Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

சனி, 19 பிப்ரவரி, 2022

விமானத்தில் போகும்போது ஆப்பிள் சாப்பிட கூடாது... ஏன் தெரியுமா? இவ்ளோ நாளா நல்லதுனு நெனச்சுட்டு இருந்தோமே!

விமானத்தில் போகும்போது ஆப்பிள் சாப்பிட கூடாது... ஏன் தெரியுமா? இவ்ளோ நாளா நல்லதுனு நெனச்சுட்டு இருந்தோமே!

விமானத்தில் ஏறுவதற்கு முன்பு தவிர்க்க வேண்டிய உணவுகள் குறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

விமானங்களில் பயணம் செய்வதற்கு முன்பாக எதையாவது சாப்பிடலாம் என்ற உணர்வு நம்மில் அனைவருக்கும் ஏற்படும். இது இயற்கையாக ஏற்படும் ஒரு உணர்வுதான். ஆனால் விமானங்களில் ஏறுவதற்கு முன்பாக ஒரு சில உணவுகளை நிச்சயமாக சாப்பிட கூடாது. அந்த உணவுகளை தவிர்த்து விடுவது பயணம் சிறப்பாக இருப்பதற்கு உதவி செய்யும்.

ஆனால் எந்தெந்த உணவுகளை தவிர்க்க வேண்டும்? என்பது தெரியாமல் கண்டதையும் சாப்பிட்டு விடும் பழக்கம் நிறைய பேருக்கு உள்ளது. உடலுக்கு மிகவும் நல்லது என்று நினைத்து சாப்பிடும் சில உணவுகள் கூட விமான பயணத்தின்போது பிரச்னைகளை ஏற்படுத்தி விடும் என்பது பலருக்கும் தெரிவதில்லை. எனவே விமானத்தில் ஏறுவதற்கு முன்பு தவிர்க்க வேண்டிய உணவுகளை இந்த செய்தியில் வழங்கியுள்ளோம்.

விமானத்தில் போகும்போது ஆப்பிள் சாப்பிட கூடாது... ஏன் தெரியுமா? இவ்ளோ நாளா நல்லதுனு நெனச்சுட்டு இருந்தோமே!

ஆப்பிள்!

ஆப்பிள் உண்மையிலேயே ஆரோக்கியமான ஒரு பழம்தான். ஆனால் விமானத்தில் ஏறுவதற்கு முன்பு அதனை சாப்பிடுவது நல்லதல்ல. சத்தானது என்பதால், விமானத்தில் ஏறுவதற்கு முன்பு பலரும் ஆப்பிளை சாப்பிட்டு விடுகின்றனர். ஆனால் விமான பயணத்தின்போது ஆப்பிள் செரிமானம் ஆவது கடினம். இதன் காரணமாக நீண்ட நேர அசௌகரியம் ஏற்படலாம்.

அத்துடன் வாயு தொல்லையும் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. இந்த வாயு காரணமாக உங்கள் வயிறு முழுமையாக இருப்பது போன்றும், இறுக்கமாக இருப்பது போன்ற உணர்வும் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். எனவே விமானத்தில் ஏறுவதற்கு முன்பு, நல்லது என நினைத்து ஆப்பிளை சாப்பிட்டு விடாதீர்கள்.

விமானத்தில் போகும்போது ஆப்பிள் சாப்பிட கூடாது... ஏன் தெரியுமா? இவ்ளோ நாளா நல்லதுனு நெனச்சுட்டு இருந்தோமே!

பீன்ஸ்!

உங்கள் வயிற்றில் அதிகப்படியான வாயுவை உருவாக்கும் எந்தவொரு உணவையும், விமானத்தில் ஏறுவதற்கு முன்பு தவிர்ப்பது நல்லது. இந்த வகையில் தவிர்க்க வேண்டிய உணவு வகைகளில் பீன்ஸ் முக்கியமானது. ஏனெனில் இது வாயுவை உருவாக்கும். இது உங்களுக்கு மட்டுமல்லாது, உங்களுக்கு அருகில் அமர்ந்திருப்பவருக்கும் அசௌகரியத்தை ஏற்படுத்தும்.

இந்த வாயு உங்களுக்கு எத்தகைய தர்ம சங்கடத்தை ஏற்படுத்தும் என்பது சொல்லி தெரிய வேண்டியதில்லை. இந்த தர்ம சங்கடத்துடன், விமானம் பயணம் முழுவதும் வயிறு உப்பிய நிலையிலேயே நீங்கள் பயணிக்க வேண்டியதிருக்கும். எனவே விமானத்தில் ஏறுவதற்கு முன்பு ஆப்பிளை போன்று பீன்ஸ் சாப்பிடுவதையும் தவிர்த்து விடுங்கள்.

விமானத்தில் போகும்போது ஆப்பிள் சாப்பிட கூடாது... ஏன் தெரியுமா? இவ்ளோ நாளா நல்லதுனு நெனச்சுட்டு இருந்தோமே!

வறுத்த உணவுகள்!

வறுத்த உணவுகளை தற்போது அனைவருமே விரும்புகின்றனர். இதற்கு 'நோ' சொல்வது கடினம்தான். ஆனால் விமானத்தில் ஏறுவதற்கு முன்பு வறுத்த உணவுகளுக்கு 'நோ' சொல்வதுதான் நல்லது. ஏனெனில் வறுத்த உணவுகள் நெஞ்சு எரிச்சலை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. இந்த உணவுகள் நன்றாக வறுக்கப்படுவதால் அதிகமான எண்ணெய்யை கொண்டிருக்கும்.

அத்துடன் சோடியமும் அதிகளவில் இருக்கலாம். இது விமான பயணத்தின்போது உங்களுக்கு பிரச்னைகளை ஏற்படுத்தும். வயிறு உப்புசம் போன்ற பல்வேறு பிரச்னைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. எனவே சுவைக்கு அடிமையாகி வறுத்த உணவுகளை அதிகளவில் சாப்பிடுவதை தவிர்த்து விடுவது உங்கள் பயணம் சிறக்க உதவி செய்யும்.

விமானத்தில் போகும்போது ஆப்பிள் சாப்பிட கூடாது... ஏன் தெரியுமா? இவ்ளோ நாளா நல்லதுனு நெனச்சுட்டு இருந்தோமே!

காபி!

விமானத்தில் ஏறுவதற்கு முன்பு ஒரு கப் காபி குடித்து விட்டு செல்லும் பழக்கம் பலருக்கும் இருக்கிறது. விமான பயணம் ஏற்கனவே உங்கள் உடலில் உள்ள நீர் சத்தை வற்ற செய்கிறது. ஆம், விமான பயணங்களின்போது நீரிழப்பு பிரச்னை ஏற்படும். இப்படிப்பட்ட ஒரு சூழலில், நீரிழப்பு தன்மையை அதிகம் கொண்ட காபியை குடிப்பது சிறந்ததாக இருக்காது.

இதன் காரணமாக உங்களுக்கு தலைவலி ஏற்படலாம். அல்லது குமட்டல் போன்ற உணர்வு ஏற்படலாம். எனவே காபி பிரியர்கள் அனைவரும் விமானத்தில் ஏறுவதற்கு முன்பாக தங்களது வாயை கட்டி வைத்து கொள்வது நல்லது. இதன் மூலம் தலைவலி, குமட்டல் போன்ற அசௌகரியங்கள் இல்லாமல், பயணத்தை சிறப்பாக நிறைவு செய்யலாம்.

விமானத்தில் போகும்போது ஆப்பிள் சாப்பிட கூடாது... ஏன் தெரியுமா? இவ்ளோ நாளா நல்லதுனு நெனச்சுட்டு இருந்தோமே!

சுவிங்கம்!

சுவிங்கம் மெல்லும்போது உங்கள் உடலுக்குள் அதிகப்படியான காற்று செல்வதற்கு நீங்கள் அனுமதிக்கிறீர்கள். இதன் காரணமாக வாயு சம்பந்தப்பட்ட பிரச்னைகள் ஏற்படலாம். மேலும் சர்க்கரையும், செயற்கை சுவையூட்டிகளும் கூட வாய்வு பிரச்னைக்கு காரணமாகலாம். எனவே சுவிங்கம் மெல்வதை தவிர்த்து விடுவதும் சிறந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக