Patreon) மற்றும் பிட்காயின் (Bitcoin) அல்லது எத்தேரியம் (Ethereum) போன்ற வேலட்களின் விருப்பங்களுக்கு கூடுதலாக வருகிறது.

ட்விட்டர் டிப்ஸ் அம்சத்தை எனேபிள் செய்வது எப்படி? என்கிற எளிமையான வழிமுறைகள் இதோ:

- உங்கள் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் அல்லது ஆப்பிள் ஐபோனில் உள்ள ட்விட்டர் ஆப்பை திறக்கவும்

- உங்கள் ப்ரொஃபைலுக்குச் செல்லவும். பிறகு எடிட் ப்ரொஃபைல் என்கிற விருப்பத்தை கிளிக் செய்யவும்.

- இப்போது டிப்ஸ் என்கிற விருப்பத்தை தேர்வு செய்து பிறகு 'அலோ டிப்ஸ்' (Allow Tips) என்பதைத் தேர்ந்தெடுக்கவும்

- இந்த செட்-அப்பை முடிக்க, பேமண்ட் பிளாட்பார்ம்-ஐ தேர்வு செய்யவும், அவ்வளவு தான்!

ட்விட்டரின் இந்த டிப்ஸ் சேவை கடந்த 2021 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது, முன்னதாக இந்நிறுவனம் மே 2021 முதல் தேர்ந்தெடுக்கப்பட்ட சில பத்திரிகையாளர்கள் மற்றும் கிரியேட்டர்களுக்கு டிப்ஸ் அம்சத்தை வழங்கி, அதை சோதித்த பிறகு நவம்பர் மாத வாக்கில் பொது தளத்திற்கு வெளியிட்டது. ட்விட்டரின் இந்த டிப்ஸ் அம்சம் தமிழ், இந்தி, பெங்காலி, குஜராத்தி, கன்னடம் மற்றும் மராத்தி உள்ளிட்ட பல மொழிகளில் கிடைக்கிறது. குறிப்பிடத்தக்க வண்ணம், இது 18 வயதுக்கு மேற்பட்ட பயனர்களுக்கு மட்டுமே அணுக கிடைக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக